For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கே குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்! ஏன் தெரியுமா?

|

இந்த உலகில் இருக்கிற அத்தனை கலாச்சாரங்களிலும் பெண்களைச் சுற்றியே பல கட்டமைப்புகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒவ்வொரு பழக்க வழக்கங்கள்,நடைமுறைகள், எல்லாமே வித்யாசமானதாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஒர் இனக்குழு மக்களிடையே நிலவும் விசித்திர பழக்கங்களைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். அமிஷ் கலாச்சாரம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவிலும் கனடாவிலும் இந்த மக்கள் பரவலாக வாழ்கிறார்கள். அமிஷ் கலாச்சாரத்தில் வாழ்கிற பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கடைபிடிக்கிற கலாச்சாரங்கள் தான் இது.

பொதுவாக கர்ப்பிணிகள் என்று சொன்னாலே கவனமாக இருக்க வேண்டும், உணவு,பயணம் ஆகியவற்றை எல்லாம் பார்த்து பார்த்து கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பெண்கள் தங்களின் கர்ப காலத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Courtesy

கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக நடக்கிற வளைகாப்பு நிகழ்வு மற்றும் பிற சடங்குகள் என எதுவும் இவர்களுக்கு நடப்பதில்லை. ஒன்பது மாதங்களும் எந்த கட்டுப்பாடுகளும் இவர்களுக்கு இருப்பதில்லை குழந்தை பிறக்கும் நாள் வரையிலும் கடுமையாக வேலை செய்கிறார்கள். அப்போதும் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

#2

#2

Image Courtesy

இன்னமும் வீட்டில் பிரசவம் நடப்பதை தான் இந்த மக்கள் விரும்புகிறார்கள். ஒரு சில பெண்கள் அங்கிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தை பிறந்த அன்றைக்கே வீடு திரும்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு நாளுக்கும் மேல் தங்கும் நிலை ஏற்பட்டால் மிகவும் அதிசய செயலாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் சர்வ சாதரணமாக ஐந்து முதல் ஏழு குழந்தைகள் வரை இருக்கிறார்கள்.

#3

#3

Image Courtesy

மருத்துவமனையை விட வீட்டில் பிரசவம் நடப்பது தான் பாதுகாப்பாக இருக்கிறது. பிரசவ வலியில் துடிக்கிற போது நமக்கு பழக்கமான இடத்தில் நம் உறவினர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள் எப்படியும் நம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்ற எண்ணமே பன்மடங்கு தைரியத்தை வழங்கும்.

அது மட்டுமல்லாமல் ஒரு வீட்டில் பிரசவம் நடக்கிறது என்று சொன்னால் எல்லா உறவினர்களும் வருவார்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள். அதனால் அவர்களுக்கும் நமக்குமான இணக்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

#4

#4

Image Courtesy

நம்மூரில் இருப்பது போலவே இங்கேயும் திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றுக் கொள்வதை மிகப்பெரிய பாவமாக பார்க்கிறார்கள்.

அதே போல அவர்களுக்குள்ளேயே உட்பிரிவுகள் நிறைய இருக்கிறது. ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்களிடமிருந்து தான் திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். தங்கள் பிரிவுக்குள்ளேயே வைத்துக் கொள்வதில்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு பெண் திருமணத்திற்கு முன்னால் கருத்தடைந்து விட்டால் கருவை கலைக்க யாருமே முன்வருவதில்லை. பதிலாக குழந்தையை பெற்று திருமணமான தம்பதிகளுக்கு தத்து கொடுக்கிறார்கள்.

#5

#5

Image Courtesy

குழந்தை பிறப்பு, பிரசவம் என்று சொன்னாலே அந்தப் பெண் வலியால் கத்துவது தானே திரைப்படங்களில் எல்லாம் காட்சியாக வைப்பார்கள். ஆனால் அமிஷ் கலாச்சாரத்தில் திரைப்படங்களில் மட்டுமல்ல நேரில் கூட அதற்கு வாய்ப்பேயில்லை.

குழந்தை பிறக்கும் போது வலியை அந்தப் பெண் பொருத்துக் கொள்ள வேண்டும், கத்தக்கூடாது. இது தாயின் மனநிலையையும் குழந்தையின் மனநிலையும் சந்தோஷமாக வைத்திருக்க இது உதவுவதாக சொல்கிறார்கள்.

