Just In
- 11 min ago
2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா?
- 56 min ago
அதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...
- 1 hr ago
பலகோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அண்ணாமலை... கிரிவலம் வந்தால் கிடைக்கும் பலன்கள்!
- 2 hrs ago
தலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா? அப்ப இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க...
Don't Miss
- Movies
ஒருவழியா சதீஷுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு.. ஆமா இது காதல் திருமணமா? பெரியோரால் நிச்சயிக்கப்பட்டதா?
- News
30 வருடத்திற்கு பின் மாஸ் போராட்டம்.. குடியுரிமை சட்ட திருத்தத்தை வடகிழக்கு எதிர்ப்பது ஏன் தெரியுமா?
- Automobiles
புக்கிங் செய்த 10 நாட்களில் பைக் டெலிவிரியா? - பதறிப் போய் ஜாவா அளித்த விளக்கம்!
- Finance
மீண்டும் லண்டன் நீதிமன்றத்தை நாடும் இந்திய வங்கிகள்.. விஜய் மல்லையாவின் கடனை வசூலிக்க திட்டம்..!
- Technology
டிசம்பர் 17: தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
- Education
Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!
- Sports
ISL 2019 - 20 : வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணி.. போராடி டிரா செய்த ஜாம்ஷெட்பூர்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தாய்ப்பாலூட்டும் தாய்களுக்கு குடம்புளி பாதுகாப்பானதா? உங்கள் சுயநலம் குழந்தைகளுக்கு பேராபத்து
குழந்தையை பெற்றுக் கொள்வதால் உடல் எடைக் கூடுவதால் குழந்தைகளே வேண்டாம் என பல பெண்கள் முடிவெடுக்கின்றனர். குழந்தைப் பேறுக்கு பின்னான உடல் எடைக் கூடுதல் என்பது தங்களின் அழகை குறைத்துவிடுவதாக எண்ணுகின்றனர்.
வேறுவழியின்றி குழந்தையை பெற்றுக் கொள்ளுபவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகளை எண்ணி ஓடுகின்றனர். ஆனால் அந்த மருந்துகளின் தாக்கம் தனது குழந்தைக்கும் ஏற்படும் என்பதை யோசிக்கிப்பதே இல்லை. குறிப்பாக தாய்பாலூட்டும் தாய்மார்கள் இதுபோன்ற முடிவுகளை கைவிட வேண்டும்.

குடம்புளி
கார்சினியா காம்போஜியா என்று அழைக்கப்படும் குடம்புளி சிறிய பரங்கிக் காய் போன்ற தோற்றமுடியது. கேரளாவில் வளரும் இந்த புளி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் புளியைப் போன்றது தான். ஆனால் நம் ஊர் புளியைப் போல் அல்லாமல் கமகமக்கும். கொஞ்சம் துவர்ப்புச் சுவையும் கூடவே இருக்கும்.
Most Read: கர்ப்பகாலத்தில் அதிமதுரமா வேணவே வேணாம் ? கருச்சிதைவுக்கு நீங்களே காரணம் ஆகாதீர்கள்

அப்படி என்னதான் செய்யும் குடம்புளி
அதிக பசி எடுக்கிறது அதனால் கண்டதை திண்ணு விடுகிறோம். என்று சொல்கிறவர்கள் குடம்புளியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் பசியை பற்றி யோசிக்கக் கூடாது என்ற கட்டளையை இடுகிறது. அதனால் உங்கள் உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

தாய்ப்பால்
தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு முழுமையாக கிடைக்கும் ஊட்டச்சத்தாகும். தாய்மார்கள் தவறான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அது குழந்தையின் உடல்நலத்தையும் சேர்த்தே பாதிக்கும். எனவே குழந்தையை மனதில் வைத்துக் கொஞ்சம் செயல்படுங்கள்.

தாய்மார்களுக்கு சுயநலம் வேணுமா
குழந்தைகளின் வளர்ச்சியே உங்களைச் சார்ந்தே இருக்கும் போது உங்களின் சுயநலத்திற்காக குழந்தைகளின் வாழ்வை சுக்குநூறாக்காதீர்கள். உங்கள் அம்மா நினைத்திருந்தால் நீங்கள் இவ்வளவு ஆரோக்கியமாக இவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியாது.

