வயிற்றுக்குள் கரு எப்படி உருவாகுதுன்னு தெரியுமா?... இத பாருங்க தெரியும்...

Subscribe to Boldsky

கர்ப்ப காலம் என்பது 40 வார காலமாகும். இது உங்கள் கடைசி மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளாக அமைகிறது. இந்த நேரம் தான் கருமுட்டையும் விந்தணுவுடன் இணைந்து இரண்டாவது வாரத்தில் நமக்கு கருவுறுதல் நடைபெறுகிறது. இந்த காலம் உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நீளத்தை பொருத்து வேறுபடும் . சரியான அண்ட விடுப்பு, அதன் அறிகுறிகள் இவற்றை அறிந்து கொள்வதன் மூலம் எளிதாக கருவுற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.என்ன நடக்கிறது

1.என்ன நடக்கிறது

இரண்டாவது வாரத்தில் விந்தணுக்கள் கருமுட்டையை அடைந்து இரண்டாவது வாரத்தில் கருவுறுதல் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இன்னமும் உங்களுக்கு கருவுற்றதற்கான அறிகுறிகள் தென்படா விட்டால் இன்னும் சில வாரங்கள் காத்திருந்து பரிசோதிப்பது நல்லது.

2.மாதவிடாய் சுழற்சி

2.மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சியின் முதல் வாரத்தில் கருப்பையின் உள் சுவரில் இருந்து இரத்த போக்கு ஏற்படும். ஒரு சராசரி மாதவிடாய் என்பது 28 நாட்களை கொண்டிருக்கும். இரண்டாவது வாரத்தில் ஒவுலேசன் (கருமுட்டை விடுப்பு) நடைபெறும். இந்த சமயத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கருவுறுதல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

3.கண்டறிதல்

3.கண்டறிதல்

மாதவிடாய் சுழற்சியின் 28 நாட்களில் 14 வது நாளில் அண்ட விடுப்பு நடைபெறும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நீளத்தை பொருத்து மாறுபடும். அண்ட விடுப்பை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

4.யோனி வழி திரவம்

4.யோனி வழி திரவம்

உங்கள் யோனி பகுதியில் இருந்து வரும் மியூக்கஸ் திரவம் சுத்தமாக, வழுக்கும் தன்மையுடன் இருக்கும்.

5.உடல் சூடு

5.உடல் சூடு

அண்ட விடுப்பை அறிய உங்கள் உடல் வெப்பநிலையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அண்ட விடுப்பு நெருங்கும் சமயத்தில் உங்கள் உடல் வெப்பநிலை அரை டிகிரி வரை உயர ஆரம்பிக்கும்.

6.கருப்பை வாய்

6.கருப்பை வாய்

அண்ட விடுப்பின் போது கருப்பை ரெம்ப மென்மையாகவும், திறந்தும் காணப்படும். ப்ரவுன் இரத்த போக்கு :கருப்பையின் உள் சுவர் பகுதியில் உள்ள இரத்த மடிப்புகளிலிருந்து லேசாக ப்ரவுன் கலரில் இரத்தம் வெளியேறும்.

7.மார்பக காம்புகள்

7.மார்பக காம்புகள்

மார்பக காம்புகள் மென்மையாகவும் வேதனையுடனும் காணப்படும். இது ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது. அண்ட விடுப்பின் போது வயிற்றின் அடிப்பகுதியில் நடுவே அல்லது ஒரு பக்கமாக வலி ஏற்படும். இந்த நமநமப்பு சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரம் வரை கூட நீடிக்கும்.

8.ஓவுலேசன் டெஸ்ட் கிட்

8.ஓவுலேசன் டெஸ்ட் கிட்

அண்ட விடுப்பின் போது வெளிப்படும் லியூடினைனிங் ஹார்மோன் அளவை சிறுநீரக பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே இந்த மாதிரியான அண்ட விடுப்பு சமயத்தில் பாதுகாப்பற்ற உடலுறுவை மேற்கொள்ளும் போது கருவுறுதலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

9.குழந்தையின் வளர்ச்சி

9.குழந்தையின் வளர்ச்சி

அண்ட விடுப்பின் போது நுண்குழிழ் விரிசல் ஏற்பட்டு கருமுட்டை கருப்பை குழாய் வழியாக வெளியேறும். இந்த நேரத்தில் உடலுறுவு மேற்கொள்ளும் போது ஆணுறுப்பிலிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் யோனி பகுதி வழியாக நீந்தி கருக்குழாய் வழியாக மேல்நோக்கி நகரும். பல மில்லியன் கணக்கான விந்தணுக்கள் கருப்பையினுள் சென்றாலும் ஒரு விந்தணு மட்டுமே ஒரு கருமுட்டையுடன் இணைந்து கரு வளர ஆரம்பிக்கும். மற்ற விந்தணுக்கள் உள் நுழைய முடியாமல் அதன் வெளிப்புற தடுப்புச் சுவர்களிலே ஒட்டிக் கொள்ளும்.அண்ட விடுப்பு நடந்த 12-24 மணி நேரத்திற்குள் கருவுறுதல் ஆரம்பித்து விடும்.

