For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்...

By Maha
|

Safety Basics For Would Be Parents
பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் தான் பிரசவத்திற்கு முன். ஏனெனில் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் அலட்சியமாக இல்லாமல், எந்த நேரமும் கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு கர்ப்பிணிகளுக்கு என்று ஒருசில அடிப்படை விதிகளும் உள்ளன. இப்போது அந்த அடிப்படை கவனம் என்னவென்று பார்ப்போமா!!!

* கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது, வீட்டில் உள்ள தரைகள் எப்போதும் ஈரமின்றி இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், எந்த நேரத்திலும் வழுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வீட்டில் இருப்பவர்கள், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

* கர்ப்பத்தின் போது எந்த ஒரு சூடான பானத்தையோ, உணவையோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவை தடுமாறி உடல் மேலே விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டால், அது பிரசவத்தின் போது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

* கர்ப்பிணிகளுக்கு ஒருசிலவற்றை செய்யும் போது சற்று கஷ்டமாக இருக்கும். உதாரணமாக, உயமான கட்டிலில் படுத்து எழுந்திருக்கும் போது, உட்கார்ந்து எழுந்திருக்கும் போது என்று கஷ்டம் ஏற்படும். இதனால் பெல்லியில் சிறிது அழுத்தம் ஏற்பட்டு, சிலசமயங்களில் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது வழுக்கிவிடும் நிலை ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் எது சுலபமாக உள்ளதோ, அதைப் பின்பற்ற அல்லது பயன்படுத்த வேண்டும்.

* கர்ப்பிணிகள் அணியும் உடை சற்று உடலுக்கு ஏற்றவாறு அணிய வேண்டும். அதாவது உடை மிகவும் டைட்டாகவோ அல்லது நீளமாகவோ இருக்க கூடாது. இல்லையெனில் தடுக்கி விழும் நிலையோ, டைட்டாக அணிவதால், வயிற்றிற்கு அழுத்தமோ ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* வேலை செய்யும் போது கடினமான வேலையை செய்ய வேண்டாம். சிறு வேலைகளை மட்டும் செய்தால் போதுமானது. அதற்காக வேலை செய்யாமலும் இருக்க கூடாது.

* கர்ப்பத்தின் போது பெண்கள் ஓடவோ, குதிக்கவோ கூடாது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காகத் தான், நிறைய மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். ஆகவே பயணத்தை தவிர்க்க வேண்டும்.

* அனைத்து பெண்களுக்கும் சாதாரணமாக இருக்கும் போது நாவில் இருக்கும் சுவை, கர்ப்பத்தின் போது வேறுபடும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஆகவே இந்த நேரத்தில் சற்று உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டால், தாய்க்கும் சேய்க்கும் நலம்.

ஆகவே கர்ப்பிணிகளே! மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து செயல்பட்டு, அழகான குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுங்கள்.

English summary

Safety Basics For Would Be Parents | கர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்...

There are some safety basics that you have to take care of while you are pregnant. This is very important as you need to be very careful that any unforeseen circumstance does not befall you just because of your sheer negligence. Hit on this checklist and find out what are the basic safety rules that you need to follow if you are the new would be parents.
Desktop Bottom Promotion