For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பால் கக்குறது ஏன்னு தெரியுமா?... இப்ப தெரிஞ்சிக்கோங்க...

குழந்தைகள் பால் கக்குவது ஏன் என்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா? அதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

|

உங்கள் குழந்தை அதிகமாக உணவை கக்குகிறானா? அவன் இப்போது தான் உண்ண பழகுகிறான். அவன் மட்டுமல்ல, கிட்டத்தட்ட பாதி பச்சிளம் குழந்தைகள் உணவை உமிழும் வழக்கம் கொண்டுள்ளன. எனவே கவலை வேண்டாம். உமிழ்வது - எதுக்குதல் என்றும் சொல்லலாம் - பொதுவாக பிறந்த 4 மாதங்களில் உச்சகட்டமாக இருக்கிறது.

reasons for babies spit up

பால் அல்லது தாய் பாலுடன், காற்றையும் சேர்த்து விழுங்குவதால், திரவத்தில் உள்ள காற்று, மேலே வருகிறது, அதனுடன் சேர்த்து திரவமும் வாய் வழியாகவோ மூக்கு வழியாகவோ வெளியே வருகிறது.

குழந்தைகளுக்கு பொதுவாகவே நிறைய ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கொடுக்கப்படுகின்றன, சில வகையான உணவுகள் குழந்தைகளுக்கு பிடித்துவிதுவதால், அவை அதை அதிகமாக உண்டு விடுகின்றன, அது வெளியே வழிந்து விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகள்

குழந்தைகள்

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு ஜீரண உறுப்புக்கள், முழுதாக வளர்ந்திருக்காது. உங்கள் குழந்தையின் உணவுக்குழல் முடியும் இடத்தில் உள்ள, உணவு உள் வருவதையும் போவதையும் கட்டுப்படுத்தும் தசைகள், முழுமையாக வளர வேண்டும். அதனால் குழந்தைகள் நிறைய துணிகளை துவைக்க வைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏதாவது செய்ய முடியுமா?

ஏதாவது செய்ய முடியுமா?

இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.. உங்கள் குழந்தை சாப்பிட்டதை கக்காமல் இருக்க உணவு ஊட்டும்போது உங்கள் குழந்தையை நேராக நிமிர்த்தி உட்காரவைத்து கொடுக்கவும். குழந்தையை கையில் வைத்துக்கொண்டோ அல்லது கார் சீட்டில் உட்கார வைத்துக்கொண்டோ கொடுக்கும்போது, அவனது வயிற்றுக்கு அது நேராக செல்வதில்லை.

அமைதியான முறையில் ஊட்டுங்கள். உணவு ஊட்டும் முன் உங்களை சுற்றி அதிக சத்தமோ கவனத்தை சிதறடிக்கும் மற்ற விஷயங்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு கவனம் சிதறும்போதோ, அடம் பிடிக்கும்போதோ, பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்க வாய்ப்புள்ளது.

குழந்தை உணவு

குழந்தை உணவு

உங்கள் குழந்தைக்கு நீராகாரம் கொடுக்கும்போது, பாட்டிலில் உள்ள நிப்பிளில் உள்ள துளை மிகவும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சிறிதாக இருக்கும்போது காற்றையும் சேர்த்து விழுங்க வாய்ப்பு உள்ளது. மறுபக்கம், துளை மிகவும் பெரிதாக இருந்தால், பால் வேகமாக குழந்தையின் தொண்டைக்குள் சென்று புரையேற வாய்ப்புள்ளது.

குழந்தைக்கு ஏப்பம் வர வையுங்கள். உணவு கொடுக்கும்போது, சிறிது இடைவேளை விட்டு, குழந்தைக்கு ஏப்பம் வர விடுங்கள். அப்போது, காற்று வெளியே வந்துவிடுவதால் குழந்தை உணவை கக்காது (உங்கள் தோளில் ஒரு மெண்மையான துணியை போட மறக்காதீர்கள்). குழந்தைக்கு ஏப்பம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். ஒருவேளை ஏப்பத்திற்கான அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

குழந்தைக்கு ஏப்பம் வரவழைக்க வழிகள்

குழந்தைக்கு ஏப்பம் வரவழைக்க வழிகள்

வயிற்றுக்கு அழுத்தம் தர வேண்டாம். குழந்தையின் உடையும் டையாப்பரும் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். சாப்பிட்டவுடன், காரில் பயணத்தை தவிர்க்கவும். ஏனென்றால் கார் சீட் குழந்தையின் வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கலாம். குழந்தையை சாப்பிட்டவுடன் நெருக்க வேண்டாம். சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு குழந்தையை நேராக அமர வைக்கவும். அப்போது ஈர்ப்பு விசையும் நம் பக்கம் இருக்கும்.

