Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 15 hrs ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 15 hrs ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
- 17 hrs ago
அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்!
Don't Miss
- Technology
கெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி!
- News
என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளிநாட்டுல ஏன் குழந்தையை கங்காரு குட்டி மாதிரி தூக்குறாங்கனு தெரிஞ்சுக்கோங்க. இவ்ளோ நல்லது இருக்கு.
உடலுடன் உடல் சேர்த்து அனைத்துக் கொள்ளுதல். அதாவது குழந்தைகளை உடலுடன் உடல் ஓட்டும் படி அனைத்துக் கொள்ளுவது மிக சிறந்தது. கங்காருகள் எப்படி தான் வயிற்றுப் பகுதியில் குட்டிகளை தூக்கி சுமக்கிறதோ அதே போல் உங்கள் குழந்தைகளை தூக்கி சுமப்பது குழந்தைகளை பாதுகாப்பாக உணர வைக்கும். மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் தெற்கு அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மற்ற நாடுகளில் உள்ள மருத்துவர்கள் உடலுடன் உடல் என்ற சிகிச்சையை பின்பற்றுமாறு தாய்மார்களை வலியுறுத்துகிறார்கள்.
ஏனெனில் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும், இன்குபேட்டர்களைச் சார்ந்திருந்த குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது குழந்தைகளை 1 மணி நேரம் முதல் ஒரு நாள் முழுவதும் கூட கங்காருகளை போல் தூக்கி சுமக்கலாம். அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்கள் கூட குழந்தைகளை இவ்வாறு தூக்கி சுமக்கலாம்.

கங்காரு கவனிப்பு நன்மைகள்
ஆப்பிரிக்காவில் இருக்கும் மருத்துவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண்டுக்கு 7000 குழந்தைகளை பிரசவிக்கிறார். குழந்தைகள் பிறந்த பின்பு இருந்தே கங்காருகளை போல தூக்குவது சிறந்தது என்று கூறுகிறார். மேலும் கங்காரு தாய் பராமரிப்பு பாதுகாப்பானது மட்டுமல்ல, இன்குபேட்டர்கள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விட இந்த கங்காரு முறை மிக உயர்ந்தது என்பதற்கு ஏராளமான சான்றுகளை வழங்குகின்றனர்.
MOST READ: குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போடுறீங்கனு தெரியுமா? பயன்கள் என்ன?

வெப்பநிலை மாற்றம்
குழந்தைகள் உங்கள் வயிற்றில் இருக்கும் போது அவர்களின் வெப்பநிலை உங்கள் கருப்பை வழியாக தான் கட்டுப்படுத்தப்படும். குழந்தைகள் பிறந்தவுடன் இது அவர்களுக்கு சற்று பிரச்சனையாக அமையும். அவர்களின் வெப்பநிலையை அவர்களே கட்டுப்படுத்த வேண்டும். எனவே நீங்கள் கங்காருகளை போல குழந்தையாகளை தூக்கும் போது தங்கள் வெப்பநிலையிலே உள்ளது போலவே
உணருவார்கள்.

மனவளர்ச்சி
கங்காரு கவனிப்பைப் பெற்ற குழந்தைகள் அவர்களின் 15 வயதில் சிறந்த மூளை வளர்ச்சியை பெற்றிருந்தனர். அதாவது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் சில பேருக்கு கங்காரு கவனிப்பும் சில குழந்தைகளை இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டு ஒப்பிட்டு பார்க்கும் போது கங்காரு கவனிப்பைப் பெற்ற குழந்தைகளின் மூளை வளர்ச்சிய சிறந்து இருந்தது. குழந்தைகள் அம்மாவிடம் கங்காரு பராமரிப்பில் இருக்கும் போது இதயத் துடிப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் தூக்கம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மூளை சிறப்பாக செயல்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடல் எடை
கங்காரு பராமரிப்பு குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகள் பிறந்த பின்பும் அதே வெப்பநிலை கங்காரு பராமரிப்பில் கிடைப்பதால் அவர்களின் எனர்ஜியை வெப்பநிலைக்காக பயன்படுத்த தேவையில்லை. எனவே அந்த எனர்ஜியே அவர்களின் உடல் எடை அதிகரிக்க உதவும்.

