Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
பிறந்த குழந்தைகளுக்கு கொசுவிரட்டிகள் பாதுகாப்பானதா ? இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க
பிறந்த குழந்தைகள் இருக்கும் இடங்களில் செயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவது தீங்கானது. இருந்தாலும் கூட சில விரட்டிகள் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிப்பதில்லை அவை கொசு வலை, கொசு பேட், மேலும் கொசுவிரட
வரமாய் வரமிருந்து பத்துமாசம் சுமந்து பெத்தெடுத்த குழந்தை மூச்சுப்பட்டாக் கூட நோகுமென நினைத்து மூச்சையடக்கி முத்தமிடுபவர்கள் தான் நாம். அப்படிப்பட்ட குழந்தையின் மென் சருமத்தை கொசுக்களோ பூச்சிகளோ தீண்டிவிட்டால் என்ன செய்வது? கடிப்பட்ட இடங்கள் சிவந்து கிடப்பதை பார்த்து நொந்து போகாத பெற்றோர்கள் இருந்துவிடவே முடியாது.

உடல்ரீதியாக நம் குழந்தைகள் பாதிக்கப்படுவதை நாம் ஒரு போதும் விரும்பமாட்டோம். அதற்காக விளம்பரங்களைப் பார்த்துவிட்டு கொசு விரட்டிகளை வாங்கி குவித்து விடுகிறோம். அதிலுள்ள கெமிக்கல்கள் நமக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் ஒரு போதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

கொசு விரட்டிகளே வேணாமா?
செயற்கை என்றாலே அதிலே பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் எல்லா வகை கொசுவிரட்டிகளும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எந்த வகையான கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.

கொசுவிரட்டிகள் பாதுகாப்பா?
கொசுவிரட்டிகள் பல்வேறு வகையான விதங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது. சில கொசுவிரட்டிகள் குழ்ந்தைகளின் உடல்நலத்தை பெரிதளவில் பாதிக்கிறது. சில கொசுவிரட்டிகளும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. பல வகையான கொசுவிரட்டிகளில் எது பாதுகாப்பானது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணுங்கள்

#1 கொசுபத்திகள்
சுவாச எரிச்சல்
கொசுபத்திகள் எரிந்து புகையை அறை முழுக்கும் கொண்டு போய் கொசுக்களை வேகமாக விரட்டுகிறது. ஆனால் குழந்தைகளுள்ள வீடுகளில் நிச்சயம் கொசுபத்திகளை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொசுபத்தியில் இருந்து வருகிற புகை சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் ஏற்கனவே சுவாசப்பிரச்சினைகள் இருக்கும் போது அது மோசமான நிலைக்கு கொண்டு போய்ச் சேர்க்கும்.

137 சிகரெட் குடிப்பதற்கு சமம்
கொசுபத்திகள் மூலமாக பரவும் புகைகளில் உயிரை கொள்ளக்கூடிய கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. மேலும் இந்த புகையை உங்கள் குழந்தைகள் உள்ளிழுப்பது 137 சிகரெட் குடிப்பதற்குச் சமமாம்.

#2 லோசன்கள்
பொதுவாக குழந்தையின் மீது பூசப்படுகிற லோசன்களில் டீட், பைகாரிடின், ஐஆர்3535 போன்றவற்றைத் தான் பயன்படுத்துகிறோம். இந்த லோசன்கள் கொசு, பூச்சிகள் ஆகியவற்றில் இருந்து பாதிகாக்குகிறது.

எது சிறந்தது
ஆனால் 30 % க்கும் கீழான டீட் லோசன்களை பயன்படுத்துவது குழந்தைகளின் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது. மேலும் ஐஆர் 3535 லோசன்கள் சிறந்த பலன்களை அழித்தாலும் 3 மணி நேரத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எனவே பைகார்டின் சிறந்ததாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மென்மையான சருமம் கொஞ்சம் பார்த்து
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. எனவே இரண்டுமாதத்திற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அப்படி பயன்படுத்தும் போது சருமப்பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது.

