For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுதந்திர தின ஸ்பெஷல்: குழந்தைகளுக்கான டாப் 10 ஃபேன்சி டிரஸ் ஐடியாக்கள்!

குழந்தைகளுக்கு வேஷம் போட்டு விடுவதால் என்ன மாறப்போகிறது என்று சந்தேகப்பட்டு, இந்த விஷயங்களை தவிர்க்காதீர்கள்! எந்தவொரு மாற்றமும், சாதனையும் ஒரு நாளில் நடந்ததல்ல; மாற்றங்கள் என்பது தலைமுறையுடன் தொடர்பு

|

நாளைய நாள் நம் தாய் நாட்டிற்கு விடுதலை கிடைத்த தினம் - சுதந்திர தினம். இந்த நாளில் பள்ளிகளில், அலுவலங்களில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி சுதந்திரத்தின் அருமை - பெருமைகள், சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் வீரச்செயல்கள், தியாகங்கள் குறித்து நினைவு கூறப்படும்; இந்த நினைவு கூறல், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, பட்டிமன்றம், கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடனம் என வளர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவ்வாறாக போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் அளிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

Different Fancy Dress Costumes for Babies and Kids

வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் பேச்சுப்போட்டி, நடனம், பாட்டுப்போட்டி குழந்தைகளுக்கு போன்றவை நடத்தப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டிஸுக்கான போட்டிகள்!

குட்டிஸுக்கான போட்டிகள்!

இவற்றுடன் கூடுதலாக, ஒரு முக்கியமான போட்டி நடத்தப்படும்; அதன் பெயர் மாறுவேடப்போட்டி! குழந்தைகள் தன் வாழ்க்கைக் கனவு, கனவு நாயகன், பிடித்த த்தலைவர், பிடித்த விலங்கு, பிடித்த நடிகர், பிடித்த மற்றும் பின்னாளில் கடைபிடிக்கப் போகும் தொழில் போன்ற பல விதமான கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மாறுவேடம் பூண்டு பள்ளிகளில் மற்றும் பற்பல இடங்களில், தொலைக்காட்சிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பர்.

அனைவருக்கும் பொதுவானது!

அனைவருக்கும் பொதுவானது!

சுதந்திரம் என்பது பெரியவர் முதல் சிறியவர் வரை, ஏன் இன்று பிறந்த குழந்தை வரை அனைவர்க்கும் பொதுவானது, அதை அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் எனும் நோக்கில் இந்த போட்டிகள் அனைவர்க்கும் நடத்தப்படுகின்றன.

முக்கியமாக இன்றைய குழந்தைகள் நாளைய இளைய தலைமுறையினர்; எனவே சுதந்திரம் எத்தனை போராட்டங்களுக்கு பின் கிடைத்தது, யார் வாங்கி கொடுத்தார், ஒரு தலைவருக்கான உண்மையான ஆற்றல் என்ன, தலைவராக எப்படி இருக்க வேண்டும், உண்மையான வீரம் என்ன இது போன்ற விஷயங்களை கற்கவும் இந்த போட்டிகள் பெரிதும் உதவுகின்றன.

மாறுவேடப்போட்டி

மாறுவேடப்போட்டி

குழந்தைகள் மாறுவேடப் போட்டிகளில் தலைவர்களின் வேஷம் போட்டு வந்து அவர்கள் கூறிய தத்துவங்களை மழலை பேச்சினில் மொழியும் பொழுது, அதை மனனம் செய்யும் பொழுது கண்டிப்பாக அதன் அர்த்தத்தை பெற்றோர் கற்பித்து கொடுப்பார்கள்; இல்லையெனில் குழந்தைகளே கண்டிப்பாக அர்த்தம் என்ன என்று கேட்டு அறிவர்; இதன் மூலம் நல்ல கருத்துக்கள் குழந்தையின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து, குழந்தையின் உள்ளத்தில் ஒரு தலைவனின் குணம் துளிர் விட தொடங்குகிறது.

