ஒரு ஸ்பூன் கடுகை வெச்சே கர்ப்பத்தை கண்டுபிடிச்சிடலாம்?... எப்படின்னு தெரியுமா?...

By Kripa Saravanan
Subscribe to Boldsky

பெண்களின் வாழ்வில் , கருவுறுதல் என்பது ஒரு முக்கியமான திருப்புனையாக அமையும் ஒரு சந்தர்ப்பமாகும். இந்த நேரத்தில் ஒரு பெண் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தாய்மை அடையும் போது ஒரு பெண் பரிபூரனமாகிறாள்.

health

தவறிய மாதவிடாய், வாந்தி, மிருதுவான மார்பகங்கள், தலைசுற்றல், குமட்டல் , வீங்கிய பாதங்கள் போன்றவை கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன், மருத்துவரிடம் அடித்து பிடித்து செல்லாமல், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போது செய்யலாம்?

எப்போது செய்யலாம்?

உங்கள் மாதவிடாய் தவறிய நாட்களுக்கு நான்கு நாட்கள் கழித்து இதனைச் செய்து பார்க்கலாம். இங்கே சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தொடர்ந்து படித்து, உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற சோதனைகளை சிரமமே இல்லாமல் வீட்டிலேயே செய்து கொள்ள முடியும். இந்த சோதனையில் கர்ப்பம் உறுதியானபின், மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

எந்த ஒரு சோதனையையும் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். சரியான வழியில் சோதனையைச் செய்ய வேண்டும். வீட்டில் சோதனையை முடித்தவுடன் மறக்காமல் மருத்துவரிடம் சென்று அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சில பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே சோதனைக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்கள் மீது கவனம் அவசியம்.

சோதனையின் அடிப்படை

சோதனையின் அடிப்படை

சிறுநீரில் HCG என்ற கர்ப்பகால ஹார்மோன் இருப்பதை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கமாகும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது மட்டுமே உடல் இந்த ஹார்மோனை சுரக்கிறது. சிறுநீரில் உள்ள HCG-ன் அளவு உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்கிறது.

சர்க்கரை

சர்க்கரை

இது மிகவும் சுலபமான சோதனை முறை. காலையில் எழுந்தவுடன் வரும் சிறுநீரை இந்த சோதனைக்கு பயன்படுத்தவும் . ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அந்த சர்க்கரையில் சிறுநீர் கழியுங்கள். அந்த சர்க்கரை கரைந்து விட்டால், உங்கள் முடிவு, எதிர்மறை. மாறாக, கட்டிகள் தோன்றினால், நீங்கள் சந்தோஷப்படலாம், உங்கள் முடிவு, பாசிடிவ். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனை

ஒரு பாட்டிலில் உங்கள் சிறுநீரை சேமித்து வையுங்கள். ஒரு தட்டையான இடத்தில் அதனை வைக்கவும். அந்த பாட்டிலை தொட வேண்டாம். 24 மணிநேரம் அப்படியே விடுங்கள். பிறகு அந்த சிறுநீரில் மேலே ஒரு வெள்ளைப் படலம் தோன்றினால் உங்கள் முடிவு பாசிடிவ்.

டான்டேலியன் இலைகள்

டான்டேலியன் இலைகள்

டான்டேலியன் இலைகளை எடுத்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, சூரிய ஒளி படாமல் மூடி வைக்கவும். உங்கள் சிறுநீரகம் நிரம்பும் வரை தண்ணீர் அருந்தவும். பிறகு அந்த இலைகள் மூழ்கும் அளவிற்கு அதில் சிறுநீர் கழிக்கவும். 10 நிமிடம் கழித்து, அந்த இலைகளில் சிவப்பு நிற புடைப்புகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.

கோதுமை

கோதுமை

கோதுமை மற்றும் பார்லி விதைகளில் சிறிது சிறுநீரை தெளிக்கவும். ஒரு நாள் இரண்டு இரவு முழுக்க அதை அப்படியே வைத்திருங்கள். இரண்டு நாட்கள் கழித்து அவற்றில் முளை வந்தால், நீங்கள் ஸ்வீட் வாங்க கடைக்குச் செல்லலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பைன்

பைன்

கிளைகள் மற்றும் ஊசிகள் போன்ற பைன் மரத்தின் பல்வேறு பகுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை கலந்து கொண்டு, அந்த கலவையில் சிறுநீர் கழியுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு, அதன் நிறம் மாறினால் நீங்கள் தாய்மை அடைந்துள்ளீர்கள் என்பது பொருள்.

கடுகுத்தூள்

கடுகுத்தூள்

நீங்கள் குளிக்கும் பாத் டப்பில் சூடான நீரில், சிறிது கடுகுத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த சூடான நீரில், 20 நிமிடங்கள் உங்கள் உடலை முக்குங்கள். பிறகு சாதாரண நீரில் குளியுங்கள். அடுத்த நாள் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் கர்ப்பமாக இல்லை. மாதவிடாய் ஏற்படாவிட்டால், உங்கள் ரிசல்ட் பாசிடிவ் .