இங்க மட்டும் தான் தடவணும்
குழந்தையின் உடலில் எல்லா இடங்களிலும் கொசு கடிக்கிறது. அதற்காக எல்லா இடங்களிலும் லோசனை தடவி விடலாமா? நிச்சயம் கூடாது. அவர்களின் கண், வாய் போன்றவற்றிற்கு அருகில் லோசனை பயன்படுத்திவிடவேக் கூடாது. மேலும் கைகளிலும் தடவி விடக்கூடாது. ஏனெனில் குழந்தைகள் அதை வாயில் வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

#3 திரவ ஆவியாக்கி அல்லது மேட்
குழந்தைகளின் சருமத்திற்கு ஆபத்து
இவ்வகை கொசு விரட்டிகள் தான் பெரும்பால இல்லங்களில் பயன்படுத்துகிறோம். இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்றுக் கேட்டால் கொசுபத்தியை விட இது பாதுகாப்பானது தான். இருந்த போதிலும் குழந்தைகளின் சருமத்திற்கு இது கேடுகளை விளைவிக்கிறது.

என்ன செய்யலாம்:
குழந்தைகள் அறையில் இல்லாத போது இதைப் பயன்படுத்தி கொசுக்களை விரட்டிட வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகள் அறையில் இருக்கும் போது அணைத்து வைக்க வேண்டும். மேலும் இது குழந்தைகளுக்கு வெகுதூரத்திலும், கதவுகளுக்கு மிக அருகிலும் இருக்க வேண்டும். ஏனெனில் அது கொசு நுழையும் இடம் என்பதால் கொசுக்களை விரட்டியடிப்பது எளிதாக இருக்கும்.

தீர்ப்பு : பெரும்பாலும் பாதுகாப்பானது
இரண்டு மாதத்திற்கு குறைவான குழந்தைகள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தக் கூடாது. மேலும் இது சருமப்பிரச்சினைகளை உருவாக்குகிறது.

#4 கொசுவிரட்டிகள் ஸ்பிரே
கொசுவிரட்டி ஸ்பிரே திரவ ஆவியாக்கிகளை விட வேகமாக செயலாற்றக் கூடியது. ஆனாலும் அதிலிருந்து வெளிவரக்கூடிய வாயுக்களை குழந்தைகள் தொடர்ச்சியாக சுவாசித்தால் கார்பன் மோனாக்ஸைடை உள்ளிழுப்பதற்கு சமமாகிவிடும்.

தீர்ப்பு : பாதுகாப்பானது அல்ல
கொசு மற்றும் பூச்சிகளை விரைந்து விரட்டினாலும் கூட இதிலுள்ள கெமிக்கல்கள் குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கிறது. பெரும்பாலான ஸ்ப்ரேக்களில் வாசனை அதிகமாக வருவதைக் கவனித்திருக்கிறோம் அது குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கிறது.

#5 இயற்கை கொசுவிரட்டிகள்
இயற்கை முறையில் செய்யப்படும் கொசுவிரட்டிகள் குழந்தைகளுக்கு பாதிகாப்பானதா என்று கேட்டால் ஆம், இல்லை என்கிற இருபதில்கள் வரும். ஏனென்றால் குழந்தைகளின் சருமத்திற்கு அது ஒத்து வருமா என்பதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.

தீர்ப்பு : பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பற்றது
பாதுகாப்பானது
எந்த வகையான பொருட்களிலிருந்து தயாரிக்கிறோம் என்பதிலிருந்து தான் இது முடிவு செய்யப்படுகிறது. மேலும் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலும் இது வேறுபடுகிறது.

பாதுகாப்பற்றது:
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவை குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றதல்ல. எனவே குழந்தையின் மூன்று வயது வரை இதைப் பயன்படுத்தக் கூடாது.

#6 கொசுவலை அல்லது கொசு பேட்
கொசு வலையில் எவ்வகையான கெமிக்கலும் இல்லாதது குழந்தைகளுக்கு ஏற்றது. குழந்தைகளின் கொசுக்கடியில்லா நிம்மதியான உறக்கத்தை இது வழங்குகிறது. அதோபோல் கொசு பேட்களும் பாதுகாப்பானதாகத் தான் இருக்கிறது. அதிலிருந்து மட்டும் வாயுக்கள் வராதா என்று கேட்பீர்கள். நிச்சயம் வரும் குழந்தைகள் இருக்கும்போது அந்த இடங்களில் நாம் பயன்படுத்தப் போவதில்லை என்பதால் கவலையில்லை.

தீர்ப்பு மிகவும் பாதுகாப்பானது
கொசு வலைகள் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் கொசுவலைகள் கிழிந்திருக்கிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்த்கிக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications