For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு பூண்டு அளிக்கலாமா? அளிப்பது நல்லதா? கெட்டதா?

குழந்தைகளுக்கு பூண்டு அளிக்கலாமா வேண்டாமா? அளித்தால் நல்லது தானா அல்லது குழந்தையின் நலத்திற்கு கேடா என்ற தகவல்களை விரிவாக படித்து அறிவோம்!

|

குழந்தைகளுக்கு திட உணவுகள் அளிக்கும் பொழுது மிகுந்த சத்து உள்ள உணவுகளை அளித்தல் வேண்டும். குழந்தைகள் விவரம் தெரியாத - அர்த்தம் புரியாத வயதில் தான் நாம் என்ன கொடுத்தாலும், சுவையை பெரிதாக பார்க்காது, லேசாக அடம் பிடித்துவிட்டு உண்டு விடுவர்; கொஞ்சம் வளர்ந்து விட்டால் பொது, அது நல்லாயில்லை, இது நல்லாயில்லை என்று சுவைக்காக சாப்பிட ஆரம்பித்து விடுவர். எனவே, விவரம் தெரியா, அர்த்தம் புரியா குழந்தை பருவத்திலேயே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை எல்லாம் கொடுத்து விட வேண்டும்; நல்ல பழங்கள் மற்றும் சத்துள்ள காய்கறிகளையும் அப்பொழுதே அறிமுகப்படுத்தி விட வேண்டும்.

Is Garlic Safe for Babies

குழந்தைகளுக்கு சத்துள்ள - ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அறிமுகப்படுத்தி, அவற்றையே தொடர்ந்து அளித்து அந்த உணவுகளை பிடிக்கும் மனப்பாங்கை குழந்தைகளில் ஏற்படுத்துவது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது. இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு பூண்டு அளிக்கலாமா வேண்டாமா? அளித்தால் நல்லது தானா அல்லது குழந்தையின் நலத்திற்கு கேடா என்ற தகவல்களை விரிவாக படித்து அறிவோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு - பாதுகாப்பானதா?

பூண்டு - பாதுகாப்பானதா?

பூண்டினை குழந்தைகளுக்கு அளிப்பது பாதுகாப்பானதா என்று கேட்டால், அதற்கு பதில் - கட்டாயம் பாதுகாப்பானது தான்! ஆனால், சரியான பூண்டு வகையை தேர்ந்தெடுத்து மிகக் குறைவான அளவில் குழந்தைகளுக்கு கொடுத்து வருதல் வேண்டும். சில சமயங்களில் புதிதாக உண்ட பூண்டின் காரணமாக அலர்ஜி ஏற்படலாம்; ஆனால், அது பயம் கொள்ளக் கூடியதல்ல. மருத்துவ ஆலோசனை செய்து குழந்தைகளுக்கு பூண்டு ஒத்து கொள்ளுமா இல்லையா என்று மட்டும் கேட்டு அறிதல் வேண்டும்.

பூண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிகம் உதவுகிறது; ஆகையால், சரியான முறையில் பூண்டு சேர்த்த சுவையான உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தாய்மார்களின் கடமை ஆகும்.

எந்த வயதில் அளிக்க வேண்டும்?

எந்த வயதில் அளிக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 6 மாத காலம் வரை கண்டிப்பாக அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவுகளை அளிக்க தொடங்க வேண்டும்; அந்த சமயங்களிலும் கண்டிப்பாக தாய்ப்பாலை நிறுத்தாமல் அளித்து வர வேண்டும். இந்த திட உணவு அறிமுகப்படுத்தும் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ருசியாக இருக்கும் வகையில் உணவுகளை சமைத்து, நன்கு மசித்து அளிக்க வேண்டும்.