அப்படிப்பட்ட நன்மைகளை, நல்ல குணங்களை குழந்தைகளில் விதைக்க கூடிய இந்த மாறுவேட போட்டிக்கு, குழந்தைகளுக்கு என்ன மாதிரியான வேஷங்கள் போட்டு மகிழலாம் என்று அடுத்தடுத்த பத்திகளில் படித்து அறியலாம்.

இராணுவ வீரன்

இராணுவ வீரன்

கிடைத்த சுதந்திரத்தை நாம் இன்று அனுபவிக்க, நம்மை எதிர் நாடுகளின் இருந்து காத்து வரும் இராணுவ வீரர்கள் தான் காரணம்! ஆகையால், அவர்களை பற்றி உங்கள் குழந்தைகளுக்கு தகவல்களை எடுத்துக் கூறுங்கள்! குழந்தைகளுக்கு விருப்பமெனில் இராணுவ வீரன் வேடம் போட்டு விடுங்கள்! இன்றைய நாட்களில் பெண்களும் இராணுவத்தில் பணிபுரிவதால், பெண் குழந்தைகளுக்கும் இந்த வேடத்தை போட்டு விடலாம்.!

அரசன்!

அரசன்!

அந்த நாளில் வாழ்ந்த அரச குலத்தவரான வீரபாண்டிய கட்ட பொம்மன், பூலித்தேவன் போன்றோர்கள் எப்படி ஆங்கிலேயர்களுக்கு எதிராக தங்கள் வீரத்தை வெளிக்காட்டினார்கள் என்று குழந்தைகளுக்கு கூறி, அந்த மாபெரும் அரசர்களை நினைவு கூற, குழந்தைகளுக்கு அவர்களை போன்ற வேஷங்களை போட்டு விடலாம்!

பெண் தலைவர்!

பெண் தலைவர்!

இன்றைக்கு பெண் தலைவர்கள் பலர் இருந்தாலும், அன்றைய நாளில் திருமதி இந்திராகாந்தி அம்மையார் நாட்டின் வளர்ச்சிக்கு செய்த சேவை என்றும் நிலைத்து இருக்கக் கூடியது; அந்த அம்மையாரை பற்றியும், அவர்தம் பெண்மையில் வெளிப்பட்ட ஆளுமை பற்றியும் உங்கள் வீட்டு இளவரசிகள் அறிய, அவர்களுக்கு இந்திரா அம்மையாரின் வேஷத்தை போட்டு விடலாம்!

பெண்கள் - அரசியல்!

பெண்கள் - அரசியல்!

அரசியலில் இன்றைக்கு சில பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்; செல்வி ஜெயலலிதா போன்ற ஒரு சிலரே அரசியலில் சாதித்து உள்ளனர். பெண்கள் அரசியலுக்கு வருவதன் முக்கியத்துவத்தை உங்கள் வீட்டு குட்டி அரசிகளிடம் இருந்து தொடங்குங்கள்! பெண் குழந்தைகளை அரசி என்று அளிப்பதுடன் நிறுத்தாமல் அவர்களை நாடாள தூண்டுங்கள்!

ஆண்கள் - அரசியல்!

ஆண்கள் - அரசியல்!

அரசியலில் சாதித்த பல ஆண் தலைவர்களை உதாரணமாக காட்டி, உங்கள் வீட்டு வாரிசுகளை, இந்த நாட்டை ஆளும் தலைவர்களாக மாற்றிக் காட்டுவது பெற்றோராகிய உங்களின் கடமை! இந்த மாதிரியான பெரிய விஷயங்கள் அனைத்தும் இது போன்ற சிறிய விதையில் தான் தொடங்கி நாளை மரமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

ஹாஸ்யம்

ஹாஸ்யம்

ஹாஸ்யம் அதாவது நகைச்சுவை திறனில், இப்பொழுது தான் சில பெண்கள் தலை தூக்க துவங்கி உள்ளனர்; உங்கள் குழந்தைகளிடம் அந்த திறன் இருந்தால், அல்லது குழந்தைகளுக்கு வாழ்க்கையில் ஜெயிக்க இதுவும் ஒரு நல்ல துறை என்று நகைச்சுவை நடிகையாகும் வாய்ப்பை பற்றி கூறி, அது அவர்களுக்கு பிடித்தால், குழந்தைகளின் நாளைய நிஜத்தை, இன்று நிழல் வேஷமாக போட்டு அழகு பாருங்கள்!

