குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சை கொடுக்கலாமா? கூடாதா? எப்போது கொடுக்கலாம்?

உலர்ந்த திராட்சை என்பது பலருக்குப் பிடித்த ஒன்றாகவும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இதில் தாதுகள், வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. உலர்ந்த திராட்சைகளை குழந்தைகளுக்க

உலர்ந்த திராட்சை என்பது பலருக்குப் பிடித்த ஒன்றாகவும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இதில் தாதுகள், வைட்டமின்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. திராட்சைகளை இரண்டு முதல் நான்கு வாரங்கள் நேரடியாகச் சூரியனில் காய வைத்து எடுப்பது தான் உலர்ந்த திராட்சைகளாகும்.

Raisins Consumption for Babies

உலர்ந்த திராட்சைகளை குழந்தைகளுக்குக் கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை மிகவும் சிறிய அளவில் இருப்பதால் குழந்தைகள் அசை போடாமல் விழுங்கி விட்டால் அவர்களின் மூச்சுத் திணறலுக்குக் காரணமாக அமையும் என்று கூறுகின்றனர். எனவே குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சைகளை நேரடியாகக் கொடுக்காமல் அவர்கள் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

உலர்ந்த திராட்சைகளில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. இவற்றைச் சமையல், பேக்கிங் அல்லது சிற்றுண்டிகளாகச் சாப்பிடலாம். உலர்ந்த திராட்சைகள் நிறைந்த சாக்லேட்கள் கடைகளில் விற்கின்றன இது பாதுகாப்பானது அல்ல. இதில் அதிகமாகச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. எனவே உலர்ந்த திராட்சைகளை நேரடியாக அல்லது சமையலில் பயன்படுத்திச் சாப்பிடுவதே சிறந்தது.

உலர்ந்த திராட்சைகளில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன.

இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றன.

இதில் அடங்கியுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.

உலர்ந்த திராட்சையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்த சோகை மற்றும் புற்றுநோயை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சரி செய்யவும் உதவுகின்றன.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

உலர்ந்த திராட்சைகளை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுகள் அடங்கியுள்ளதால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

உலர்ந்த திராட்சைகள் குழந்தையின் நினைவகத்தை மேம்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன.

உலர்ந்த திராட்சையில் உள்ள நார்ச்சத்து ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது உலர்ந்த திராட்சை தண்ணீரைக் கொடுப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரியான வயது

சரியான வயது

குழந்தைகளுக்கு எப்போது உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்கலாம் என்ற கேள்வி எல்லா அம்மாக்களிடமும் இருக்கும். அதாவது குழந்தைகள் பிறந்து 6 முதல் 8 மாதங்களில் திராட்சையைக் கொடுக்க ஆரமிக்கலாம். குழந்தைகள் தானாக உட்காரும் திறனை வளர்த்துக் கொண்ட பிறகும், அவர்களின் கட்டைவிரலுக்கும் கைவிரலுக்கும் இடையில் சிறிய பொருள்களைப் பிடிக்கக் கூடிய வயது வந்த பிறகு உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்கலாம். திராட்சையை அவர்களுக்குச் சாறு, கூழ் அல்லது பிசைந்து கொடுங்கள். குழந்தைகள் வளர்ந்து விட்டால் உலர்ந்த திராட்சைகளைச் சிறிதாக நறுக்கி கொடுங்கள். குழந்தைகள் அவற்றை உண்ணும் போது அருகில் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

சரியான அளவு

சரியான அளவு

ஒரு நாளைக்குக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்கலாம். சற்று குழந்தைகள் வளர்ந்த பிறகு இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு திராட்சைகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் ஒரு வயதினை தாண்டி விட்டார்களானால் 2 முதல் 3 தேக்கரண்டியளவு சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது பிசைந்த உலர் திராட்சைகளைக் கொடுக்கலாம்.

குழந்தையின் உணவு

குழந்தையின் உணவு

குழந்தைக்கு உலர்ந்த திராட்சைகளை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொடுப்பது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சைகளைக் குழந்தைகளின் உணவில் நேரடியாகச் சேர்க்கக் கூடாது. முதலில் அவர்களுக்கு உலர்ந்த திராட்சைகளின் நீரைக் கொடுங்கள். பின்னர் மெதுவாகச் சாறு, கூழ் அல்லது பிசைந்த திராட்சைகளைக் கொடுங்கள். அத்துடன் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்தும் கொடுக்கலாம். இது குழந்தைகளின் செரிமானத்திற்கு உதவும்.

விளைவுகள்

விளைவுகள்

உலர்ந்த திராட்சைகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஒரு போதும் தீங்கு விளைவிக்காது. ஆனால் அவர்களுக்கு அழற்சி சம்பந்தமான பிரச்சனை உள்ளதா என்பதை அறிந்து கொடுங்கள். அத்துடன் குழந்தைகள் அவற்றை நன்றாக மென்று விழுங்க வேண்டும் இல்லையெனில் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். அதே போல் குழந்தைகள் உறங்கச் செல்லும் முன்பு உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்க வேண்டாம் இவை பற்களில் ஒட்டிக் கொண்டு பல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். திராட்சைகளை நன்றாக கழுவி விட்டு குழந்தைகளுக்குக் கொடுங்கள் ஏயெனில் அதில் சில இராசயங்கள் மற்றும் தூசிகள் இருந்தால் அகன்று விடும். இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிற்றுண்டியாகும். எனவே உலர்ந்த திராட்சைகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்து அதன் ஆரோக்கிய நன்மைகளை பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, October 3, 2019, 16:57 [IST]
Desktop Bottom Promotion