பின் நீங்கள் குழந்தையை தூக்கிக்கொள்ளலாம். தேவைக்கு அதிகமாக ஊட்ட வேண்டாம். ஒவ்வொரு முறை ஊட்டும்போதும் உணவை குழந்தை துப்புகிறது என்றால், அதிகமாக கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அளவை குறைத்து கொடுத்து பாருங்கள். அவன், சற்று குறைந்த அளவில், சிறு சிறு இடைவெளிக்கு நடுவில் உன்ன ஆசை படலாம்.

புட்டிப்பால்

புட்டிப்பால்

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தை உணவை கக்குகிறது என்றால், உங்கள் உணவு முறையில் ஏதாவது மாற்றம் வேண்டுமா என்று மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். சில சமயம், மாட்டு பால் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

தூங்கும்போது உங்கள் குழந்தை உமிழ்கிறது என்றால், தலையை சற்று தூக்கியவாறு வையுங்கள். தலையணை தவிர்ப்பது நல்லது. குழந்தை தூங்கும் கட்டிலின் ஒரு புறம் போம் (foam) வெட்ஜ் அல்லது சிறிய மரப்பட்டை வைத்து அதன் மீது தலையை கவனமாக வைக்கலாம்.

எப்போது துப்புவதை நிறுத்தும்?

எப்போது துப்புவதை நிறுத்தும்?

உங்கள் குழந்தையின் தசைகள் வளர்ந்து வலுவடைந்த உடன், உணவை குழந்தையால் வயிற்றுக்குள் வைத்துக்கொள்ள முடியும். பல குழந்தைகள் 6 முதல் 7 மாதங்களில், கக்குவதை நிறுத்தி விடும். ஆனால் சில குழந்தைகள் ஒரு வயது வரை இதை தொடர்ந்து செய்யும்.

எவ்வாறு தெரிந்து கொள்வது?

எவ்வாறு தெரிந்து கொள்வது?

அவன் உணவை கக்குகிறானா இல்லை வாந்தி எடுக்கிறானா என்று எப்படி தெரிந்து கொள்ளலாம்?

வாந்தி எடுக்கும்போது உணவு வேகமாகவும் அதிக அளவிலும் வெளியே வரும். ஆனால் கக்கும்போது, சிறிய அளவிலேயே வெளியே வரும். உங்கள் குழந்தை சோர்வாக காணப்பட்டால், அது வாந்தி எடுக்கிறது என்று அர்த்தம். ஆனால் கக்குவது குழந்தைகளை ஒன்றும் செய்யாது.

எப்போதும் கக்குவது ஆபத்தானதா?

எப்போதும் கக்குவது ஆபத்தானதா?

குழந்தை வளர்ப்பில் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இது. உங்கள் குழந்தையின் உடல் எடை கம்மியாக இருக்கிறது என்றால், மருத்துவரை சந்தியுங்கள். குழந்தைகள் நிறைய கக்குகிறது, ஆனால் உடல் எடை கூடவே இல்லை என்றாலோ, மூச்சு விட சிரமப்படுகிறது என்றாலோ, இரைப்பை குடல் அழற்சி நோய் (GERD) ஆக இருக்கலாம்.

வாந்தி

வாந்தி

குழந்தை திரும்ப திரும்ப வாந்தி எடுக்கிறது என்றால், உடனடியாக மருத்துவரை பாருங்கள். அதுவும் புயல் வேகத்தில் வாந்தி எடுக்கும்போது, கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இது, வயிற்றின் அடியில் உள்ள தசைகள் தடிமனாகி, உணவின் ஓட்டத்தை தடுக்கும் பைலோரிக் ஸ்டெனோசிஸ் ஆக கூட இருக்காலாம். ஒரு வயது குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனை இது.

உங்கள் குழந்தை பச்சை நிறத்தில் பித்த வாந்தி எடுத்தாலும் உடனே மருத்துவரை சந்திக்கவும். இது குழந்தையின் குடலில், அடைப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அவ்வாறு இருந்தால், அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும். பரிசோதனைகளுக்குப் பின், அறுவை சிகிச்சையும் கூட தேவை படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why babies spit up, you should know the reason

Is it normal for my baby to spit up? read here and know it.
Story first published: Tuesday, August 7, 2018, 11:51 [IST]
Desktop Bottom Promotion