பிரதமர்!

பிரதமர்!

குழந்தைகளை மருத்துவர், ஆசிரியர், இன்ஜினியர் என்று மாமூல் வேலைகளை செய்வதற்கு பழக்கப்படுத்துவதை விடுத்து, நாட்டை ஆளும் பிரதமர், குடியரசு தலைவர் போன்ற பெரிய உதாரணங்களையும் எடுத்துக் கூறுங்கள்! அந்த வேஷங்களை அவர்களுக்கு போட்டு, அதன் முக்கியத்துவத்தை அந்த பதவிக்கு இருக்கும் அதிகாரத்தையும் பொறுப்பையும் எடுத்துரையுங்கள்!

நடிகர்/பாடகர்

நடிகர்/பாடகர்

குழந்தைகளுக்கு நடிப்பு, பாட்டு பாடுதல் போன்ற கலைகளில் விருப்பம் இருந்தால், அவர்களை அந்தந்த வேஷங்களை போடச்செய்து கலைகளின் மூலமாக நாட்டிற்கு சேவை செய்த பாரதியார் போன்ற கவிகளின் உதாரணத்தை குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி, ஊக்கம் அளியுங்கள்!

ஃபேஷன்

ஃபேஷன்

பெண் குழந்தைகளை வீட்டோடு பூட்டி வைக்காது, மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் என்று ஃபேஷன் மற்றும் அழகு போட்டிகளிலும் தன் தாய்நாட்டை தலை நிமிரச் செய்யும் பொறுப்பும் பெண்களுடையது என்று சொல்லி வளருங்கள்! அதன் வெளிப்பாடாக, குழந்தைகளை மாறுவேட போட்டிகளில் ஃபேஷன் தொடர்பான வேஷங்களில் கலந்து கொள்ளவும் செய்யுங்கள்!

கல்வி

கல்வி

குழந்தைகளுக்கு அக்கால கல்வி முறையில் இருந்து இக்கால கல்வி முறை மற்றும் மாறிய பாடத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, பழைய குருகுல கல்வியை இன்றைய மக்களின் நெஞ்சங்களில் நிலைநிறுத்த, நினைவு கூற குழந்தைகளுக்கு குரு வேடம் போட்டு விடலாம்.

என்ன மாறப்போகிறது?

என்ன மாறப்போகிறது?

இது போன்று குழந்தைகளுக்கு வேஷம் போட்டு விடுவதால் என்ன மாறப்போகிறது என்று சந்தேகப்பட்டு, இந்த விஷயங்களை தவிர்க்காதீர்கள்! எந்தவொரு மாற்றமும், சாதனையும் ஒரு நாளில் நடந்ததல்ல; மாற்றங்கள் என்பது தலைமுறையுடன் தொடர்பு கொண்டது; ஆகையால், வளரும் இளம் தலைமுறையினரிடம் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், வீரத்தையும், வரலாறையும் ஒப்படைக்க வேண்டியது முந்தைய மற்றும் தற்போதைய தலைமுறையில் வாழும் நமது கடமை ஆகும்!

அனைவர்க்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! நம் நாடு மேலும் மேலும் வளர நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோமாக! ஜெய்ஹிந்த்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Fancy Dress Costumes for Babies and Kids

Different Fancy Dress Costumes for Babies and Kids
Story first published: Tuesday, August 14, 2018, 16:35 [IST]
Desktop Bottom Promotion