For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பெற்றுக் கொள்வதை நினைத்தாலே பயப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய் இருக்கு!

கர்ப்பம் பற்றி நினைத்தாலே பயமா

By Lakshmi
|

ஒவ்வொரு பெண்ணுக்கும், தாயாவது பற்றிய கனவு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அந்த அற்புத அனுபவத்திற்காகக் காத்திருக்கிறார் என்பது உண்மைதான். இருப்பினும், சில பெண்களுக்கு கர்ப்பமடைவது பற்றியும் குழந்தை பிறப்பு பற்றியும் பயம் இருக்கலாம், இதுபோன்ற எண்ணங்கள் வருவதும் சாதாரணம் தான்.

பெண்களுக்கு சில குழந்தை பிறப்பு, கர்ப்ப காலங்கள் பற்றிய பயங்கள் பிறர் தனது கர்ப்ப காலத்தில் உண்டான எதிர்மறையான விஷயங்கள், பிரசவத்தின் போது உண்டாகும் வலி போன்றவற்றை சொல்லி கேட்பதாலும், இப்போது எல்லாம் இளம் தலைமுறையினர் குழந்தை பிறப்பு என்றால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பல வீடியோக்களை தேடி சென்று பார்க்கிறார்கள். இதனாலும் பயம் உண்டாகிறது. மேலும், திரைப்படங்களில் அதிகமாக காட்டும் பிரசவ வலிகளை பார்க்கும் போதும் பெண்களுக்கு கர்ப்பம், குழந்தை பெறுதல் குறித்த பயம் உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் பயம்?

ஏன் பயம்?

ஒரு சிலருக்கு குழந்தைப் பெற்றுக்கொள்வது குறித்து குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். உதாரணமாக பிரசவ வலி, ஊசி, இரத்தம் போன்றவை பற்றி நினைத்து அதிகம் பயப்படுவார்கள். இன்னும் சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே சில அச்சங்கள் இருக்கும், உதாரணமாக மருத்துவமனை பற்றி பயம், தன்னை பிறர் நிர்வாணமாகப் பார்ப்பார்களே என்கிற பயம், தனக்கோ, குழந்தைக்கோ காயம் பட்டுவிடுமோ அல்லது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் இருக்கும்.

டோக்கோஃபோபியா

டோக்கோஃபோபியா

இது போன்ற எண்ணங்கள் தொடர்ந்து இருந்தால் அது பெண்ணின் மனதை அலைக்கழித்து மனக்கலக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும். எனினும் சில பெண்கள், அவர்களின் குடும்பம் அல்லது நண்பர்களின் ஆதரவின் துணைகொண்டு இந்த பயத்தை வென்றுவிடுகிறார்கள். இது போன்ற ஆதரவு கிடைக்காதவர்கள் அல்லது இத்தகைய அச்சங்களைச் சமாளிக்க முடியாதவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளவோ கர்ப்பத்தைத் தள்ளிப்போடவோ சில சமயம் முற்றிலும் தவிர்க்கவோ முடிவெடுப்பதும் நடக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி ஏற்படும் இந்தப் பயத்தை "டோக்கோஃபோபியா" என்கிறோம். "டோக்கோ" என்றால் குழந்தைப் பிறப்பு, "ஃபோபியா" என்றால் பயம்.

உளவியல்

உளவியல்

மனக்கலக்கம், மன அழுத்தம் மற்றும் (தாக்கத்திற்கு) நிகழ்வுக்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தக் கோளாறுகளுடன் கூடிய மன அழுத்தம் சார்ந்த உளவியல் நோய்.