ப்ளீச்

ப்ளீச்

சிறுநீர் சிறிதளவு ஒரு பிளாஸ்டிக் கப்பில் எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு ப்ளீச் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையில் நுரை வரத் தொடங்கினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது.

குறிப்பு: இந்த கலவையில் இருந்து வெளிப்படும் புகை, சுவாசத்தை பாதிக்கலாம். ஆகவே காற்றோட்டம் உள்ள இடத்தில் இதனை முயற்சிக்கவும்.

சோப்

சோப்

மிக எளிய சோதனை இது தான். எந்தவொரு தொந்தரவும் இல்லாத ஒரு சோதனை இது. ஒரு சிறிய துண்டு சோப்பில் சிறிதளவு சிறுநீரைச் சேர்க்கவும். அதில் நுரை பொங்கி வருவது உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்யும்.

வினிகர்

வினிகர்

டூனா சாறு மற்றும் வினிகர் சேர்த்து இந்த சோதனையை முயற்சிக்கலாம். கால் கப் வினிகர் மற்றும் டூனா சாற்றை எடுத்துக் கொள்ளவும். ஒரு கப்பில் சிறுநீரை எடுத்துக் கொண்டு, அந்த கலவையில் அதனைச் சேர்க்கவும். இந்த கலவையின் நிறம் பச்சையாக மாறினால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறம் வந்தால் நீங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்பது அர்த்தம்.

ஒயின்

ஒயின்

சிறுநீருடன் சிறிதளவு ஒயின் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சிறுநீர், எலுமிச்சை நிறத்தில் தெளிவாக இருந்தால் உங்கள் கர்ப்பம் உறுதி. நிறத்தில் மாற்றம் ஏதேனும் உண்டானால் கர்ப்பமாக இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

டூத்பேஸ்ட்

டூத்பேஸ்ட்

ஒரு ஸ்பூன் டூத்பேஸ்ட் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் சிறிது சிறுநீரை சேர்க்கவும். சிறுநீரின் நிறம் நீலமாக மாறுவது உங்கள் கர்ப்பத்தை உறுதிபடுத்துகிறது.

குறிப்பு: வெள்ளை நிற டூத்பேஸ்ட் பயன்படுத்தினால், போலி முடிவுகளைக் குறைக்கலாம்.

பெரோக்சைடு மற்றும் டைலேனோல் கலவை

பெரோக்சைடு மற்றும் டைலேனோல் கலவை

இந்த சோதனைக்கு காலையில் எழுதவுடன் வெளியேறும் சிறுநீரை பயன்படுத்தவும். சிறுநீருடன், பெரோக்சைடு மற்றும் டைலேனோல் சம அளவு சேர்க்கவும். இந்த திரவம், நீல நிறமாக மாறுவது உங்கள் கண்களை விரியச் செய்யும். நீங்கள் வானத்தில் பறக்க ஆரம்பிக்கலாம்.

தாழ்பாள் சோதனை

தாழ்பாள் சோதனை

1400ம் வருடங்களில் இந்த சோதனை மிகவும் பிரபலம். இதன் முடிவை தெரிந்துக் கொள்ள 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் தாழ்பாளை போட்டு, அது மூழ்கும் வரை சிறுநீரைச் சேர்க்கவும். மூன்று மணி நேரம் கழித்து, அதில் இருந்து தாழ்பாளை எடுக்கவும். தாழ்ப்பாளின் வெளிப்புற வடிவம், அந்த கிண்ணத்தின் அடிப்பகுதியில் தோன்றினால், நீங்கள் தாய்மை அடைந்து விட்டீர்கள்.

வெங்காய சோதனை

வெங்காய சோதனை

பழங்கால கிரேக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சோதனை இது. அந்த காலத்தில், மருத்துவர்கள், பெண்களின் பெண்ணுறுப்பில் வெங்காயத்தை வைத்து விட்டு, ஒரு இரவு அப்படியே விட்டு விடுவர். மறுநாள் அவர்கள் சுவாசத்தை சோதிக்கும்போது, வெங்காய வாசனை வந்தால் அவர்கள் கர்ப்பம் உறுதி செய்யப்படும்.

பைன் சோல்

பைன் சோல்

பைன் சோல் என்பது வீட்டை தூய்மைப்படுத்த பயன்படும் ஒரு ரசாயனம். இதில் சிறிதளவு சிறுநீரை சேர்த்து, அதன் நிறம் மாறினால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உங்கள் நெருக்கமானவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    15 Homemade Pregnancy Tests to Detect Pregnancy

    Becoming a mother is a major turning point in every woman’s life. Getting pregnant is a moment of happiness worth million dollars.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more