For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்தின் போது தலை துண்டான குழந்தை..! நடந்த உண்மை இதுதான்! இந்த கொடுமைய நீங்களே பாருங்க..!

|

Recommended Video

பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்

மனித வாழ்வின் உன்னத நிலை, இன்னொரு உயிரை உயிர்பிப்பது தான். ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருவது தற்போதைய கால கட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. பெண்ணுக்கு ஏதோ ஒரு குறைபாடோ அல்லது ஆணுக்கு ஏதோ குறைபாடோ ஏற்பட்டால் குழந்தையை பெறுவதில் சிக்கல்கள் நிச்சயம் உண்டாகும்.

பிரசவத்தின் போது தலை துண்டிக்கப்பட்ட குழந்தை..! நடந்த உண்மை இதுதான்! இந்த கொடுமையை நீங்களே பாருங்க!

ஆனால், இது போன்ற தடைகளை தாண்டி குழந்தை உருவாகினால், அதை வெளி உலகில் இருக்கும் பல காரணிகள் கொன்று விடுவதாக ஒரு பார்வை உள்ளது. இதே நிலை தான் தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கும் நடந்துள்ளது. எந்த தாயிற்கும், தன் குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்தால் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது.

இது போன்ற கொடூர நிலைமை தான் இங்கு ஒரு தாயிற்கு ஏற்பட்டுள்ளது. பிரசவத்தின் போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை பிரசவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உண்மையிலே நடந்தது என்ன? எதனால் இப்படி ஒரு நிலை அந்த சிசுவிற்கு ஏற்பட்டது? யார் செய்த குற்றம் இது? இதன் உண்மை பின்னணி என்ன? இப்படி பல கேள்விகளுக்கு பதில் கூறுவதே இந்த பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்?

யார் இவர்?

கடலூர் கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொம்மி. இவர் கருவுற்று வளைகாப்பு கூட சமீபத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் பொம்மிக்கு கடந்த மார்ச் 20 ஆம் தேதி அதி காலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இவர் அழைத்து செல்லப்பட்டார்.

சுக பிரசவம்!

சுக பிரசவம்!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாலை வேளையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கிருந்த செவிலியர்கள் பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

ஆரம்பத்தில் குழந்தை சுக பிரசவமாக வந்து விடும் என வெளியில் உள்ள உறவினர்களுக்கு சொல்லி சென்றுள்ளார்.

பச்சிளம் குழந்தை!

பச்சிளம் குழந்தை!

சுக பிரசவம் என்கிற மட்டற்ற மகிழ்ச்சியோடு வெளியில் காத்திருந்த உறவினர்களுக்கு அடுத்த சில மணித்துளிகளில் இடி வந்து விழுந்தது.

தடாலென்று ஓடி வந்த செவிலியர் ஒருவர் குழந்தையின் தலை மட்டும் வெளியில் துண்டாக வந்து விட்டது என அலறி அடித்து கொண்டு கூறினார்.

முற்றுகை!

முற்றுகை!

இதை கேட்ட உறவினர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பச்சிளம் குழந்தையின் தலையை மட்டும், எந்த உறவினர்களால் தான் துண்டாக பார்க்க மனம் இருக்கும்.

இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த பின்னர் அப்பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் குழந்தையின் மீதி உடலை பல நேர போராட்டத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

MOST READ: 7 உலக அதிசயம் தெரியும்... இந்த 7 வகையான உலகத்து தண்ணீர் பற்றி தெரியுமா?

என்ன நேர்ந்தது?

என்ன நேர்ந்தது?

குழந்தை 2 நாட்களுக்கு முன்னரே வயிற்றில் இறந்து விட்டதாக செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையை வெளியில் எடுத்த போது அதன் முழு உடலும் சுமார் 1.5 கிலோ மட்டுமே இருந்ததால், குழந்தை முன்னதாகவே இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறுகின்றனர்.

இருப்பினும் இதை பற்றிய தெளிவான அறிக்கை பிரேத பரிசோதனைக்கு பின் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபரீதம்!

விபரீதம்!

குழந்தையை பிரசவம் பார்த்த செவிலியர்கள் குழந்தையின் தலையை வெளியில் எடுக்கும் போது இடுக்கியை வைத்து இழுத்ததாக அப்பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதனால் தான் இந்த விபரீத நிலை குழந்தைக்கு நேர்ந்ததாக இவர்கள் கருதுகின்றனர்.

மருத்துவர் இல்லை!

மருத்துவர் இல்லை!

பொதுவாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அத்துடன் 24 மணி நேரமும் அங்கு செவிலியர்கள் பணியில் இருத்தல் வேண்டும்.

இது தான் சட்டமாக இன்று வரை உள்ளது. ஆனால், பிரசவத்தின் போது மருத்துவர் இல்லாததும், இப்படி ஒரு கோர சம்பத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

வேதனை!

வேதனை!

செவிலியர்களுக்கு கட்டாயம் போதிய பயிற்சியை வழங்கி இருக்க வேண்டும். இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற பயிற்சி இன்மையும் மிக முக்கிய காரணமாகும்.

பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கூவத்தூர் பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

MOST READ: உடம்புல நோயே வரமா இருக்க, இந்த உணவுகள வாரத்திற்கு ஒரு முறையாச்சும் சாப்பிடுங்க..

தீர்வு!

தீர்வு!

இப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறும் போது தான் நாம் அரசு நடத்தும் துறைகளை பற்றி கவனிக்க தொடங்குகிறோம். ஒவ்வொரு நாளும் இது போன்ற சம்பவம் இந்தியாவின் ஏதோ ஒரு மூளைமுடுக்கில் நடக்க தான் செய்கிறது.

இதை தடுக்க வேண்டுமென்றால், அரசு சார் துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஒழுங்கான முறையில் செயல்பட வேண்டும். இல்லையேல் இந்த பச்சிளம் குழந்தையை போன்று பல உயிர் காவு வாங்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

During delivery Baby's head gets separated from body in Tamil Nadu

This article talks about a baby's head gets separated from body during pregnancy at primary health center in Tamil nadu.
Desktop Bottom Promotion