தாய்ப்பால் கொடுத்தல்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இயல்பாகவே வாசனையை நுகரும் பண்பு இருக்கிறது, எனவே உங்கள் குழந்தையை கங்காரு போல் தூக்கும் போது அவர்களுக்கு முலைக்காம்பைத் தேடவும், தாய்ப்பால் பருகவும் எளிமையாக இருக்கும்.

இதய துடிப்பு
கங்காரு பராமரிப்பு ஆரோக்கியமான இதய துடிப்பு மற்றும் சுவாசத்தை ஊக்குவிக்கிறது. சுவாசக் கோளாறால் அவதிப்பட்ட குழந்தைகளுக்கு சுவாசக் கருவி இல்லாமல் 48 மணி நேரத்திற்கு விடுவிக்கப்பட்டு கங்காரு பராமரிப்பு கொடுக்கப்பட்டது. இது அவர்களுக்கு சுவாசக் கருவிகள் மூலம் கொடுக்கப்படத்தை விட நல்ல பதிலை அளித்தன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
MOST READ: குழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா

நோய் எதிர்ப்பு சக்தி
கங்காரு பராமரிப்பு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அதாவது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மிக குறைவான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பார்கள். எனவே அவர்கள் ஒவ்வாமை, நோய்த்தொற்றுகள், உணவுப் பிரச்சினைகள் போன்றவற்றினால் பாதிக்கப்டுகிறார்கள். குழந்தைகளுக்கு பிறந்த உடன் கங்காரு பராமரிப்பு முறையை பின்பற்றுவதால் இந்த சிக்கல்களை வியத்தகு முறையில் குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தையும் தாயும் ஒன்றாக இருப்பதால் தாய்ப்பால் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் அதிக அளவில் பால் உற்பத்தி செய்ய உதவுகின்றன.

குழந்தையின் உறக்கம்
குறைந்த அழுத்தம் இருக்கும் போது நிம்மதியாக குழந்தைகள் உறங்குவார்கள். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இன்குபேட்டர்களில் தூங்கும் போது சற்று விழித்து எழுந்தனர். ஆனால் கங்காரு பராமரிப்பில் தூங்கிய குழந்தைகள் மன நிம்மதியுடன் ஆழமாகத் தூங்கினார்கள்.

அப்பாவின் அன்பு
குழந்தைகள் அம்மாவின் கருப்பையில் இருக்கும் போதே அப்பாவின் குரலை அறிந்து இருப்பார்கள். எனவே குழந்தைகள் அப்பாக்களிடமும் கங்காரு பராமரிப்பில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

கங்காரு பராமரிப்பு
குழந்தைகள் பிறந்து குறைந்து 2 மணி நேரம் கழித்து நீங்கள் கங்காரு பராமரிப்பை தொடரலாம். இந்த பராமரிப்பு தாய் மற்றும் குழந்தைக்கு நல்லது. எப்போது உங்கள் குழந்தை உங்கள் மார்பை விட்டு விலக நினைக்கிறார்களோ அப்போது நீங்கள் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள்.
MOST READ: குழந்தைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ பாதுகாப்பானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பராமரிக்கும் முறை
ஒரு அமைதியான மங்கலான லைட் அறையில் அமர்ந்து, குழந்தைக்கு டைப்பர் அணிந்தும் தாய் முடிந்தால் உங்கள் வெற்று மார்பில் குழந்தையை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். மேலும் தாய்ப்பால் கொடுத்தப் பிறகு குழந்தைங்களை தந்தையிடம் ஒப்படைக்கலாம். இந்த கங்காரு பராமரிப்பில் நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் குழந்தைகளிடம் இருந்து உணருவீர்கள்.