Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பமாவதற்கு முன் அவசியம் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்!!!
ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது மிக அபாரமான அனுபவமாகும். தாயாக போகும் உணர்வை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. குழந்தையின் பிஞ்சுக் கைகளை பிடிப்பது, முதன் முதலில் அதன் கண்களை திறப்பது போன்ற சில விலை மதிப்பில்லா தருணங்களை அனுபவித்திட ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். கர்ப்ப பயணத்தில் ஒன்பதாம் மாதத்தில் மன ரீதியான தயார்நிலையும் நல்ல உடல்நிலையும், அதாவது நேர்மறை சூழ்நிலையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் தேவைப்படும்.
எந்த ஒரு சிக்கல்களும் இன்றி பல தம்பதிகள் பெற்றோர் நிலையை கொண்டாடினாலும், பல தம்பதிகள் இந்த நேரத்தில் பல சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கைமுறை, உடல் பருமன் அல்லது மரபு ரீதியான கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளது. நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தால், வருங்காலத்தில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படவுள்ள சிக்கல்களை தவிர்க்க, உங்கள் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அதனால் கருத்தரிப்பதற்கு முன்பாக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சோதனைகளை பற்றி தெரிந்து கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.
சரி, கர்ப்பமாவதற்கு முன்பாக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? கருத்தரிப்பதற்கு முன்பான சோதனைகள் என்பது உங்கள் உடல் முழுவதும் முழுமையாக எடுக்கப்படும் அடிப்படை சோதனையாகும். கருத்தரிப்பதற்கு முன்பாக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சோதனைகள் ஆறு உள்ளது. அவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தைராய்டு சோதனை
தைராய்டடு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதனை ஹைப்பர் தைராய்டிசம் என அழைப்பார்கள். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். குறைவாக சுரப்பதை தைராய்டு சுரப்பு குறை என கூறுவார்கள். இதனால் பிறக்க போகும் குழந்தைக்கு மூளை கோளாறுகள் ஏற்படலாம். கருத்தரிப்பதற்கு முன்பாக என்ன சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரிடம் கேட்டால், கண்டிப்பாக அந்த பட்டியலில் தைராய்டு சோதனை இடம் பெறும்.

இரத்த சோதனைகள்
கருத்தரிப்பதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முக்கியமான 6 சோதனைகளில் பொதுவாக இரத்த சோதனை முதல் இடத்தை பிடிக்கும். இரத்த சோதனைகள் உங்கள் இரத்த எண்ணிக்கையை முழுமையாகவும் சிஃபிலிஸ், எச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி போன்ற பல்வேறு நோய்களையும் சோதிக்க உதவும். இரத்த சோகை மற்றும் ஃபைப்ரோஸிஸ் கட்டி போன்ற மரபு ரீதியான நோய்களை சோதிக்கவும் இது உதவும்.

சிறுநீர் சோதனைகள்
இரத்தத்தில் அதிக சர்க்கரை, அதிக புரதம் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று போன்ற பாக்டீரிய தொற்றுக்கள் இல்லை என்பதை உறுதி செய்ய சிறுநீர் சோதனைகள் எடுக்கப்படும். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், கருத்தரிப்பதற்கு முன்பாக சிகிச்சைக்கு நீங்கள் உடனடியாக நீரிழிவு நோய் மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கப்படுவீர்கள். சிறுநீர் பாதையில் தொற்று என்றால் அளவுக்கு அதிகமாக நீராகாரம் மற்றும் ஆன்டி-பையாடிக்ஸை குடிக்கவும்.

உயிரணு ஓட்ட சோதனைகள்
பெண்ணுறுப்பு, கருப்பை வாய் மற்றும் இடுப்பு பகுதிகளில் உயிரணு ஓட்ட சோதனைகள் மற்றும் முழுமையான உடல் பரிசோதனைகள் எடுக்க பொதுவாகவே பரிந்துரைக்கப்படும். கருத்தரிப்பதற்கு முன்பு இந்த சோதனைகளை மேற்கொண்டால் கர்ப்ப காலத்தில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். உங்கள் பெண்ணுறுப்பு அல்லது கருப்பை வாயில் ஏதேனும் பூஞ்சை தொற்றுக்கள் அல்லது செல்லுலார் குறைபாடுகள் இருந்தால், உயிரணு ஓட்டல் சோதனைக அவற்றை வெளிப்படுத்தும்.

தடுப்பூசிகள்
ருபெல்லா போன்ற தடுக்க முடிகிற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் மூலமாக, பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவுகள் போன்றவற்றை தவிர்க்கலாம். அதனால் கருத்தரிப்பதற்கு முன்பாக மருத்துவரின் அறிவுறுரையின் படி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

விந்தணு பகுப்பாய்வு
ஆண்களுக்கான கருவுறுதல் சோதனை என்பதும் சமமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்பாக விந்து எண்ணிக்கை, விந்து இயக்கம், விந்து தரம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். மதுபானம் குடிப்பது, புகைப்பிடிப்பது அல்லது மரபு ரீதியான பிரச்சனை போன்ற மோசமான வாழ்க்கை முறையை கொண்ட ஆண்களுக்கு இந்த சோதனைகள் மிகவும் முக்கியமாகும்.



Click it and Unblock the Notifications