குழந்தைகள் 10-11 மாத கால வயதினை அடையும் பொழுது பூண்டு போன்ற பலத்த உணவுகளை அறிமுகபடுத்தலாம். குழந்தைகளின் 10வது மாதம் முதல் 12 ஆம் மாதம் வரை சிறிது சிறிதாக பூண்டினை உணவில் சேர்த்து அளித்து, ஒரு வயதிற்கு பின் உணவிற்கு போதுமான அளவு பூண்டு சேர்த்த உணவுகளை குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

எப்படிப்பட்ட பூண்டு அளிக்க வேண்டும்?

எப்படிப்பட்ட பூண்டு அளிக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு பச்சையான பூண்டுகளை அளிக்கக் கூடாது; மீறி அளித்தால், குழந்தைகளின் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே நன்கு சமைத்த பூண்டுகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். குழந்தைக்கு கொடுக்க சமைக்கப்படும் உணவின் சமையலுக்கு தேர்வு செய்யப்படும் பூண்டு வெண்மை நிறம் கொண்டதாக, நன்கு சாறு வளம் கொண்டதாக அதாவது ஜூஸியாக, தெளிவானதாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பூண்டின் சுவை சேர்த்த உணவு பிடிக்காமல் இருந்தால், கொஞ்சம் சர்க்கரையை உணவில் சேர்த்து அளிக்கலாம், உணவு சர்க்கரை உடன் சேர்ந்து சாப்பிட பொருத்தமானதாக இருந்தால் சேர்க்கலாம்.!

என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்?

என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்?

பூண்டினை மேற்கூறிய முறையில் சரியாக தேர்வு செய்து, குழந்தை விரும்பக்கூடிய உணவுகளை சமைத்தல் வேண்டும். உதாரணத்திற்கு அனைத்து குழந்தைகளும் ரசம் சாதத்தை விரும்பி உண்பர்; எனவே பூண்டு நன்கு சேர்த்த ரசமாக சமைத்து குழந்தைக்கு அளிக்கலாம். பூண்டு சேர்த்த பிரட் அதாவது கார்லிக் பிரட் என்பதை பிள்ளைகளுக்கு நொறுக்குதீனியாக அளிக்கலாம். குழந்தைகளுக்கு அசைவ சுவை பிடித்திருந்தால், பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்த சூப் அதாவது கார்லிக் சிக்கன் சூப் தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

ஏற்படும் ஒவ்வாமை ஆபத்தானதா?

ஏற்படும் ஒவ்வாமை ஆபத்தானதா?

குழந்தைகளுக்கு பூண்டு சேர்த்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை எனில் ஒவ்வாமை அதாவது அலர்ஜி ஏற்படலாம் என்று கூறி இருந்தோம்! அது ஆபத்தானது அல்ல; அதனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் எவ்வித பாதிப்பும் நேராது. இருப்பினும் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்ட உடன் மருத்துவரை சந்தித்து ஒருமுறை சோதித்து, பூண்டு பற்றிய உணவு அளிப்பது குறித்து கலந்தாலோசித்து பின் தொடர்வது நல்லது.

பூண்டு தரும் பயன்கள்!

பூண்டு தரும் பயன்கள்!

குழந்தைகளுக்கு பூண்டு கலந்த உணவினை அளிப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; குழந்தைகள் பூண்டு கலந்த உணவை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் குழந்தைகளில் இருதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் இந்நாள் முதல் பின்னாள் வரை ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் வயிற்றில் ஏற்படும் புழுத்தொல்லை மற்றும் குடற்புழுக்கள் போன்றவை முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு பூண்டு சேர்த்த உணவு பெரிதும் உதவும்.

குழந்தைகளின் உடல் செயல்பாடு மேம்படவும், குழந்தைகளை நுண் உயிர் தாக்குதல் மைக்ரோ பையல் நோய் தொற்றுகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பூண்டு பெரிதும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Garlic Safe for Babies

Is Garlic Safe for Babies
Story first published: Saturday, August 11, 2018, 15:44 [IST]
Desktop Bottom Promotion