Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
குழந்தைங்க கூட என்ன விளையாடுறதுனு தெரியலையா அப்போ இத விளையாடுங்க
குழந்தைகளை பார்த்துக் கொள்ளுவது சாதாரண விஷயம் இல்லை அவர்களுக்கு உணவு கொடுப்பது உறங்க வைப்பது போலவே அவர்களோடு விளையாடுவதும் மிக முக்கியம். ஆனால் குழந்தைகள் பசியோடு இருக்கும் போதோ அல்லது தூக்கத்தில் இரு
குழந்தைகளை பார்த்துக் கொள்ளுவது சாதாரண விஷயம் இல்லை அவர்களுக்கு உணவு கொடுப்பது உறங்க வைப்பது போலவே அவர்களோடு விளையாடுவதும் மிக முக்கியம். ஆனால் குழந்தைகள் பசியோடு இருக்கும் போதோ அல்லது தூக்கத்தில் இருக்கும் போதோ அவர்கள் ஒரு போதும் விளையாட தயாராக இருக்க மாட்டார்கள்.

குழந்தைகளுடன் என்ன விளையாடுவது என்ற கேள்வி சிலருக்கு உண்டு. ஆனால் நீங்கள் குழந்தைகளுடன் விளையாடும் போது அவர்கள் மிகவும் உற்சாகமாக உணருவார்கள். நீங்களும் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எனவே அவர்களுடன் விளையாடுவதால் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகம் தான். குழந்தைகளுடன் எவ்வாறு விளையாடுவது என்று பார்க்கலாம்.

கற்றுக் கொடுத்தல்
குழந்தைகளுடன் நீங்கள் விளையாடும் நேரத்தை கற்றுக் கொடுக்கும் நேரமாக மாற்றுங்கள். அதாவது குழந்தைகளுக்கு வார்த்தைகளை உச்சரிக்க சொல்லி கொடுங்கள் அவர்களின் வாயில் எந்த சொற்கள் நுழையுமோ அந்த மாதிரியான சிறு சிறு சொற்களை சொல்லிக் கொடுங்கள். விலங்குகளின் ஓசைகள், குழந்தைகளுக்கு பிடித்த மோட்டர் பைக் ஒலிகள் போன்றவற்றை சொல்லி கொடுங்கள். நல்ல கதைகளை சொல்லுதல், புத்தகங்களை வாசித்தல் மற்றும் புத்தகங்களில் உள்ள படங்களை காட்டி சொல்லி கொடுத்தல் போன்றவற்றை செய்யலாம்.

பதிலளியுங்கள்
எப்போது எல்லாம் குழந்தைகள் சிறுநீர் அல்லது மலம் கழிக்கிறார்களோ அப்போது அவர்கள் எழுப்பும் ஒலியை நீங்கள் ஒலித்து காட்டுங்கள். அடுத்த முறை அவர்கள் செய்யும் போது உங்களுக்கு முன்பாக அவர்கள் சத்தத்தினை எழுப்பி உங்களை அழைப்பார்கள். எனவே குழந்தைகள் எப்போது மலம் அல்லது சிறுநீர் கழிக்கிறார்கள் என்பதை நீங்கள் ஈசியாக உணர முடியும்.

பாடுதல்
குழந்தைகளுடன் சேர்ந்து பாடுங்கள். குழந்தைகள் நீங்கள் பாடும் போது மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள் மற்றும் மகிழ்ச்சியாக ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு தனது அம்மாவிடம் விளையாடுவது மற்றும் அம்மாவின் குரலை கேட்பது என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே நீங்களும் உங்கள் குழந்தையும் சேர்ந்து உங்களுக்காகன நேரத்தை ஒதுக்கி பாடலை பாடி விளையாடுங்கள்.

பொம்மைகள்
உங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொம்மைகள் பாதுகாப்பானதாக இருப்பதோடு மென்மையான பொம்மைகளாகவும் இருக்க வேண்டும்.குழந்தைகளை பொம்மைகள் எந்த விதத்திலும் பாதிக்காத ஒன்றாக இருப்பது அவசியம். பொம்மைகளில் இருக்கும் சில பொருட்கள் குழந்தைகளுக்கு தெரியாமல் கூட காயத்தை ஏற்படுத்தலாம் எனவே குழந்தைகளுக்கு வாங்கும் பொம்மைகளில் கவனம் செலுத்தி வாங்குங்கள்.

விளையாட்டு
குழந்தைகள் விளையாடுவதற்காக நீங்கள் நிறைய விலை கொடுத்து பொம்மைகளை அல்லது வேடிக்கை பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்களும் குழந்தைகளும் சேர்த்து இருக்கும் நேரத்தை அவர்களுடன் செலவழித்து சிரிப்பை ஏற்படுத்துங்கள். குளிக்கும் நேரம் மற்றும் உணவு அருந்தும் நேரங்கள் கூட உங்களின் குட்டி செல்லங்களுடன் மகிழ்ச்சியாக செலவிடுங்கள்.



Click it and Unblock the Notifications