TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
சுகப் பிரசவம் நடக்கணும்னா பிரசவத்துக்கு முன்னாடி என்ன செய்யணும்?...
பெண்களுக்கு பிரசவ காலம் என்பது மிக முக்கியமான காலமாகும். இந்த காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் உடல் மொழியையும் மன மொழியையும் புரிந்து கொண்டு நடைபெறும்.
அதனால் தான் மருத்துவர்கள் கர்ப்ப காலம் எளிதாக இருக்க மாலை நேரத்தில் சிறிது தூரம் நடப்பது, கனிவான இசை கேட்பது போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர். நீங்கள் செய்யும் சில சிறிய செயல்கள் உங்கள் கர்ப்ப பையின் சுருங்கி விரிதல் இயக்கத்தை மேம்படுத்தி ஏன் சுகப்பிரசவம் நடக்க கூட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்குமாம். இது ஒரு இயற்கையான ரீதியில் பிரசவத்தை எளிதுபடுத்தக் கூடிய வேலையாகும்.
பிரசவ வலி
40 வாரங்கள் கருவை சுமந்த பிறகு உங்கள் குழந்தையானது முற்றிலும் வளர்ச்சி அடைந்து வெளிவர தயாராக இருக்கும். அந்த நிமிடத்தில் இருந்தே உங்களுக்கு கர்ப்ப பை சுருங்குதல் நடைபெற ஆரம்பித்து விடும். அதே நேரத்தில் உங்களுக்கு இந்த செயல்கள் நடக்கா விட்டால் சில இயற்கை வழிகள் மூலம் பிரசவத்தை தூண்டலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
மார்பக காம்புகளை தூண்டுதல்
தாய்ப்பால் சுரப்பிற்கு காரணமான ஆக்ஸிடோசின் ஹார்மோன் தான் கர்ப்ப பை சுருங்கி விரிதலுக்கும் உதவுகிறது. எனவே பிரசவத்தை எளிதில் ஏற்படுத்த உங்கள் கைகளை மார்பகங்களின் மீது வைத்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து விட வேண்டும். ரெம்ப அழுத்தாமல் மென்மையாக இருக்க வேண்டும். 15 நிமிடங்கள் என்று ஒவ்வொரு மார்பக த்திற்கும் செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் உங்கள் கர்ப்ப பை சுருங்குதல் நடந்து உடனே பிரசவம் வலி உண்டாகும். இந்த முறையால் பிரசவத்தில் எந்த விளைவும் ஏற்பட்டதில்லை என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த முறையால் 37% பெண்கள் அடுத்த 72 மணி நேரத்தில் தங்கள் பிரசவத்தை நெருங்கியுள்ளனர் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஹோமியோபதி
புல்ஷேட்டிலா மற்றும் காலோபைலுயம் இந்த இரண்டும் ஹோமியோபதி மூலிகை மருந்துகள்.பிரசவ வலியை உண்டாக்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது. நீங்கள் ஒரு அதிகாரப்பூர்வமான ஹோமியோபதி மருத்துவரிடம் சென்று அவரின் பரிந்துரையில் இதை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றாகும். ஆனால் ஆராய்ச்சிகளின் கருத்துப்படி பார்த்தால் இதனால் எந்த நம்பகமான மாற்றமும் ஏற்படவில்லை என்றே கூறுகின்றனர்.
சிவப்பு ராஸ்பெர்ரி இலைகள்
ராஸ்பெர்ரி இலைகளை மாத்திரை வடிவிலோ அல்லது தேநீர் போட்டு குடித்து வந்தாலோ உங்கள் பிரசவத்தை தூண்டலாம். கடைசி 3 மாதங்கள் இதை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது. இல்லையென்றால் கர்ப்ப பையில் தூண்டுதல் விளைவை ஏற்படுத்தி விடும்.
நடைபயிற்சி
கர்ப்ப பையில் குழந்தையின் தலையின் அழுத்தம் நமது உடலில் ஆக்ஸிடோசினை உண்டு பண்ணுகிறது. ஆக்ஸிடோசின் சுரப்பு பிரசவத்தை ஏற்படுத்தும். எனவே மெதுவாக நடந்து கொடுங்கள். குழந்தை கீழே இறங்கி வெளியே வர ஆயத்தமாகும். ஆனால் சோர்வாகும் அளவிற்கு நடக்க வேண்டாம்.
விளக்கெண்ணெய்
1-4 அவுன்ஸ் விளக்கெண்ணெய்யை உங்களுக்கு விருப்பமான ஜூஸில் கலந்து குடித்து கொள்ளுங்கள். இதை நீங்கள் 40 வது வாரத்தில் செய்யும் போது சில மணி நேரங்களில் தொடர்ச்சியாக கர்ப்ப பை சுருங்க ஆரம்பித்து விடும். அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு முறை பருகுங்கள். விளக்கெண்ணெய் வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி கர்ப்ப பை இயக்கத்தை தூண்டி விடுகிறது.
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம் கர்ப்ப பை வாயை மென்மையாக்கி பிரசவத்திற்கு வழி வகுக்கிறது. குழந்தை தாமதமின்றி பிறக்க அல்லது உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு எதாவது ஆபத்து என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். பிரசவம் குறித்து உடனடியாக ஆலோசனை செய்து அதன்படி செயல்படுங்கள். ஏனெனில் பிரசவத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்திருப்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமானது.