For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளை தூக்கி வைத்துக் கொள்வதில் காணப்படும் வகைகள் என்னென்ன?

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை; புதிய பெற்றோர்கள் அதை முழுதுமாக கற்க சில காலம் தேவைப்படும். குழந்தைகளை தூக்கி பிடித்துக் கொள்வதில் உள்ள வகைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்!

|

குழந்தைகளை பெற்று எடுப்பது ஒருவிதமான அதிசயம் என்றால், குழந்தைகளை தூக்குவது, தூக்கி பிடித்துக் கொள்வதை ஒரு கலை என்றே கூறலாம். ஏனெனில் சில குழந்தைகள் தூக்கி வைத்தால் தான் அழாமல் இருக்கும், சில குழந்தைகள் தூக்கி வைத்தால் தான் தூங்கும் - இது குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுதே இருந்த பழக்கம் அல்ல; பிறந்த பின் குடும்ப நபர்களில் யாரோ ஒருவர் பழக்கப்படுத்திய விஷயம்!

Different Baby Holding Positions

குடும்ப நபர்கள், பெற்றோர்கள் குழந்தைக்கு பழக்கும் பழக்கவழக்கம் எப்படி உங்களையே தாக்குகிறது என்று அடுத்தடுத்த பத்திகளில் படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோசமான பழக்கம் இல்லையே!

மோசமான பழக்கம் இல்லையே!

இது அத்துணை மோசமான பழக்கம் அல்லவே என்று உங்களுக்கு தோன்றலாம்; ஆனால், குழந்தை அழும்பொழுது அதை சமாதானப்படுத்த, குடும்பத்தில் யாரோ ஒருவர் பழக்கிச்சென்ற தூக்கி வைத்தால் தான் தூங்குவேன் என்பது - குழந்தையின் பெற்றோரை இரவு முழுவதும், ஏன் குழந்தைக்கு விவரம் தெரியும் வரை கூட பாதிக்கலாம்; அதாவது குழந்தையின் பெற்றோர்கள் எந்நேரம் பார்த்தாலும் குழந்தையை தூக்கி வைத்திருக்க வேண்டும், அப்பொழுது தான் குழந்தை உறக்கம் கொள்ளும்!

தேவையா?

தேவையா?

இப்பொழுது சொல்லுங்கள், இந்த பழக்கம் தேவையா? குழந்தையை ஒரே நிலையில் தூக்கி வைத்திருந்தால், அந்நிலையே குழந்தைக்கு பழக்கமாகி விடும்! ஆகவே, குழந்தையை தூக்கி வைப்பதில் பல வகைகள் உள்ளன; அவை என்னென்ன என்று அறிந்து ஒன்றன் மாற்றி ஒன்றை பயன்படுத்தி, குழந்தைக்கு ஒரே தூக்கி வைக்கும் பழக்கம் வழக்கமாகாமல் தடுக்க வேண்டும்! எனவே, குழந்தைகளை தூக்குவதில், தூக்கி வைத்து பிடித்துக் கொள்வதில் இருக்கும் வகைகள் என்னென்ன என்று புகைப்படங்களுடன் இங்கு பார்த்து, படித்து அறியலாம்!

தோள்பட்டை அணைப்பு

தோள்பட்டை அணைப்பு

குழந்தையை தோளோடு தோள் சேர்த்து, அணைத்து வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை மிகவும் பாதுகாப்பாக உணரும்; இது பொதுவாக அனைவராலும் குழந்தையை தூங்க செய்ய பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. குழந்தையை தோளில் போட்டு, தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தை விரைவில் தூங்கி விடும்; ஆனால் இதுவே பழக்கமானால், குழந்தை அழும்பொழுதும், அதை தூங்க வைக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் பெற்றோர் தான் குழந்தையை தூக்கி வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆகையால், இந்த தூக்கும் முறையை குழந்தை உண்டு முடித்த பின், உணவு தொண்டையில் இருந்து வயிறை அடைய உதவும் வகையில், குழந்தையை இவ்வாறு தோளோடு தோள் சேர்த்து சற்று நேரம் வைத்திருந்து பின் படுக்க வைக்கலாம்; இதுவும் பெரியவர்கள் பயன்படுத்தும் லாஜிக் தான் - உண்டவுடன் படுக்கக் கூடாது என்பது!

முகம் பார்த்த அணைப்பு!

முகம் பார்த்த அணைப்பு!

குழந்தைகளுடன் விளையாடும் பொழுது, அவர்களை கொஞ்சும் பொழுது இந்த முகத்தோடு முகம் பார்த்த அணைப்பை மேற்கொள்ளலாம். குழந்தையின் முகத்தை பார்த்து அவர்களை கொஞ்சும் பொழுது, உங்கள் கொஞ்சல் மொழிகளைக் கேட்டு, மழலை முகத்தில் அழகான சிரிப்பு மலர்வதை உங்களால் பார்க்க முடியும்; அந்த மலர்ந்த சிரிப்பு உங்கள் முகத்தையும், அகத்தையும் மகிழ்ச்சியால் மலரச் செய்யும். இந்த அணைப்பு விளையாடும் - கொஞ்சும் தருணங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்!

புட்பால் அணைப்பு

புட்பால் அணைப்பு

குழந்தைகளுக்கு குளிரும் பொழுது, குளிர்ந்த இடங்களில் குழந்தையுடன் செல்லும் பொழுது குழந்தைகளின் உடல் நடுங்காமல் இருக்க, குழந்தையை முழுவதுமாக துண்டு கொண்டு சுற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான நேரங்களில் இந்த புட்பால் அணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்!

தாய்ப்பாலூட்டல் அணைப்பு

தாய்ப்பாலூட்டல் அணைப்பு

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்மார்கள் எப்படி அணைக்கிறார்களோ அதுபோல், குழந்தை அழும் நேரங்களில், தாய் இல்லாத நேரங்களில் அணைக்க கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தையை இவ்வாறு அணைக்கும் பொழுது, குழந்தை பாதுகாப்பாக உணர்வதோடு மட்டும் இல்லாமல், உடனே அமைதியடைய செய்யும்; ஏனெனில் பால் குடித்து அமைதியாகி குழந்தைக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கும்!

உப்பு மூட்டை அணைப்பு

உப்பு மூட்டை அணைப்பு

குழந்தைகளுடன் நெடுந்தூர நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது அல்லது குழந்தையுடன் விளையாடும் பொழுது இந்த உப்பு மூட்டை அணைப்பு முறையை மேற்கொள்ளலாம்! இது மாதிரி குழந்தையை அணைக்கும் பொழுது பின்னால் இருந்து குழந்தை விழுந்துவிடாமல் இருக்கிறதா என்று பார்த்து கொள்ள - பார்த்து சொல்ல ஒருவர் உடன் இருப்பது நல்லது!

மடி அணைப்பு

மடி அணைப்பு

குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சி விளையாடும் பொழுது, குழந்தைக்கு உணவு ஊட்டும் பொழுது, குழந்தையுடன் பேசி சிரிக்கும் பொழுது, குழந்தைக்கு மேக்கப் செய்யும் பொழுது இந்த மடி அணைப்பை மேற்கொள்ள வேண்டும்! இந்த அணைப்பில் குழந்தைகள் பெரும்பாலும் குஷியாக இருந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்!

இடுப்பு அணைப்பு

இடுப்பு அணைப்பு

குழந்தைகளை எங்காவது வெளியே அழைத்து செல்லும் பொழுது, எதையேனும் காட்டி சோறு ஊட்டும் பொழுது குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பதோடு, சவுகரியமான இருக்கையை கொடுக்கும்! குழந்தைக்கு தூக்கம் வந்தால், அப்படியே தூக்கி செல்பவர்களின் தோளில் சாய்ந்து தூங்கிவிடும்!

நாற்காலி அணைப்பு

நாற்காலி அணைப்பு

குழந்தையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தால், குழந்தையை கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்; இந்நிலையில் குழந்தைகளை பிடித்துக் கொள்ள இரண்டு கைகளையும் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகள் விளையாடும் பொழுது திமிறினால், கீழே விழாமல் இருக்க இரு கைகளும் சேர்த்தணைத்த அணைப்பு தேவைப்படுகிறது!

முன்னாலான அணைப்பு

முன்னாலான அணைப்பு

குழந்தைகளின் தலை நின்றவுடன் குழந்தைகளை முகத்திற்கு முன்பாக தூக்கி வைத்து விளையாட்டுக் காட்டலாம்; ஆனால், அதிக நேரம் இந்த நிலையிலேயே குழந்தையை தூக்கி வைக்க கூடாது! அப்படி வைத்தால் குழந்தைகளுக்கு கைகளில் வலி ஏற்படலாம்; எனவே இந்த நிலையை ஓரிரு நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதற்கு மேல் கூடாது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Baby Holding Positions

Different Baby Holding Positions
Story first published: Tuesday, August 14, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion