For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் வயிற்று வலியை குணமாக்க எளிய 5 வீட்டு மருத்துவ குறிப்புகள்

குழந்தைகளுக்கு வயிற்று வலி என்பது அடிக்கடி ஏற்படக் கூடியஒன்று. எனவே அதை எளிதில் வீட்டிலிருந்தபடியே குணமாக்கும் 5 குறிப்புகள்

By Saranraj
|

புதிதாக குழந்தைகள் பெற்ற அனைவருக்கும் இருக்கும் கவலை குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனால் என்ன செய்வது என்பதுதான். குறிப்பாக வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் உங்கள் பயமும், கவலையும் இரட்டிப்பாகிவிடும். குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் முழுமையாய் வளர்ச்சியடைந்திருக்காது எனவே எளிதில் கிருமிகள் அவர்களை தாக்கக்கூடும்.

Pregnanacy

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய நோய்களில் ஒன்று வயிறு வலியாகும். குழந்தை ஏன் அழுகின்றது என்று கண்டறிவதிலியே பெரும்பாலும் உங்கள் நேரம் கடந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் வயிறு வலி வரும்போதெல்லாம் அவர்களை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல இயலாது. எனவே சில எளிய வீட்டு மருத்துவங்களை தெரிந்து வைத்துக்கொவது நல்லது. இங்கே குழந்தைகளின் வயிற்று வலியை குறைக்கும் சில வீட்டு மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. செவ்வந்தி பூ டீ

1. செவ்வந்தி பூ டீ

கேட்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் இது மிகவும் பலன் தரக்கூடிய வீட்டுமருத்துவமாகும். சிறிதளவு செவ்வந்தி இதழ்களை எடுத்துக்கொண்டு அதில் கொதிக்கும் நீரை ஊற்றி மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு இதனை ஆறவைத்து குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விரைவில் நல்ல பயன் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை குழந்தைக்கு தரக்கூடாது.

2. புதினா டீ

2. புதினா டீ

இதன் செயல்முறையும் செவ்வந்தி பூ டீ போல்தான். புதினாவில் பல மருத்துவ குணங்கள் இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக குழந்தைகளிடையே இது சிறப்பாக செயல்படும். புதினா இலைகளை சுடுதண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டிவிட்டு அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருப்பின் அவரும் குடிக்கலாம்.

3. மசாஜ்

3. மசாஜ்

இது மிகவும் எளிதான முறையாகும். குழந்தை அழும்போது சிலசமயம் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்துவிடுவார்கள், அதனால்கூட வயிற்றுவலி ஏற்படலாம். எனவே வயிறை மெதுவாக அழுத்திவிடவும். மேலும் காலை வயிறை நோக்கி அசைக்கவும். இல்லையெனில் சுடுநீரில் குழந்தையின் வயிறு நன்கு நனையும்படி குளிப்பாட்டலாம்.

4. ஜீரண நீர்(க்ரேப் வாட்டர்)

4. ஜீரண நீர்(க்ரேப் வாட்டர்)

இதை நம்முடைய குழந்தை பருவம் முதலே நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம், குழந்தைக்கு வயிற்று வலி சில சமயம் அஜீரணத்தால் கூட ஏற்படலாம். அதுபோன்ற சமயத்தில் ஜீரா நீர் கொடுப்பது உடனடி தீர்வாய் இருக்கும். எனவே வீட்டில் எப்பொழுதும் க்ரேப் வாட்டர் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

5. மிளகு

5. மிளகு

மிளகு என்பது சமையலுக்கு மட்டுமின்றி பழங்காலம் முதலே மருத்துவத்திலும் பயன்படுத்தபட்டு வருகிறது. மிளகை தூளாக நுணுக்கி அதை சுடுநீரில் போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு மிளகு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், எனவே குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொண்டு இதனை தொடரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 home remedies to reduce baby's stomach pain

5 home remedies to reduce baby's stomach pain
Story first published: Monday, July 9, 2018, 11:20 [IST]
Desktop Bottom Promotion