10.விந்தணுவின் திறன்

10.விந்தணுவின் திறன்

விந்தணுக்கள் கருக்குழாயில் கிட்டத்தட்ட 3-6 நாட்கள் வரை உயிர் வாழும். எனவே அண்ட விடுப்பு ஏற்படுவதற்கு 2-3 நாட்களுக்கு முன்னால் நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் விந்தணுக்கள் கருமுட்டையினுள் நுழைந்து கருவுறுதல் நடைபெறும். இந்த உடலியக்க மாற்றத்தை தான் விந்தணுவின் திறன் என்கின்றனர்.

11.செல் பிளவு

11.செல் பிளவு

சில நாட்கள் இந்த கருவுற்ற முட்டை கருக்குழாய் வழியாக கருமுட்டையை அடையும். பிறகு செல் பிளவு ஏற்பட்டு பிளாஸ்டோசைட் நிகழ்வு ஏற்பட்டு கருப்பை சுவரில் இணையும். கருவுறுதல் நடைபெறவில்லை என்றால் இந்த முட்டை மாதவிடாய் இரத்த போக்காக வெளியேறிவிடும்.

12.கர்ப்ப கால அறிகுறிகள்

12.கர்ப்ப கால அறிகுறிகள்

கருவுற்ற இரண்டாவது வாரத்தில் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும்

மன நிலை மாற்றம்

மார்பகம் பெரியதாகுதல்

குமட்டல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

வயிறு வீக்கம் மற்றும் வாய்வு தொல்லை

13.சோர்வு

13.சோர்வு

இரண்டாவது வார கரு வளர்ச்சி ஆரம்ப நிலையில் மட்டுமே இருக்கும். இதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அறிய இயலாது.

14.பரிசோதனை

14.பரிசோதனை

கருவுற்ற இரண்டாவது வாரத்தில் HCG ஹார்மோன் அளவு அதிகரிக்க தொடங்கும் . சில நேரங்களில் இதன் அளவு குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே துல்லியமான சிறுநீரக பரிசோதனை கிட்டை பயன்படுத்தினால் கருவுற்று இருப்பதை கண்டறிவது சுலபமாக இருக்கும்.

15.டிப்ஸ்கள்

15.டிப்ஸ்கள்

நீங்கள் எளிதாக கருவுற கீழ்க்கண்ட டிப்ஸ்களை பின்பற்றலாம்.

அண்ட விடுப்பை அறிந்து கொள்ள ஓவுலேசன் கிட்டை கொண்டு அடிக்கடி பரிசோதித்து கொள்ளுங்கள். யோனி பகுதி திரவத்தின் மாற்றத்தை கூட கணக்கில் எடுக்கலாம்.

தினமும் உடலுறவில் ஈடுபடுதல் நல்லது. விட்டமின்கள் மற்றும் போலிக் அமில மாத்திரைகளை எடுப்பது நல்லது.

ஆரோக்கியமான உணவு முறைகள், நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி,ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் யோகா மேற்கொள்வது போன்றவை நல்லது

புகைப் பழக்கம், ஆல்கஹால் மற்றும் போதை மருந்தை தவிர்ப்பது நல்லது

குறிப்பு

இன்னும் நீங்கள் கருவுறவில்லை என்றால் உங்கள் அண்ட விடுப்பின் காலத்தை அறிந்து கொள்ள மாதம் மாதம் மாதவிடாய் சுழற்சியை குறித்து வைத்துக் கணக்கிடுங்கள். இதனுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் கண்டிப்பாக விரைவில் கருவுறுதல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    2nd Week Pregnancy: Symptoms, Baby Development, Tips And Body Changes

    So, how would you know if you have conceived during the second week? Momjunction explains the pregnancy at two weeks, the signs to look out for, and the baby’s development. Ovulation period, Capacitation Of The Sperm, ovulation calculations, pregnancy test these are described.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more