For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் கொடுக்கும்போது எதுக்கு துணியால் மூடறாங்க தெரியுமா?... மார்பை மறைக்கன்னு நெனச்சா அது தப்பு...

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க பால் கொடுக்கும் முறையை மாற்றுவது, ஆரோக்கியமான பால் பொருட்கள் கொடுத்தல், பழங்கள் மற்றும் காய்கறிகள், ஸ்நாக்ஸ்யை தவிர்த்தல் போன்ற செயல்கள் மூலம் அவர்களின் உடல் எடையை அதி

By Suganthi Rajalingam
|

குழந்தை பிறப்பு மிகவும் கடினம் என்றால் அதை விட கஷ்டம் அவர்களை ஆரோக்கியமாக பேணிக் காப்பது. ஆமாங்க உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சி தான் அவர்களின் எதிர்காலமும் கூட. விட்டமின்கள், மினரல்கள் அடங்கிய ஊட்டச்சத்து உணவு முறை மட்டுமே அவர்களின் வளர்ச்சியை சீராக்கும்.

how to improve baby weight

கொலு கொலுவென கன்னங்களுடன் சிரிக்கும் குழந்தையின் சிரிப்பை யாருமே ரசிக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்கள் வளர வளர அவர்களின் எடையும் வளர்ச்சி அடைய வேண்டும். சரி அதற்கு என்ன தான் செய்வது, அதற்காகத்தான் நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு கூறியுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் முறை

பால் முறை

பெரும்பாலும் பிறந்த குழந்தையின் உணவு என்றால் ஒன்னு தாய்ப்பால் அல்லது பார்முலா பால் அல்லது முழுவிதமான பால் முறையாக இருக்கும். உங்கள் குழந்தை ஒரு வயதிற்கு கீழ் இருந்தால் 6-8 அவுன்ஸ் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கொடுக்க வேண்டும். அதே உங்கள் குழந்தை ஒரு வயது குழந்தையாக இருந்தால் ஒரு நாளைக்கு 5 தடவை முழுமையான பால் கொடுக்க வேண்டும். முழுமையான பாலில் அதிக அளவில் கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் உள்ளன. எனவே இவை உங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும்.

கவனம் சிதறல்

கவனம் சிதறல்

உங்கள் குழந்தை பால் குடிக்கும் போதோ அல்லது உணவு சாப்பிடும் போதோ சாப்பிடுவதில் கவனம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களை சமாளித்து ஊட்டுவது என்பது மிகவும் கஷ்டமாகவும் இருக்கும்.ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக செயல்படுவார்கள். எனவே அவர்களுக்கு தகுந்த உணவளிக்கும் முறையை கண்டறிந்து உணவை அளியுங்கள். இதனால் அவர்களின் கவனம் சிதறாமல் ஒழுங்காக உணவை உண்பார்கள். பால் கொடுக்கும்போது எதுக்கு துணியால் மூடறாங்க தெரியுமா?... மார்பை மறைக்கன்னு நெனச்சா அது தப்பு... ஏன்னா குழந்தையோட கவனம் சிதறாம இருக்கிறதுக்காக தான் இப்படி துணியால் மூடறாங்க...

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

அதிக கொழுப்புச் சத்து உள்ள பால் பொருட்களான துண்டாக்கப்பட்ட சீஸ் வகைகள், காட்டேஜ் சீஸ், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பால் பொருட்கள் போன்றவற்றை சேர்த்து வந்தால் அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கும்.

ஓட்ஸ் மற்றும் பழங்கள்

ஓட்ஸ் மற்றும் பழங்கள்

குழந்தைகளுக்கென்று இருக்கும் ஓட்ஸ் வகைகளை பயன்படுத்துங்கள். இதன் மூலம் போதுமான இரும்புச் சத்து, கலோரிகள் கிடைக்கும். மேலும் எளிதில் சீரணிக்க கூடிய பழவகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதுவும் உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழுதானிய உணவுகளான கோதுமை போன்றவை அதிக கலோரிகளை கொடுக்கிறது. எனவே கோதுமை மாவு பான் கேக், கோதுமை பிரட் டோஸ்ட், கோதுமை பாஸ்தா, ஓட்ஸ் மற்றும் செரல்ஸ உடன் பால் கலந்து உண்ணுதல் போன்றவை உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் குழந்தைக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், ஆரோக்கியமான வளர்ச்சி, உடல் எடை அதிகரித்தல் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது. அவகேடா,பீன்ஸ், பேரிக்காய், வாழைப்பழம் போன்றவற்றை கொடுக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

அதிக கொழுப்புள்ள எண்ணெய்கள் குழந்தைகளின் உடலுக்கு நல்லது அல்ல. அதற்கு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய வெஜிடபிள் எண்ணெய் அதாவது ஆலிவ் ஆயில் போன்றவற்றை காய்கறிகளில் சேர்த்து கொடுக்கும் போது கலோரிகள் அதிகரித்து அவர்களின் எடையும் கணிசமாக உயரும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கலோரி நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும். எனவே தினமும் உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வரும் போது எடையும் அதிகரிக்க துவங்கும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

உங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஸ்நாக்ஸ் கொடுப்பதை தவிருங்கள். இல்லையென்றால் அவர்கள் சரிவர பால் குடிக்காமல் உணவு உண்ணாமல் தட்டிக் கழிக்க நேரிடும். எனவே உணவு நேரத்திற்கும் ஸ்நாக்ஸ் நேரத்திற்கும் போதுமான இடைவெளி விடுங்கள். இதன் மூலம் அவர்களின் பசி அதிகரித்து உணவை ஒழுங்காக உண்பார்கள். இதன் மூலமும் அவர்களின் உடல் எடையை அதிகரிக்க இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Tips To Help Your Baby Gain Weight

All is well when your baby is well. Your baby being too thin or malnourished is no exception. So, here are a few tips to help your baby gain weight and let your baby have a cute and chubby appearance that everyone love. Milk, avoid food distraction, dairy products, fruits, vegetables these are tips to be followed
Desktop Bottom Promotion