Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கர்ப்பம் உண்டாகி எத்தனை நாளுக்குப்பின் வாந்தி வர ஆரம்பிக்கும்?...
கர்ப்பமடைதல் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிக அற்புதமானதாக உணரக்கூடிய தருணம். இந்த உலகத்துக்கு தங்களுடைய டிஎன்ஏவின் மற்றொரு காப்பியை அறிமுகப்படுத்தி அழகு பார்ப்பதில் இருக்கிற ஆனந்தமே தனிதான்.
கரு உண்டாதல், கர்ப்பமடைதல் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிக அற்புதமானதாக உணரக்கூடிய தருணம். இந்த உலகத்துக்கு தங்களுடைய டிஎன்ஏவின் மற்றொரு காப்பியை அறிமுகப்படுத்தி அழகு பார்ப்பதில் இருக்கிற ஆனந்தமே தனிதான். அந்த கொண்டாட்ட மனநிலைக்கு அளவே இருக்காது. அப்படியொரு அற்புத தருணம் தான் கர்ப்பம் தரித்தல் என்பது. ஆணும் கூட தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போதுதான் தான் ஓர் ஆண் என்ற முழுமையை உணர்கிறான். அந்த மகிழ்ச்சியை தானும் தன்னுடைய குடும்பமும் சேர்ந்து அனுபவிப்பதற்காக பெண் தன்னைத் தானே உடலளவில் வருத்திக் கொள்கிறாள்.

கர்ப்பம் தரித்தல்
கர்ப்ப கால பிரச்னைகள், வலி, அனுபவங்கள் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். சில பெண்கள் கர்ப்ப காலத்தை மிக எளிமையாக கையாள்வார்கள். சிலரோ மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் சில பொதுவான அறிகுறிகள் எல்லா பெண்களுக்குமே உண்டாகும். அதை வைத்துதான், அனுபவம் உள்ளவர்கள் புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு அறிவுரை கூறுவதெல்லாம் நடக்கிறது.

வாந்தி எடுத்தல்
கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்றெடுக்கும் இந்த இடைபட்ட ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் ஏராளமான பிரச்னைகளைக் கடந்து வருகிறார்கள். அதில் பொதுவாக எல்லா பெண்களும் அனுபவிக்கிற ஒரு விஷயம் வாந்தி. அந்த வாந்தி வரும் முறை, நேரம், காரணம் ஆகியவை கூட ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கர்ப்ப காலத்தில் வரும் வாந்தி என்பது மற்ற வாந்தியைப் போல சாப்பிடும் உணவினால் வருவதல்ல. இது முழுக்க முழுக்க இயற்கையாக உண்டாகிற ஒரு விஷயம். அதை முறையாகப் புரிந்து நடந்து கொண்டால் பிரச்னையில்லை. இல்லையென்றால் சில தொல்லைகள் உண்டாகும்.

ஏன் வாந்தி வருகிறது?
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுப்பது சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதை மார்னிங் சிக்னஸ் என்று சொல்வார்கள். நம்முடைய பாட்டிமார்கள் கூட மசக்கை சோர்வு என்று சொல்வதுண்டு. பொதுவாக கர்ப்ப காலத்தில் நாள் முழுக்க வாந்தி தொடர்ந்தாலும், பெரும்பாலும் காலை எழுந்ததுமே ஆரம்பித்துவிடும். சில பெண்களுக்கு காலையில் வர ஆரம்பிக்க வாந்தி அன்றைய நாள் முழுக்க கூட தொடரும்.

காரணங்கள்
எச்சிஸி ஹார்மோன் கர்ப்ப காலத்தில் அதிகமாக சுரக்கும். அதுதான் வாந்தியை அதிகப்படுத்துகிறது. அதேபோல் ஈஸ்ட்ரஜோன் போன்ற ஹார்மோன்களும் வாந்தி மற்றும் குமட்டலை அதிகரிக்கச் செய்கின்றன.
பொதுவாக மற்ற காலங்களை விட, கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு பொருள்களின் வாசனைகளை நுகரும் தன்மை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அதனால் பல்வேறு பொருள்களின் வாசனை நுகர்ச்சி மிக வேகமாக நாசிக்குள் உள்ளிழுத்து வாந்தி மற்றும் குமட்டலை உண்டாக்குகிறது.

