For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் விளையாட பேட்டரி கார் வாங்கி கொடுக்குறீங்களா அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் சில பாதுகாப்பானவையாகவும் மற்றும் சில ஆபத்தானவையாகவும் இருப்பதால் அவற்றில் எந்தவிதமான பொருட்களை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள

|

எல்லா குழந்தைகளுக்கும் பொம்மைகளுடன் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். பொம்மைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்திலும் வடிவத்திலும் இருப்பதால் குழந்தைகளின் பார்வை திறனை அதிகரிக்க உதவும். குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் சில பாதுகாப்பானவையாகவும் மற்றும் சில ஆபத்தானவையாகவும் இருப்பதால் அவற்றில் எந்த விதமான பொருட்களை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Dangerous Baby Products That All Parents Should Avoid

குழந்தைகளிடன் பொம்மைகளைக் கொடுத்து விட்டுக் கவனிக்காமல் உங்களது வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவீர்கள். ஆனால் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் போது அவற்றின் பாகங்களை விழுங்குதல் அல்லது பொம்மைகளினால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே நீங்கள் வாங்கும் பொம்மைகளைக் கவனத்துடன் வாங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேட்டரி பொம்மைகள்

பேட்டரி பொம்மைகள்

சிறிய சிறிய பொம்மைகள் தற்போது பேட்டரிகளுடன் கடைகளில் விற்கப்படுகின்றன. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வித்தியாசமான ஒன்றாகவும் குழந்தைகளைக் கவரும் விதமாகவும் இருக்கும். ஆனால் அவற்றைக் குழந்தைகள் தப்பித் தவறி விழுங்கி விட்டால் அவை ஆபத்தில் சென்று முடிந்து விடும். எனவே மிகவும் சிறிய பேட்டரி பொம்மைகளை வாங்குவதைத் தவிருங்கள்.

பேபி வாக்கர்

பேபி வாக்கர்

குழந்தைகள் விரைவில் நடக்கவும், நிற்கவும் பழக வேண்டும் என்று பெற்றோர்கள் பேபி வாக்கரை வாங்கி விடுகிறார்கள். ஆனால் ஆய்வில் கூறுவது என்னவென்றால் பெரும்பாலான குழந்தைகளுக்கு பேபி வாக்கர் மூலம் ஆபத்து ஏற்படுகிறது. குழந்தைகள் வாக்கர் பயன்படுத்தி நடக்க முயற்சிக்கும் போது ஏற்படும் காயங்கள் பொதுவானவை என்றாலும் அந்த காயங்கள் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் படிக்கட்டுகளில் அதிகமான காயங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கார் இருக்கை பொம்மைகள்

கார் இருக்கை பொம்மைகள்

அனைவரும் கார்களின் முன் கண்ணாடியில் சில பொம்மைகள் அல்லது விலங்குகளின் உருவ பொம்மைகளைக் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக மாட்டி இருப்பீர்கள். ஆனால் அந்த பொம்மைகளினால் குழந்தைகள் ஈர்க்கப்பட்டு அதனைப் பிடித்து இழுக்க முயற்சிக்கும் போது வெகுவாக அதில் இடித்துக் கொள்ளுவார்கள். இதனால் குழந்தைகளுக்குக் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொம்மையின் பாகங்கள்

பொம்மையின் பாகங்கள்

குழந்தைகளுக்கு வாங்கும் பொம்மைகளில் இருக்கும் சிறு சிறு பாகங்கள் குழந்தைகளுடைய மூக்கில் அல்லது வாய்க்குள் நுழைய வாய்ப்புள்ளது. அதாவது பொம்மை கார்களில் உள்ள பாகங்கள் அல்லது பொம்மைகளில் உள்ள பாகங்கள் போன்றவை உங்களுக்குத் தெரியாமல் கவனக் குறைவினால் குழந்தைகள் விழுங்கி விடும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான பொம்மைகளை வாங்காமல் இருப்பதே சிறந்தது.

ஸ்லீப் பொசிஷனர்கள்

ஸ்லீப் பொசிஷனர்கள்

குழந்தைகள் தூங்குவதற்காகப் பெற்றோர்கள் ஸ்லீப் பொசிஷனர்களை வாங்கி தூங்க வைக்கிறார்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று. யுனைடெட் ஸ்டேட்ஸ் உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்தின் கருத்துப்படி 13 சதவீத குழந்தைகள் ஸ்லீப் பொசிஷனர்களில் தூங்குவதினால் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று கூறுகின்றனர். எனவே குழந்தைகளை அவர்கள் போக்கில் தூங்க வையுங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டாம்.

பாதுகாப்பான பொம்மைகள்

பாதுகாப்பான பொம்மைகள்

குழந்தைகளுக்கு வாங்கும் பொம்மைகள் 1.75 அங்குலத்திற்குக் குறைவாக இருக்கக் கூடாது.

பேட்டரி மூலம் இயங்கும் பொம்மைகளை வாங்குவதைத் தவிருங்கள்.

குழந்தைகள் பொம்மைகளை வாயில் வைத்து விளையாடுவார்கள் என்பதால் நீளமான கைப்பிடிகள் உள்ள பொம்மைகளை வாங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Baby Products That All Parents Should Avoid

All babies love to play with toys. Some toys are safe to play with and stimulate a baby's senses. Rattles and toys that are in different shapes and colours stimulate their developing vision. However, some small toys and baby products are dangerous and they should be kept away from your baby. These include crib tents, baby walker, toys with batteries etc.
Story first published: Tuesday, September 24, 2019, 18:15 [IST]
Desktop Bottom Promotion