For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் இயற்கை உணவுகள்..!

உங்கள் குழந்தையின் வளர்ச்சியின் ஆரம்ப கால கட்டத்திலேயே குழந்தையின் உடலை வஜ்ரமாக்கும் இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்க முயலுங்கள்! அப்படி எந்தெந்த உணவுகளை உண்டால், குழந்தைகள் கொழுகொழுவென ஆரோக்கியமாக இர

|

தம்பதியர்கள் குழந்தைகளை பெற்று எடுத்து பெற்றோராய் மாறிய பின் எப்படி தம்பதியர் எனும் ஸ்தானம் பெற்றோர் எனும் பொறுப்பு கூடியதாக உயர்கிறது; அதே போல் நீங்கள் பெற்ற குழந்தை உங்களுக்கு அப்பா - அம்மா எனும் பட்டத்தை அளித்து பதவி உயர்வு அளிக்கிறது. இவ்வாறு உங்களை உயர்த்தி வைத்த உங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப்போகிறீர்கள்?

இந்த கேள்விக்கு அட என்னப்பா நான் தானே குழந்தையை 21 வயது வரை பார்த்துக் கொள்ள போகிறேன்; பின் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். குழந்தை 21 வயது வரை எந்த நோய் நொடிகளும் இன்றி, வாழ வேண்டியது அவசியம்; 21 வயதிற்கு மேலும் அதன் வாழ்நாளின் கடைசி நேரம் வரையிலும் நீங்கள் இந்த உலகிற்கு கொண்டு வந்த குழந்தை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம்!

natural weight gain foods for your babies and kids

ஆகையால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியின் ஆரம்ப கால கட்டத்திலேயே குழந்தையின் உடலை வஜ்ரமாக்கும் இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்க முயலுங்கள்! அப்படி எந்தெந்த உணவுகளை உண்டால், குழந்தைகள் கொழுகொழுவென ஆரோக்கியமாக இருப்பர் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்ப்பால்

தாய்ப்பால்

குழந்தைகள் பிறந்த நொடி முதல் குறைந்தது ஆறு மாதங்கள் வரை அல்லது தாய்ப்பால் சுரப்பு அன்னையின் உடலில் நிகழும் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். அது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும், உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சியை ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி அடையச் செய்ய உதவும்.

மேலும் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்த, நீங்கள் சரியாக தான் தாய்ப்பால் கொடுக்கிறீர்களா என்று அறிய குழந்தை ஒரு நாளைக்கு 6- 8 முறை சிறுநீர் கழித்து உங்களை டயப்பர் மற்ற வைக்கிறதா என்றும், 3-4 முறை மலம் கழிக்கிறதா என்றும் சோதித்து அறிய வேண்டியது மிகவும் அவசியம்! இது அன்னையர்கள் தலையாய கடமையும் ஆகும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

குழந்தைகள் கொழுகொழு என்று மாற, வழவழவென இருக்கும் வாழைப்பழத்தை அளித்து வர வேண்டியது மிகவும் அவசியம்; குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை சரியான முறையில் அளித்து வந்தால், குழந்தைகள் கொழுகொழுவென மாறுவதுடன் ஆரோக்கியமாக விளங்குவர். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

வாழைப்பழத்தை நன்கு மசித்து அளிக்கலாம்; ஸ்மூத்தி போன்ற பானமாக - ஜூஸாக தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். மேலும் கேரள வாழைகளை வேகவைத்து குழந்தைகளுக்கு அளித்து வருவது அதிக பலனை தரும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

பருப்புகள்

பருப்புகள்

குழந்தைகளுக்கு திட உணவுகள் தரத்துவங்கும் நேரத்தில், அதாவது பிறந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது தாய்மார்களின் கடமையாகும். பாசிப்பருப்பு எளிதில் ஜீரணமாக கூடியது; பருப்பு சாதம், சூப், கூழ் போன்றவற்றை தயாரித்து ஊட்டலாம். பருப்புகளில் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.