எப்போதிருந்து ஆரம்பிக்கும்?
கருவுற்ற 4 முதல் 6 வாரங்கள் வரை தொடர்ந்து எல்லா பெண்களுக்குமே வாந்தி மற்றும் குமட்டல் உண்டாகும். சில சமயங்களில் கர்ப்பம் உறுதி செய்வதற்கு முன்பாகவே கூட வாந்தி வர ஆரம்பிக்கும். கிட்டதட்ட 14 முதல் 16 வாரங்கள் வரை வாந்தி வருவதற்கான அறிகுறிகள் இருக்கும். சில பெண்களுக்கு 20 வாரங்களைக் கடந்தும் கூட வாந்தி வரும்.

கவலை
திடீர் திடீரென்று சிலருக்கு வாந்தி வருவதுபோல் தோன்றுவதால் சில சங்கடங்கள் உண்டாகின்றன. அதனால் சில குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால், வாந்தி மற்றும் குமட்டலைத் தவிர்க்க முடியும். ஏன் நாமே பார்த்திருப்போம். கர்ப்பிணிப் பெண்கள் சிலர் கையில் எப்போதும் எலுமிச்சை பழத்தைக் கையில் வைத்திருப்பார்கள். ஏனெனில் அவ்வப்போது எலுமிச்சைப் பழத்தை முகந்து பார்த்துக் கொண்டிருந்தால் வாந்தி மற்றும் குமட்டல் குறையும்.

எப்படி விடுபடலாம்?
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தி மற்றும் குமட்டலைக் குறைக்க, சில உணவுப் பொருள்களும் சில பழக்க வழக்கங்களும் உதவி புரியும். அப்படி என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்? என்ன மாதிரியான பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்கலாம் என்று பார்க்கலாம்.

முழு நேர உணவு
பொதுவாக கர்ப்ப காலத்தில் அடிக்கடி பசி எடுப்பது போலவே ஒரு உணர்வு தோன்றும். அதனால் பசி அடங்கும் அளவுக்கு ஒரே முறையாக சாப்பிடாதீர்கள். அது அடிக்கடி வாந்தி மற்றும் குமட்டலை உண்டாக்கும். அதனால் அவ்வப்போது சிறிது சிறிதாக நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள்.

ஜீரண உணவுகள்
எப்படி சாப்பிடுகிறோம் என்பதைவிட, என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது மிகமிக முக்கியம். ஏனெனில் மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அதன்மூலம் தேவையில்லாமல் வரும் வாந்தி மற்றும் குமட்டைலைத் தடுக்க முடியும்.

பெப்பர்மிணட் ஆயில்
வாந்தி மற்றும் குமட்டலைத் தடுக்க அடிக்கடி பெப்பர்மிண்ட் ஆயில் மற்றும் சர்க்கரையை அடிக்கடி நாக்கில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது கர்ப்ப கால வாந்தியைத் தடுக்க உதவும்.

அக்குபிரசர் பேண்ட்
இப்போது கடைகளில் கர்ப்பிணிகளுக்காகவே அக்குபிரசர் பேண்டுகள் விற்கின்றன. அதை வாங்கி கைகளில் அணிந்து கொள்ளுங்கள். அது கொடுக்கும் அழுத்தம் மற்றும் தூண்டலால் குமட்டல் குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இஞ்சி டீ
பொதுவாகவே இஞ்சி பித்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. காலையில் இஞ்சி டீ போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நாள் முழுக்க குமட்டல் வருவது போல் தோன்றும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் குடித்துக் கொள்ளுங்கள்.

ஸ்நாக்ஸ்
கட்டிலுக்கு அருகிலேயே பிஸ்கட், கிராக்கர்ஸ் போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் காலையில் எழுந்தவுடன் தலைசுற்றலும் குமட்டலும் உண்டாகும். அதனால் காலையில் எழுந்திருக்கும் போது உண்டாகிற சோர்வைப் போக்குவதற்காக அருகிலேயே வைத்துக் கொள்ளலாம்.

வாக்கிங்
கர்ப்ப காலத்தில் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது. நடைப்பயிற்சியும் லேசான உடற்பயிற்சியும் கர்ப்ப கால சோர்வைப் போக்கும். அதனால் காலையில் எழுந்ததும் கொஞ்சம் ரெஃப்ரஸ் ஆகிவிட்டு, ஒரு ஸ்கார்ப்பையும் ஹெட்போனையும் மாட்டிக் கொண்டு, வாக்கிங் கிளம்புங்கள்.



Click it and Unblock the Notifications