For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போடுறீங்கனு தெரியுமா? பயன்கள் என்ன?

தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அம்மை போன்ற நோய்கள் வரமால் தடுக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. தடுப்பூசிகளை பற்றிய தவறான கருத்துக்களால் மக்களுக்கு அதன் மீதான பயம் அதிகரித்து விட்டது.

|

குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பது மிக முக்கிய ஒன்றாகும். பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அச்சத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள நன்மைகளை பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தற்போதைய காலத்தில் 80 முதல் 90 சதவீதம் குழந்தைகள் தடுப்பூசிகளை பெறுவதற்கு பெற்றோர்கள் தயாராக உள்ளனர்.ஆனால் ஒரு சில வளர்ந்து வரும் பெற்றோர்கள் கூட தடுப்பூசிகளின் ஆபத்தை உணர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. ஆனால் தற்போது தடுப்பூசிகளில் எந்தவித அபாயமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் பெற்றோர்கள் தடுப்பூசி போட முன் வருவதில்லை.

Why Childhood Vaccines Aren’t Really Dangerous

தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அம்மை போன்ற நோய்கள் வரமால் தடுக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. தடுப்பூசிகளை பற்றிய தவறான கருத்துக்களால் மக்களுக்கு அதன் மீதான பயம் அதிகரித்துவிட்டது. தட்டம்மை-மம்ப்ஸ்-ரூபெல்லா (எம்.எம்.ஆர்) தடுப்பூசியானது மன இறுக்கத்தை அதாவது ஆட்டிசம் நோயை ஏற்படுத்தக்கூடும் என்ற தவறான கருத்து பரவியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆபத்துகள்

ஆபத்துகள்

எல்லா தடுப்பூசிகளும் ஒரு சில பக்க விளைவுகளை கொண்டு இருக்கும். அந்த ஆபத்துகளை தெரிந்து அதை எதிர்கொள்ள மக்கள் முன்வரவில்லை. அதாவது தடுப்பூசிகள் போட்ட உடன் சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை வருவது, காய்ச்சல், மற்றும் காயங்கள் போன்றவை ஏற்படுவது சாதாரண ஒன்று தான். சில ஆபத்தான நோய்களை ஒப்பிடும் போது இந்த விளைவுகள் ஒன்றும் பெரிதாக குழந்தைகளை பாதிக்காது.

MOST READ: குழந்தைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ பாதுகாப்பானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

அதிக தடுப்பூசிகள்

அதிக தடுப்பூசிகள்

குழந்தைகள் பிறந்த உடன் இவ்ளோ தடுப்பூசிகள் போடுவது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தடுப்பூசிகளும் வெவ்வேறு வகை நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசிகள் பல வகை நோய்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கிறது. எத்தனை தடுப்பூசிகள் போடுகின்றனர் என்பது முக்கியமில்லை, இந்த தடுப்பூசிகள் பாக்டீரியா மற்றும் கிருமிகளிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்து எதிர்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு மண்டலம்

நோய் எதிர்ப்பு மண்டலம்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது எனவே சற்று தாமதமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் அல்லது முக்கியமான தடுப்பூசிகள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்று சில பெற்றோர்கள் கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறைந்தது 3 மாத காலத்திற்குள் போடப்படமால் விட்டால் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நச்சுகள்

நச்சுகள்

தடுப்பூசிகளில் தண்ணீர் மற்றும் ஆன்டிஜென்கள் தான் இருக்கும். தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க அதில் கூடுதல் பொருட்கள் தேவைப்படுகின்றன.

பாதரசம்

பாதரசம்

பெற்றோர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகளில் உள்ள பாதரசத்தால் தடுப்பூசி குழந்தைகளுக்கு போட அஞ்சுகிறார்கள். ஆனால் பாதரசத்தில் உள்ள எத்தில் மெர்குரி உடலுடன் இணைவது இல்லை. எனவே இதை பற்றிய கவலை கொள்ளத் தேவையில்லை.

அலுமினியம்

அலுமினியம்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகளுடன் சற்று அலுமினியம் சேர்க்கப்படுகிறது. ஆனால் அலுமினியம் சேர்ப்பதால் தோல் சிவத்தல், வீக்கம், மற்றும் சிறிது இரத்தம் ஏற்பட செய்யும். இது குழந்தைகளுக்கு எந்தவித பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

MOST READ: குழந்தைகளுக்கு கடலை கொடுக்கலாமா? கூடாதா? கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்

ஃபார்மால்டிஹைடு

ஃபார்மால்டிஹைடு

உடல் உறுப்புகள் நன்றாக வேலை செய்வதற்காக ஃபார்மால்டிஹைடு தடுப்பூசிகளில் சேர்க்கின்றனர். நமது உடல் தடுப்பூசிகளில் உள்ள அளவை விட சற்று அதிகமாகவே ஃபார்மால்டிஹைடு சுரக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

ஆண்டிஃபிரீஸ்

ஆண்டிஃபிரீஸ்

ஆண்டிஃபிரீஸ் இவை தடுப்பூசிகளில் இல்லை. எனவே பெற்றோர்கள் இவற்றின் மருத்துவ பெயர்கள் எத்திலீன் கிளைகோல் மற்றும் புரோப்பிலீன் கிளைகோல் மூலம் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தடுப்பூசி பயன்கள்

தடுப்பூசி பயன்கள்

தடுப்பூசிகள் உண்மையில் வேலை செய்யாது என்று சில பெற்றோர்கள் குறிக்க கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது இல்லை. ஆனால் நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும் உங்கள் குழந்தைகள் எத்தனை முறை அந்த ஆண்டு பாக்டீரியாக்கள் மற்றும் நோய்களினால் பாதிக்கப் பட்டார்கள் என்று அறிவீர்கள்.

தடுப்பூசி புண்கள்

தடுப்பூசி புண்கள்

தடுப்பூசி போடும் போது புண்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இவை விரைவில் ஆறிவிடும். இந்த புண்கள் ஒன்றும் மிக ஆபத்தானவை இல்லை. அப்படி இந்த புண்களினால் ஆபத்து என்றால் நீதிமன்றங்கள் இந்த தடுப்பூசி முறையை முன்பே அகற்றி இருப்பார்கள்.

தடுப்பூசி கட்டாயம்

தடுப்பூசி கட்டாயம்

தடுப்பூசி என்பது கட்டாயமாக்கப்பட ஒன்றாகும். இது உங்கள் குழந்தைகளை பள்ளி அல்லது குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் விடும் போது அவர்களுக்கு நீங்கள் சிறு வயதில் தடுப்பூசி போடாதது குழந்தைகளுக்கு மற்ற சிறுவர்களிடம் இருந்து வியாதிகள் விரைவில் பரவ வாய்ப்புள்ளது. அதாவது அம்மை போன்ற வியாதிகள் விரைவில் குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.

MOST READ: உங்கள் குழந்தையின் அன்பை நீங்கள் பெற வேண்டுமா?

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

நீங்கள் தடுப்பூசியால் விளையும் சில பக்க விளைவுகளால் தடுப்பூசி போடாமல் விட்டு விடுகிறர்கள். ஆனால் தடுப்பூசி போடாததால் பின்னர் விளையும் நோய்கள் மிகவும் மோசமானதாக இருக்கும். எனவே அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போட வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Childhood Vaccines Aren’t Really Dangerous

Many parents worry about the perceived dangers of vaccines, but they often just misunderstand the facts. We’ve broken down common concerns about childhood vaccinations so you can rest easier before pediatrician appointments.
Story first published: Monday, August 19, 2019, 18:03 [IST]
Desktop Bottom Promotion