For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா? உண்மை என்ன?

இரவில் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் பல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தாய்ப்பால் மற்றும் பற்சிதைவுக்கும் இணைப்பு எதுவும் நிரூபணமாகவில்லை.

|

ஒரு குழந்தை பிறந்தது முதல் விவரம் தெரிய ஆரம்பிக்கும் காலம் வரை தனது தாயிடம் தாய்ப்பால் குடிப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெற்று, ஆரோக்கியமான வளர்ச்சியை பெறுகின்றனர்.

Can Breastfeeding Cause Tooth Decay?

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்று என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய கூற்று. இருப்பினும், தாய்ப்பால் குறித்த ஒரு சர்ச்சையும் உள்ளது. அது தான், தாய்ப்பால் அதிகம் குடித்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படக்கூடும் என்பது.

இரவில் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் பல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தாய்ப்பால் மற்றும் பற்சிதைவுக்கும் இணைப்பு எதுவும் நிரூபணமாகவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்சிதைவு மற்றும் குழந்தையின் பற்கள்

பற்சிதைவு மற்றும் குழந்தையின் பற்கள்

குழந்தைகளுக்கு பாலூட்ட பாட்டில்களை பயன்படுத்தும் பழக்கம் இல்லாத காலத்தில் குழந்தைகளுக்கு பற்சிதைவு என்ற பேச்சே இருந்தது கிடையாது. தாய்ப்பாலிற்கு பதிலாக, ஃபார்முலா மில்க், புட்டி பால் என கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் இது போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படத் தொடங்கியது. டாக்டர். ஹரோல்ட் டோர்னி மற்றும் டாக்டர். பிரையன் பால்மர் ஆகிய 2 பல் மருத்துவர்கள், குழந்தைகளின் பற்சிதைவு குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அதில், 500 முதல் 1000 வயது வரையிலான மனித மண்டை ஓடுகள் குறித்து விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த குழந்தைகளுக்கு நீண்ட காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பல் மருத்துவரின் ஆராய்ச்சி, தாய்ப்பால் கொடுப்பது பற்சிதைவை ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு வந்தது.

இரவுநேர பாட்டில் பழக்கம் எவ்வாறு பற்சிதைவை ஏற்படுத்துகின்றன?

இரவுநேர பாட்டில் பழக்கம் எவ்வாறு பற்சிதைவை ஏற்படுத்துகின்றன?

இரவுநேர பாட்டில்கள் பல் சிதைவை ஏற்படுத்துவதற்கான காரணம் என்னவென்றால், இரவில் பாலானது வாய்க்குள் நீண்ட நேரத்திற்கு பற்களுடன் தொடர்பில் இருக்கும். அதே சமயம், தாய்ப்பாலை எடுத்துக் கொண்டால், குழந்தை நன்கு உறிஞ்சும் வரை தாயின் பாலானது வெளியே வராது. மேலும், பற்களில் படாமல், தாய்ப்பாலானது நேரடியாக குழந்தையின் வாயிலுள் நுழைகிறது. அப்படியே குழந்தை உறிஞ்சினால், உடனே விழுங்கிடுவர். எனவே, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், வாயினுள் திரவ குவிப்பது நடப்பதில்லை.

பற்சிதைவிற்கான அடிப்படை காரணம் என்ன?

பற்சிதைவிற்கான அடிப்படை காரணம் என்ன?

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனும் பாக்டீரியா தான் பற்சிதைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். இது தான் பிளேக்கில் இருக்கும் பாக்டீரியா என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பாக்டீரியாக்கள் உணவில் இருக்கும் சர்க்கரைகளுடன் இணைந்து ஒரு அமிலத்தை உருவாக்குகின்றன. இவை தான் சிதைவை ஏற்படுத்துகின்றன. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியா குறைந்த அளவு உமிழ்நீர், சர்க்கரை மற்றும் குறைந்த பி.எச்-நிலை ஆகியவற்றின் கலவையில் தான் வளர்கிறது. சிலருக்கு இதுபோன்ற பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கக் கூடும். அவர்களுக்கு பல் சிதைவுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. ஒரு குழந்தைக்கு பற்கள் வந்த பிறகு, இந்த பாக்டீரியாவை, தனது தாய் அல்லது வேறு சில பராமரிப்பாளர் அல்லது நெருங்கிய உறவினருடனான உமிழ்நீர் தொடர்பு மூலமாக பெறக்கூடும்.

ஆய்வு

ஆய்வு

டாக்டர் பிரையன் பால்மர் கருத்துப்படி, "தாய்ப்பால் ஒரு போதும் பற்சிதைவை ஏற்படுத்தாது." சமீப காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆராய்ச்சியில், லாக்டோஸால் பற்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, ஒட்டுமொத்தமாக தாய்ப்பாலின் தாக்கம் காரணம் அல்ல. தாய்ப்பாலில், பால் சர்க்கரை அல்லது லாக்டோஸ் உள்ளது. இவை பற்சிதைவை ஏற்படுத்த உதவுகிறது. ஆனால், இது சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியா ஸ்ட்ரெப்டோகாக்கஸை அழித்திடும் (இதில் லாக்டோஃபெரின் அடங்கும்). ‘குழந்தை பல் மருத்துவத்தில்' எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் படி, தாய்ப்பால், கரியோஜெனிக் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

முடிவுரை

முடிவுரை

இந்த ஆய்வின் முடிவு கூறுவது என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பது பற்சிதைவை ஏற்படுத்தாது. டாக்டர் டோர்னியின் கூடுதல் மதிப்புரைகள், சாதாரண நிலைமைகளின் கீழ், தாய்ப்பாலில் உள்ள இம்யூனோகுளோபின்கள் வாயில் உள்ள பாக்டீரியாவால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தை தடுக்கும் என்று கருதுகிறது. ஆனால் எனாமலில் சிறிய குறைபாடுகள் இருந்தால், பால் சர்க்கரை மற்றும் பாக்டீரியாக்களின் கலவையின் காரணமாக, பற்சிதைவு ஏற்படலாம். ஆனால், அதனை தடுக்க தாய்ப்பாலின் பாதுகாக்கும் தன்மை போதுமானதாக இல்லை. இந்த ஆய்வின்படி, எந்த ஒரு குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்து, ஜூஸ் அல்லது வேறு திடப்பொருள்கள், பாட்டில் பால் ஆகிய எதுவும் கொடுக்கப்படாமல் இருக்கிறதோ, அந்த குழந்தைக்கு மரபணு ரீதியாக தவிர வேறு எந்த வழியிலும் பற்சிதைவு ஏற்பட வாய்ப்பில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Breastfeeding Week 2020: Can Breastfeeding Cause Tooth Decay?

Can breastfeeding cause tooth decay? Read on...
Desktop Bottom Promotion