தாய்ப்பாலூட்டுபவர்கள் குடம்புளியை பயன்படுத்தலாமா
எடையைக் குறைப்பதற்காக குடம்புளியை பெரும்பாலான தாய்மார்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் உணவுக்கட்டுப்பாட்டையும் மேற்கொள்கிறார்கள் இது குழந்தைகளுக்கு நல்லதா? இது உண்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் என்னென்னு தெரியுமா ? முழுசா படிங்க

குழந்தைக்கு பசியின்மை
குடம்புளியிலுள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் குழந்தைக்கு பசியின்மையை ஏற்படுத்துகிறது. மேலும் குழந்தைக்கு அதீத வளர்ச்சிதை மாற்றத்தையும் அளிக்கிறது. குடம்புளி உங்கள் எடையை மட்டும் குறைக்கவில்லை. குழந்தையின் உடலையும் சேர்த்து தான்.

ஊட்டச்சத்துக் குறைபாடு
குடம்புளி தாய்மார்களுக்கு பசியின்மையை ஏற்படுத்துகிறது. இதனால் உணவுகளை சரியாக தாய்மார்கள் எடுத்துக் கொள்வதில்லை. தாய்ப்பால் கொடுக்கும் போது உயரிய ஊட்டச்சத்துகளை தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுடன் வளருகிறது.

தாய்ப்பால்
குறைந்த ஊட்டச்சத்தை தாய்மார்கள் உண்பதால் பால் உற்பத்தியில் பாதிப்பை சந்திக்கின்றனர். குறைந்தது பிறந்த குழந்தைக்கு ஆறு மாதமாவது தாய்ப்பால் அவசியமாகிறது.

அப்ப உடல் எடையைக் குறைக்க என்னதான் வழி
நமது உடல் அமைப்பு எல்லாத்தையும் தானகவே சரிசெய்யும் அளவுக்குத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோம்பேறிகள் தான் இது போன்ற குறுக்கு வழிகளை நாடுகின்றனர். இயற்கையாகவே உடல் எடையை குறைக்கும் சக்தி தாய்மார்களின் உடலுக்கே இருக்கிறது.

கட்டுடல் அழகைப் பெற தாய்ப்பால்
தாய்மார்கள் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதை எண்ணிக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தைக்கு முறையாக பாலூட்டினீர்கள் என்றாலே நிச்சயம் பழைய கட்டுலைப் பெறலாம்.

எப்படி சாத்தியம்
இரத்தத்தை பாலாக மாற்றம் செய்யும் போது அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதனால் தேவையற்று உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புகள் கறைந்து உடல் எடை குறைகிறது

உடற்பயிற்சி
தாய்ப்பாலூட்டும் போது செய்ய வேண்டிய பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அதை முறையாக செய்யும் போது உடல் வலுப்பெறுவதோடு தாய்ப்பாலும் நன்றாக சுரப்பதற்கு உதவி செய்கிறது.

ஆய்வுகள் என்ன சொல்லுது
தாய்ப்பால் கொடுக்கும் போது குடம்புளி பயன்படுத்துவது பாதுகாப்பானது என எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. ஆய்வில் நிரூபிக்காத ஒரு விசயத்தை தாய்மார்கள் பயன்படுத்துவது சரியானதாக இருக்காது.

தாய்பாலூட்டும் அம்மாக்கள் உடல் எடை குறைப்பு மாத்திரைகளை பயன்படுத்தலாமா?
தாய்மார்களுக்கு எடை கூடுதல் பிரச்சினையாக இருக்கும். ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதைவிட குழந்தையின் நலன் என்பது மிகவும் முக்கியமானது. எனவே உடல் எடைக் குறைப்புக்காக செய்யும் விசயங்களை தாய்பாலூட்டும் வரையாவது தள்ளிப்போடுங்கள்.
தாய்ப்பாலின் பயன்கள்

அதிக நுண்ணறிவு
தாய்ப்பாலின் வழியாகத் தான் குழந்தையின் நுண்ணறிவு வளர்கிறது. உங்கள் குழந்தை செம்மையாக சிந்திக்கிறான் என்று சொன்னால் அந்தப் பெருமை உங்கள் தாய்ப்பாலையேச் சேரும். உங்கள் குழந்தையின் ஐ.க்யூ அளவை தாய்ப்பால் அதிகரிக்கிறது.
Most Read: பிறந்த குழந்தைகளுக்கு கொசுவிரட்டிகள் பாதுகாப்பானதா ? இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க

மூளை வளர்ச்சி
பிறந்த குழந்தைக்கு மூளை சரியான இடத்தில் முழுமையாக பொருந்தியிருக்காது. ஆனால் தாய்ப்பால் குழந்தையின் அந்தந்த வயதில் ஏற்படுகிற வளர்ச்சியைத் தருகிறது. மேலும் சரியான அமைப்பில் மூளையை பொறுத்தவும் பயன்படுகிறது. இன்னும் பல பயன்களை தாய்ப்பால் உள்ளடக்கியிருக்கிறது.