For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்?

மனிதர்களின் வளர்ச்சி படிப்படியாக ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் ஆகும்; இந்த பதிப்பில் பிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பது பற்றி படித்து அறியலாம்.

|

மனிதர்களின் வளர்ச்சி படிப்படியாக ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் ஆகும்; தம்பதியர் தங்களுக்கு என ஒரு குழந்தை உருவானதை அறிந்தவுடன் பிறக்க போகும் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய பெயரை அது எப்படி தெரிந்து கொள்கிறது என்று பெற்றோர் என்றேனும் யோசித்து பார்த்தது உண்டா?

How Babies Recognize Their Names?

பிறந்த குழந்தைகள் ஒரு வயதிற்கு பின்பு தான் பார்க்கவே ஆரம்பிப்பார்கள்; ஆனால், அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் பிறந்தவுடனேயே செயல்பட தொடங்கி, குழந்தைகள் வளர வளர இத்திறனும் வளரும். இந்த பதிப்பில் பிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பது பற்றி படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சிளம் குழந்தைகள்

பச்சிளம் குழந்தைகள்

குழந்தைகள் பிறந்த பின் சில நாட்களில் அவர்களுக்கு என தேர்ந்து எடுத்து வைத்த பெயரை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வார்கள்; அவ்வாறு தாங்கள் விரும்பிய பெயரை குழந்தைக்கு சூட்டிய பின் அந்த பெயர் சொல்லி அழைக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சத்தம் கேட்கும் பொழுதோ குழந்தைகள் திரும்பி பார்ப்பது தங்களது பெயர் சொல்லி அழைத்தற்காக அல்ல; சத்தம் கேட்டதனால் மட்டுமே!

கருவறை வாசம்!

கருவறை வாசம்!

குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்த பொழுது அவர்கள் கேட்டு அறிந்த குரல்கள், கேட்டு வளர்ந்த சத்தங்கள் அவர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். இந்த நினைவாற்றலின் அடிப்படையில், குழந்தைகள் கேட்ட சத்தத்தின் நினைவில் - எங்கேயோ கேட்ட குரல் என்ற முறையில் தான் பிறந்த பின் யாரேனும் அழைக்கும் பொழுது குழந்தைகள் திரும்பி பார்க்கிறார்கள். தனது பெயரை உணர்ந்ததனால் அல்ல.

யார் யார் குரல்கள்?

யார் யார் குரல்கள்?

குழந்தைகள் தொடர்ந்து கேட்ட சில குரல்களை நன்கு நியாபகம் வைத்து இருப்பர்; தாய் மற்றும் தந்தையின் குரல்களை, எப்பொழுதும் கேட்டு கொண்டிருந்த உறவுகளின் குரல்கள் குழந்தைகளின் நியாபகத்தில் இருக்கும். குழந்தைகள் தங்களுக்கு நினைவில் இருக்கும் சத்தங்களை தாண்டி, தனக்கு கேட்கும் சப்தங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதையும் அறிய முயல்வார்கள்; இந்த சப்தத்தின் தேடும் முயற்சியில் தான் குழந்தைகள் நீங்கள் சப்தம் எழுப்பும் பொழுது பார்ப்பது, சிரிப்பது எல்லாம் நிகழ்கின்றன.

எப்பொழுது தெரியும்?

எப்பொழுது தெரியும்?

குழந்தைகளை அவர்தம் பெயர் சொல்லி அழைக்கும் பொழுது அவர்கள் அது தனது பெயர் என்று உணர்ந்து இருக்க மாட்டார்கள்; குழந்தைக்கு பெற்றோர் சூட்டிய பெயரை, குழந்தைகள் எப்பொழுது அது தனது பெயர் என்றும், அந்த பெயரால் தன்னை அழைக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்வார்கள் தெரியுமா? குழந்தைகளுக்கு ஆறு அல்லது 7 மாத கால வயது ஆகும் பொழுது தான் குழந்தைகள் தனது பெயர் இன்னது என்று அறிந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க: உங்கள் ராசிப்படி இந்த பிரச்சினைகள் உங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்படலாம்

கூப்பிடும் முறை!

கூப்பிடும் முறை!

குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு பெயர் சூட்டிய பின் முடிந்த அளவு அவர்களின் பெயரை சொல்லியே அழையுங்கள்; குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பதை அவர்கள் 6 மாதம் அல்லது 7 மாத காலத்தில் தான் புரிந்து கொள்ளுவார்கள். இருப்பினும் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் பெயரையே சொல்லி அழையுங்கள். குழந்தைகளை கொஞ்ச வேண்டியதும், செல்லப்பெயரும் அவசியம் தான்; ஆனால், அந்த செல்லப்பெயரை கொண்டே குழந்தையை அழைத்து குழந்தையின் உண்மையான பெயரை புறக்கணித்து விடாதீர்கள்.

பெயரின் பவர்!

பெயரின் பவர்!

குழந்தைகளுக்கு சூட்டிய பெயர் எத்தனை பெரியதாக இருப்பினும் அதை ழுழுமையாக அழைத்து குழந்தையை கூப்பிடுங்கள்; அப்பொழுது தான், அவர்களின் பெயர் குழந்தைகளின் மனதில் நன்கு பதியும். மேலும் குழந்தைகளை செல்லப்பெயர் அல்லது வைத்த பெயரை சுருக்கி அழைப்பது குழந்தைகளின் எதிர்கால பிரகாசத்தை பாதிக்கும் என்று ஜோதிடத்திலும் கூறப்படுகிறதாம்.

எனவே குழந்தைகளை அவர்களின் முழுமையான பெயர் கொண்டே அழைத்து பழகுங்கள்!

நினைவில் கொள்ள வேண்டியவை!

நினைவில் கொள்ள வேண்டியவை!

குழந்தைகள் பிறந்த பின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் உறவுகள் குழந்தைகளுடன் அதிகம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களை அடிஅக்டி அவர்களுடைய பெயர் கூறி அழைக்க வேண்டும். முதலில் குழந்தைகளை முகத்தோடு முகம் நோக்கி பேசி, அழைத்து பழக்குங்கள்.

அதற்கு குழந்தைகள் தங்களின் ரெஸ்பான்ஸை அளித்த பின், குழந்தைகள் வேறு வேளையில் இருக்கும் பொழுது அழைப்பது, அவர்களின் பின்னால் இருந்து அழைப்பது போன்றவற்றை செய்து அவர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது என்பது போன்றவற்றை பெற்றோர் கண்காணித்து, அதற்கேற்ப அடுத்தடுத்து குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் படிக்க: எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? எப்படி தேய்க்க வேண்டும்?... தெரிஞ்சிக்கோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Babies Recognize Their Names?

How Babies Recognize Their Names?
Story first published: Thursday, October 18, 2018, 16:59 [IST]
Desktop Bottom Promotion