முதல் நிலை டோக்கோஃபோபியா (Primary tokophobia):

முதல் நிலை டோக்கோஃபோபியா (Primary tokophobia):

  1. இதற்கு முன்பு கர்ப்பமடைந்த அனுபவம் இல்லாத பெண்களுக்கு, குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி ஏற்படும் பயம்.
  2. பெண்கள் பிரசவம் குறித்த தங்கள் பயத்தைப் பற்றிக் கூறிக் கவலைப்படுவார்கள்.
  3. வளரும் பருவத்தில் அல்லது குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தப் பயம் உருவாகத் தொடங்கியிருக்கலாம்.
இரண்டாம் நிலை டோக்கோஃபோபியா (Secondary tokophobia):

இரண்டாம் நிலை டோக்கோஃபோபியா (Secondary tokophobia):

  1. முந்தைய கர்ப்பத்தின்போது அதிக வலி அல்லது சிரமத்தை எதிர்கொண்ட பெண்களுக்கு இந்த வகை டோக்கோஃபோபியா காணப்படலாம்.
  2. பொதுவாக கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், குழந்தை இறந்து பிறந்தால் அல்லது கருக்கலைப்பு செய்திருந்தால் இந்த வகை டோக்கோஃபோபியா வரலாம்.
டோக்கோஃபோபியாவின் விளைவுகள் (Effects of tokophobia):

டோக்கோஃபோபியாவின் விளைவுகள் (Effects of tokophobia):

  1. டோக்கோஃபோபியாவால் பெண்களின் உணர்வுரீதியான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
  2. கர்ப்பத்தைத் தொடரலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்திலேயே அவர் இருக்கலாம்.
  3. கர்ப்பமே வேண்டாம், அதற்குப் பதில் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் முடிவு செய்யலாம்.
  4. அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கலாம்.
ஆலோசனைகள்

ஆலோசனைகள்

கர்ப்பம் குறித்த பயம் என்பது தேவையில்லாத ஒன்று.. பெண்கள் நினைத்தால் எதையும் வென்று விட முடியும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் கர்ப்பம் குறித்த பயத்தை போக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி காணலாம்.

பயத்தை வெளிப்படுத்தவும்

பயத்தை வெளிப்படுத்தவும்

டோக்கோஃபோபியாவிற்கு சிகிச்சையளிக்க முடியும். ஆகவே, முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் உங்கள் பயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பேசுங்கள்

பேசுங்கள்

உங்கள் சுகாதார சேவையாளரிடம் உங்கள் பயம் பற்றிப் பேசுங்கள், அப்போது கர்ப்பமாக இருக்கும் காலகட்டம் முழுதும், உங்கள் பிரசவத்தின்போதும் உங்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

ஒரு முறை குழந்தைப் பிறப்பில் துரதிருஷ்டவசமான அனுபவம் பெற்ற ஒரு பெண்ணுக்கு, அடுத்த கர்ப்பத்தின் போது டோக்கோஃபோபியா ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. என்ன தவறாகிப் போனது, ஏன் தவறாகிப் போனது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் உங்கள் எதிர்மறை எண்ணங்களையும் அந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தின் மோசமான நினைவுகளையும் குறைக்க உதவும்.

பயிற்சிகள்

பயிற்சிகள்

ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளைச் செய்யுங்கள், ஆழ்ந்து சுவாசிக்கும் பயிற்சிகளைச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மனதை நன்றாக ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

உலவியல்

உலவியல்

மனக் கலக்கத்தை எப்படி நிர்வகிப்பது என்று அறிந்துகொள்ள ஓர் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறவும். இதனை பற்றி எல்லாம் பேசுவதில் சங்கடமோ அல்லது பயமோ வேண்டாம். உங்களது சூழ்நிலை நிச்சயமாக மருத்துவருக்கு புரியும் என்பதால் வெளிப்படையாக பேசுங்கள்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி

கர்ப்பம் சம்பந்தப்பட்ட மனதைப் பாதிக்கக்கூடிய (எமர்ஜென்சி) காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதைத் தவிர்க்கவும். மேலும் எந்த விஷயங்கள் எல்லாம் உங்களது மனதில் பயத்தை உண்டாக்குகிறதோ அந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்து விடுங்கள்.

நீங்களே தீர்வு

நீங்களே தீர்வு

டோக்கோஃபோபியாவிற்கு சிகிச்சையளிக்க முடியும், அதற்குத் தீர்வுள்ளது. உங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க, நீங்கள் தான் முதல் படியெடுத்து செயல்பட வேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

avoid these things during pregnancy to overcome pregnancy time fear

avoid these things during pregnancy to overcome pregnancy time fear
Story first published: Saturday, November 18, 2017, 11:12 [IST]
Desktop Bottom Promotion