#6

#6

Image Courtesy

அமிஷ் கலாச்சாரத்தின் படி கர்ப்பிணிப்பெண்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. வயிற்றிலிருக்கும் குழந்தையைக் கூட அவ்வளவு சாதரணமாக படம் எடுத்திட முடியாது.உரிய காரணங்கள் சொல்லி அனுமதி வாங்கி அவை ஏற்றுக் கொண்டால் தான் நீங்கள் குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

#7

#7

Image Courtesy

கர்ப்பிணிகளுக்கு இந்தியாவில் வளைகாப்பு என்ற சம்பிரதாயம் பரவலாக இருப்பது போலவே அமெரிக்காவில் கேக் வெட்டி பரிசுப் பொருட்களை கொடுக்கும் நிகழ்வுகள் சாதரணமாக நடக்கும்.

இது தாயையும், குழந்தையையும் வரவேற்கும் பொருட்டு இப்படிச் செய்கிறார்கள். ஆனால் இப்படியான எந்த சடங்கும் அமிஷ் பெண்களிடத்தில் இருப்பதில்லை. இந்த நிகழ்வை அவர்கள் கொண்டாட்டமாக பார்ப்பதில்லை இவ்வளவு ஏன் வெளியில் வரக்கூட சிலர் தயங்குவார்களாம்.

#8

#8

Image Courtesy

மூன்றாவது ட்ரைம்ஸ்டர் நெருங்கிவிட்டதென்றாலே பலரும் வீட்டோடு இருப்பார்கள், கடுமையான வேலை செய்வதை தவிர்த்துவிடுவார்கள்,வீட்டை விட்டு வெளியில் செல்வதையும் தவிர்ப்பார்கள். ஆனால் இந்த பெண்கள் அப்படியல்ல பிரசவ தேதி வரும் வரையில் அன்றாடம் வேலை செய்வதைப் போலவே தொடர்ந்து செய்கிறார்கள். வயல்வளிகளில் எல்லாம் எட்டு மாதம் நிரம்பிய பெண்களை சாதரணமாக பார்க்க முடியும்.

#9

#9

Image Courtesy

இங்கே குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட காலம் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதை அனைவரும் ஊக்குவிப்பதால் வெளியிடங்கள், பொது இடங்கள் என எங்கு வேண்டுமானாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

நம்முடைய மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் கூட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை விசித்திரமாக பார்ப்பார்கள். ஆனால் இங்கே அப்படியான பிரச்சனை எல்லாம் இல்லை.

#10

#10

Image Courtesy

இங்கே சர்வ சாதரணமாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள் பரம்பரை பரம்பரையாகவே இந்த வழக்கம் தொடர்கிறது.

ஒற்றைக் குழந்தை தான் மிகவும் அபூர்வமாக இருக்கிறது. முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் இரண்டாவது பிரசவத்திற்கும் தயாராகிறார்கள். அதோடு இங்கே குழந்தையின் பராமரிப்புத் தொகையை அவர்களுக்கான சர்ச் ஏற்றுக் கொள்வதால் குழந்தை பெற்று வளர்க்க எந்த சிரமமும் அவர்களுக்கு இருப்பதில்லை.

#11

#11

Image Courtesy

இங்கே குழந்தை பெற்றுக் கொள்ள எந்த தடையுமில்லை. அவர்களுக்கு திருமணமானதிலிருந்து நாற்பது வயது எட்டும் வரையிலும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.

பெரிய குடும்பம் தான் கௌரவமான குடும்பம் என்ற வழக்கம் இருப்பதினால் ஒவ்வொரு குடும்பதில்லும் ஏழு குழந்தைகள் வரை அல்லது அதற்கும் மேலே கூட இருக்கிறார்கள்.

#12

#12

Image Courtesy

இவர்கள் கர்ப்பத்தை தான் கொண்டாடுவதில்லையே தவிர குழந்தை பிறப்பினை கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டம் என்றது, வெறும் பரிசுப் பொருட்கள் பரிமாறுவதுடன் நின்றுவிடுவதில்லை.

தாய்க்கு வேண்டிய அனுசரணைகளை வழங்குகிறார்கள். இதில் பெண்ணின் கணவனுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் இங்கே இருக்கிற பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுவதில்லை.

#13

#13

Image Courtesy

இவர்கள் குழந்தைகளை எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைப்பதில்லை. ஏனென்றால் அதிகம் படித்து வெளியுலகத்தை தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாள் இந்த சமூகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விடும் அதனால் யாரையும் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைப்பதில்லை என்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Story Of Amish Community Pregnant Women

Shocking Story Of Amish Community Pregnant Women
Story first published: Friday, May 18, 2018, 15:44 [IST]
Desktop Bottom Promotion