For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கிய பின் ஆரோக்கியம் என அனைத்து திடஉணவுகளையும் உடனே கொடுக்க தொடங்கி விடக்கூடாது. குறிப்பாக மீன் கொடுக்க தொடங்குமுன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது அவசியம். ஏனெனில் மீன

|

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கிய பின் ஆரோக்கியம் என அனைத்து திடஉணவுகளையும் உடனே கொடுக்க தொடங்கி விடக்கூடாது. ஒவ்வொரு உணவும் செரிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை பொருத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் மீன் என்பது பல இன்றியமையாத அத்தியாவசிய சத்துக்களை கொண்ட உணவாகும்.

When and what type of fish should give to a baby

மீன் அதிகளவு புரதம் மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை கொண்ட உணவாகும். அதுமட்டுமின்றி கொழுப்பு அமிலங்களான டிஎச்ஏ மற்றும் ஈபிஏ போன்றவையும் நிறைந்துள்ளது. இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் பார்வைத்திறன் அதிகப்படுத்தலுக்கு முக்கியமானவை. இவ்வளவு சத்துக்கள் உள்ள மீனை சரியான நேரத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும் இல்லையேல் அதுவே அவர்களுக்கு தீங்காய் முடிந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதிருந்து கொடுக்கலாம்

எப்போதிருந்து கொடுக்கலாம்

குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு மீன் கொடுக்க தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அப்பொழுதான் அவர்களின் நோயெதிப்பு மண்டலம் திட உணவுளை கையாளக்கூடிய சக்தியை பெற்றிருக்கும். குழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கும்முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. பொதுவாகவே மீன் ஒரு ஒவ்வாமை நிறைந்த உணவாகும். பெரியவர்களுக்கே சில சமயம் மீன்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே மீனால் உங்கள் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொண்டு குழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கிவும்.

யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது.

யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது.

மேலே கூறியது போல மீன் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக உங்கள் குடும்பத்திலோ அல்லது முன்னோர்களிலோ யாருக்கேனும் ஆஸ்துமா, உணவு ஒவ்வாமைகள் போன்ற நோய் இருப்பின் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் ஒருபோதும் மீன் கொடுக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

எப்படி கொடுக்கலாம்

எப்படி கொடுக்கலாம்

முதன் முதலாக மீன் கொடுக்கும்போது அதிகளவு கொடுக்க வேண்டாம். அரை ஸ்பூன் அளவிற்கு குறைவான மசாலா சேர்க்கப்பட்டு நன்கு வேகவைக்கப்ட்ட மீன் கொடுக்கலாம். மீன் முட்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். குழந்தைகள் வழக்கமாக சாப்பிடும் உணவோடு சேர்த்து இதையும் ஊட்டிவிடுங்கள். நன்கு மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அல்லது மசிக்கப்பட்ட பருப்புடன் சேர்த்து ஊட்டுவது நலம். உங்கள் குழந்தையிடம் ஏதேனும் வித்தியாசமான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

எந்த வகை மீன் கொடுக்கலாம்

எந்த வகை மீன் கொடுக்கலாம்

வெள்ளை சதைப்பகுதி அதிகம் உள்ள மீன்களை முதலில் கொடுக்கலாம். இது எளிதில் செரிப்பதோடு குறைவான ஒவ்வாமையையே ஏற்படுத்தும். நன்னீர் வகை மீன்கள் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கும் மேலும் குறைவான அளவு பாதரசத்தை கொண்டிருக்கும். பாம்பிரட் அல்லது டிரௌட் வகை மீன்கள் சிறந்த தேர்வாக அமையும். டூனா, ஷெல் மீன்கள் போன்றவற்றை குழந்தைக்கு மூன்று வயது ஆகும்வரை கொடுக்கவேண்டாம். முதலில் ஒரே வகை மீனை கொடுங்கள், ஒருவேளை எந்த அலர்ஜியும் இலையென்றால் பின் அடுத்த வகைக்கு மாறலாம். சிறிய மீன்கள் பெரும்பாலும் குறைந்த அளவு பாதரசத்தை கொண்டிருக்கும் எனவே அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

எந்த வகை மீன் கொடுக்கக்கூடாது

எந்த வகை மீன் கொடுக்கக்கூடாது

மீன்கள் எந்த அளவிற்கு நன்மை செய்யக்கூடியதோ அதே அளவு தீமையும் செய்யக்கூடியது. எனவே எச்சரிக்கையுடன் மீனை கொடுக்க தொடங்குங்கள். குறிப்பாக, இந்த வகை மீன்களை மறந்தும் குழந்தைகளுக்கு கொடுத்துவிடாதீர்கள். சுறா, திருக்கை போன்ற மீன்களில் இருக்கும் அதிகளவு பாதரசம் குழந்தையின் மூளையை பாதிப்பதோடு அவர்களின் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். பாட்டில்களில் அடைக்கப்பட்ட மீன்களை எப்போதும் கொடுக்கக்கூடாது அதன் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல பதப்படுத்தப்பட்ட மீன்களையும் குழந்தைக்கு கொடுக்கக்கூடாது.

அலர்ஜியை எவ்வாறு கண்டறிவது?

அலர்ஜியை எவ்வாறு கண்டறிவது?

குழந்தைக்கு மீன் கொடுத்த பின் நன்றாக கவனியுங்கள். அவர்களுக்கு உதடுகளில் வீக்கம், சரும தடிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மேற்கொண்டு மீன் கொடுக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அழுவது கூட அலர்ஜியின் ஒரு அறிகுறிதான்.

மாற்றுவழி

மாற்றுவழி

ஒருவேளை உங்கள் குழந்தைக்கு மீனால் அலர்ஜி ஏற்பட்டால் கவலை படாதீர்கள். அனைத்து குழந்தைக்கும் மீன் ஒத்துக்கொள்வது கடினம்தான். மீனில் உள்ள சத்துக்கள் அனைத்தும் பிற உணவுகளிலும் இருக்கின்றது. கீரை, வால்நட், பூசணிக்காய், முட்டை என பல உணவுகளில் புரதமும், ஒமேகா 3 அமிலங்களும் உள்ளது. குறிப்பாக உங்கள் குழந்தையை மீன் சாப்பிட கட்டாயப்படுத்தாதீர்கள், இல்லையேல் அதுவே அவர்களுக்கு மீன் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். இது பின்னாளிலும் அவர்களை மீன் சாப்பிட விடாது. அவர்களுக்காய் தோன்றும்போது மீன் சாப்பிட தொடங்கட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When and what type of fish should give to a baby

Fish has many essential proteins and acids. But before start feeding fish to a baby we should check something.
Story first published: Thursday, July 19, 2018, 18:24 [IST]
Desktop Bottom Promotion