ராகி - கேழ்வரகு

ராகி - கேழ்வரகு

ராகி கஞ்சி அதாவது கேழ்வரகு கூழ் அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று; இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன. இதனை இட்லி, கூழ், தோசை போன்ற உணவுகளாக தயாரித்து குழந்தைக்கு அளிக்கலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

குழந்தைகளுக்கு 12 மாதங்கள் வரை தயிர் போன்ற பால் பொருட்களை அளிக்கலாம்; ஆனால், மாட்டுப்பால், பாக்கெட் பால், வெண்ணெய், சீஸ் எனும் பாலாடைக்கட்டி உணவுகளை கண்டிப்பாக ஒரு வயது நிரம்பிய பின்னரே அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தயிர் சாதம், தயிர் போன்றவற்றை உணவக அளிக்கலாம்; இவை அதிக கால்சியம் மற்றும் புரதச்சத்து கொண்டவை.

இனிப்பு உருளைக்கிழங்கு!

இனிப்பு உருளைக்கிழங்கு!

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் திட உணவுகளில், பெரும்பாலான குழந்தைகளின் கவனத்தை கவர்வது இனிப்பு உருளை அலல்து உருளை கிழங்குகள் தான். இந்த கிழங்குகள் வைட்டமின் ஏ, சி, பி6, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.

நெய்

நெய்

குழந்தைகள் 8 மாத வயதை அடைந்த பின் அவர்களின் உணவில் நெய் சேர்க்கலாம்; குழந்தையின் வளர்ச்சிக்கும், உடல் எடை அதிகரிப்பிற்கும் நெய் அதிகம் உதவும், நெய்யினை குழந்தைக்கு கொடுக்கும் கிச்சடி, கூழ், உணவுகளில் ஒரு சில துளிகள் மட்டுமே விட்டு அளிக்க வேண்டும்; அதற்கு மேலாக அளிப்பது குழந்தையின் உடலுக்கு நன்மை பயக்காது!

முட்டை

முட்டை

குழந்தைகளுக்கு ஒரு வயது ஆன பின்பு தான் அவர்களுக்கு முட்டையினை அறிமுகம் செய்ய வேண்டும்; அதற்கு முன்பு அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் நலத்திற்கு நல்லதல்ல; முட்டையை புரதத்தின் ஆற்றல் மையம் என்றே கூறலாம். இதனை பொரித்தோ, ஆம்லெட் போட்டோ, வேக வைத்தோ - எந்த வடிவத்திலும் குழந்தைக்கு 1 வயதிற்கு பின் அளிக்கலாம்.

உலர் பழங்கள்

உலர் பழங்கள்

குழந்தைகள் திட உணவு உண்ணத் தொடங்கிய பின், அவர்களுக்கு உலர் பழ - பருப்பு வகைகளை அவர்கள் உடல் ஏற்றுகொள்ளும் உணவின் வடிவில் தயாரித்து அளிக்க வேண்டியது அவசியம். அதாவது பாதாம், பிஸ்தா மற்றும் பல உலர் பழ பருப்பு வகைகளை ஒன்றாய் சேர்த்து சத்துமாவு போடி தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்; அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எடையை அதிகரிக்கவும் உதவும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் இ, சி, பி6, கே, பேன்டோதெனிக் அமிலம், காப்பர், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இந்த வெண்ணெய் பலத்தை குழந்தைகளுக்கு பழச்சாறு - பாலுடன் கலந்த ஸ்மூத்தி வடிவில் அளித்து வருதல் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏராளமான சத்துக்களை கொண்டவை; இவற்றை உணவில் சேர்த்து, சூப் தயாரித்து, பழச்சாறு போன்றவற்றை தயாரித்து குழந்தைகளுக்கு விதவிதமாக அளிக்கலாம்; காய்களை நன்கு வேகவைத்து, சாலட் போன்று செய்தும் அளிக்கலாம். பழங்களை டிக்கா மற்றும் சாலட் போன்று செய்து அளித்து வரலாம்.

சிக்கன்

சிக்கன்

சிக்கன் என்றதும் குழந்தைகளுக்கு கடையில் விற்கும் பிராய்லர் சிக்கனை அளித்து விடாமல், நாட்டுக்கோழி சிக்கனை - இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழியின் இறைச்சியை நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு பிடித்த வகையில் தயாரித்து அளிக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ணும் அசைவ உணவாக சிக்கன் விளங்குகிறது; எனவே இதை குழந்தைகள் இரசித்து உண்பர்; இது அவர்தம் வளர்ச்சிக்கும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural weight gain foods for babies and kids

12 Natural weight gain foods for your babies and kids
Story first published: Monday, August 13, 2018, 17:16 [IST]
Desktop Bottom Promotion