For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு மூக்கு மட்டும் வளரும்... ஏனென்று தெரியுமா?

கர்ப்பம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமான மற்றும் சந்தோசம் நிறைந்த காலமாகும்.

|

கர்ப்பம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமான மற்றும் சந்தோசம் நிறைந்த காலமாகும்.

pregnancy

நம்மில் சிலர் கர்ப்ப காலத்தில் கடந்த கால அனுபவத்திலிருந்து அல்லது தமக்கு நெருக்கமானவர் கர்ப்பகாலத்தில் இருக்கும் போது கவனித்ததைக் கொண்டு எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறார்கள், ஆனால் நம்மில் சிலர் அதை முழுமையாக அறியாதவர்கள். ஆனால் நம் அனைவருக்கும் தெரிந்தது கர்ப்ப காலத்தில் பல மாற்றங்கள் நிகழும் என்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

சில கர்ப்பிணி பெண்கள் தங்கள் வாயில் சுவை மாற்றத்தை உணர்கிறார்கள், சிலரால் சில வாசனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது, சிலர் தங்கள் மூக்கு அகலமாகவும் பெரிதாகவும் மாறுவதாக உணர்கிறார்கள். விசித்திரமாக இருக்கிறது இல்லையா! அதைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கலாம்.

அசாதாரண கர்ப்ப அறிகுறிகள்

அசாதாரண கர்ப்ப அறிகுறிகள்

நம் வயிறு பெரியதாகப் போகிறதென்று நமக்குத் தெரியும், நம் மார்பகங்கள் பாலூட்டத் தயாராகிக் கொண்டிருக்கின்றன, நம் கால்களும் கர்ப்பகால எடை அதிகரிப்பால் வீங்கியிருக்கும், மிக முக்கியமாக நம் உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கே அந்நியமாகத் தோன்றும். ஆமாம். சில பெண்களுக்கு மட்டும் கர்ப்ப காலத்தில் உடலில் சில விசித்திரமான மாற்றங்கள் ஏற்படும். பெரிய கால்கள், அகன்ற கண்ணிமைகள், வயிற்றில் முடி வளர்தல் போன்றவை. அதில் ஒன்று தான் பெரிய அகலமான மூக்கு.

ஏன் மூக்கு பெரிதாகிறது?

ஏன் மூக்கு பெரிதாகிறது?

சுவாரசியமான தகவல் ஒன்று தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்களின் மூக்கு மட்டும் வளர்வதில்லை, கூடவே உங்கள் கன்னங்கள், கண்ணிமை முடி போன்ற உடல் உறுப்புகளும் வளருகின்றன. மூக்கே முகத்தின் குறிப்பிடத்தக்க பாகமாக உள்ளதால் அது தனியாக தெரிகிறது. அவ்வளவுதான். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடலின் பல பகுதிகளிலும் இவ்வளர்ச்சி தனியாகத் தெரிகிறது. கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால், உடலில் நிறைய மாற்றங்கள் நிகழும். சில நமக்கு மிகவும் பிடித்தாக கூட இருக்கும். முகமும், தலை முடியும் மிகவும் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும். சில நமக்கு பிடிக்காது. மூக்கு விஷயமும் அப்படித்தான்.

ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது உங்கள் சளி சவ்வுகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சளி சவ்வு மூக்குக்கு கீழே உள்ளது, எனவே சளி சவ்வுகளுக்கு அதிகமான இரத்த ஓட்டம் செல்லும் போது, மூக்கில் ஒட்டுமொத்த இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

மூக்கில் பல்வேறு சவ்வுகள் விரிவடைகிறது, இதையொட்டி மூக்கில் தசைகள் விரிவடைகிறது.

நமது மூக்கு மென்மையான எலும்புகளால் ஆனது. அதனால்தான் மூக்கிலுள்ள சவ்வுகளில் ஏற்படும் மாற்றம் மூக்கின் வடிவத்திலும் எளிதாக பிரதிபலிக்கிறது. சிலருக்கு மூக்கு சிவப்பாக கூட தோற்றமளிக்கும். இது ஹார்மோன் அளவு தோலின் நிறமி அடுக்களிலும் மாற்றம் ஏற்படுத்துவதால் தான்.

பழையபடி மாறி விடுமா?

பழையபடி மாறி விடுமா?

அதிர்ஷ்டவசமாக, கர்ப்பத்தால் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்களைப் போலவே, நம் மூக்கின் அளவு மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள் தற்காலிகமானவையாகும். முன்பே கூறியது போல கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், கர்ப்ப காலத்திற்கு பிறகு, ஹார்மோன் அளவு சரியாகும் போது, பழைய நிலமைக்குத் திரும்பி விடும். நிறைய பெண்களுக்கு குழந்தை பிறந்த ஒரு மாதத்திலோ, நாற்பது நாட்களிலோ மூக்கு திரும்பவும் பழைய நிலைமைக்கு திரும்பி விடுகிறது. அதிர்ஷ்டவசமாக இது தற்காலிக மாற்றம்தான். உங்கள் மூக்கை மற்றவர்கள் கவனிப்பதை விட நீங்களே தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த மாற்றங்களை உடனே கண்டுபிடித்து விடுகிறீர்கள்.

பெரிய மூக்கு - பாலின கணிப்பு

பெரிய மூக்கு - பாலின கணிப்பு

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, ​​உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரும் விசித்திரமான கதைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, உங்களுக்கு கேட்க ஆர்வம் இல்லாதபோதும், அவர்களுடைய நிபுணத்துவ கருத்துக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளனர்! கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கூட வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே, கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை யூகிக்க நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர்.

கதைகள்

கதைகள்

இதற்காக பல பழைய கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அதில் மூக்கு பெரிதாக இருப்பதும் ஒன்று. உங்கள் மூக்கு பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, முன்னர் இருப்பதை விட சிறிது பெரிதாக இருப்பதாக உணர்ந்தால், பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். அந்த கதையின் படி மூக்கு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால் ஆண் குழைந்தை பெறுவீர்கள்!

ஆனால் இது ஒரு கட்டுக்கதை. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும், பெண் அல்லது ஆண் குழந்தை பெற சமமாக 50% வாய்ப்பு உள்ளது.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல செய்தி என்னவென்றால், கர்ப்ப காலத்தில் நம் மூக்கு பெரிதாவதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

கவலை

கவலை

நீங்கள் பினோசியோவிற்கு மாற்றமடையாதீர்கள், கவலைப்பட்டு ஓய்வெடுக்காதீர்கள். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலுக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதால், நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், அதைப் பற்றி ஆர்வத்துடன் அனுபவிக்கவும். குழந்தை பிறந்தவுடன், உங்கள் மூக்கின் அளவு மற்றும் நேரம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்பட நேரம் கிடைக்காது, உங்களுடைய முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதற்கு நேரமும் பொறுமையும் உங்களுக்கு இருக்கும், எல்லாம் சாதாரணமாகிவிடும். மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான கர்ப்ப காலத்தை அனுபவிக்க வாழ்த்துக்கள்!

உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கர்ப்ப காலத்தில் பெரிய அல்லது பரந்த மூக்கு ஏற்பட்டு உள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Has My Nose Grown Bigger During Pregnancy?

Pregnancy is one the most important and eventful period in your life. Some of us are prepared for everything pregnancy brings to table.
Story first published: Saturday, June 2, 2018, 12:32 [IST]
Desktop Bottom Promotion