For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் திடீர் வளர்ச்சியை தாய்மார்கள் எப்படி அறிந்து அணுக வேண்டும் எனத் தெரியுமா?

பிறந்த குழந்தையின் வளர்ச்சியை பார்க்கும்போது சில சமயம் தாய்மார்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். அவற்றை போக்கும் விதமாக இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

அட என்ன வேகமாக வளர்ந்து விட்டா! என்று ஆச்சரியமூட்டும் வகையில் தான் நம் குழந்தைகளின் வளர்ச்சியே ஆரம்பிக்கிறது. குழந்தைகள் அவர்களின் பருவ காலத்தில் வேகமாக வளந்து விடுவர். ஆனால் அவர்களின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது ஒரு நிலையான வேகத்தில் நடப்பதில்லை.

நீங்கள் உங்கள் பிறந்த குழந்தையின் வளர்ச்சியியை பார்த்தாலே தெரியும். அவர்களின் குழந்தை பருவ வளர்ச்சி நிலை சில காலம் ஒய்வு நிலையிலும் பிறகு அதிவேக வளர்ச்சி நிலையிலும் காணப்படுவது தான் திடீர் வளர்ச்சி (Growth Spurts)என்பர்.

How To Know If Your Baby Is Having Growth Spurts?

இந்த வளர்ச்சியை நாம் அவர்களின் பழக்க வழக்கத்தில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் அறியலாம்.இந்த வளர்ச்சியின் போது அவர்களின் எடை அதிகமாகும். மேலும் அவர்களின் தலையின் நீளம் மற்றும் சுற்றளவு அதிகரிக்கும்.

மற்றொரு அறிகுறி வழக்கத்தை விடஅதிகமாக பசிக்கும் .அடிக்கடி அவர்களுக்கு பாலூட்ட வேண்டியது இருக்கும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஃபார்முலா பீடீங் பண்ணினால் அதிகமான நேரம் குடிக்கும்,இருந்தாலும் மறுபடி மறுபடியும் கேட்கும்.

குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும்?

இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் மிகுந்த தொந்தரவு தருவார்கள் மற்றும் நம்மை ஒட்டிக் கொள்ளும் பண்புடன் இருப்பார்கள். அவர்களுடன் நீண்ட நேரம் இருக்க ஆசைப்படுவர்.

குழந்தைகள் தூங்குவதற்கும் கஷ்டப்படுவர். அவர்களின் உடைகள் எல்லாம் அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடும் இதுவும் வளர்ச்சி மாற்றத்தின் அறிகுறியாகும்.
இப்பொழுது திடீர் வளர்ச்சி மாற்றத்தை பற்றி விரிவாக நாம் காணலாம்.

வளர்ச்சி காலளவு:

இந்த வளர்ச்சியை துல்லியமாக சொல்ல முடியாது. ஒவ்வொரு குழந்தையும் இதில் வேறுபடும். ஆனால் கீழ்க்கண்ட இந்த கால அளவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

2 வாரங்கள்
3 வாரங்கள்
6 வாரங்கள்
3 மாதங்கள்
6 மாதங்கள்

எல்லா குழந்தைகளும் இந்த கால இடைவேளையில் தான் திடீர் மாற்றம் அடைவர் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த காலளவை சுற்றித்தான் இது நடக்கும்.
எதில் அதிகமான மாற்றத்தை காண்பீர்கள் .

குழந்தைக்கு பாலூட்டும் செயல் மாற்றமடையும். திடீர் வளர்ச்சியின் போது குழந்தைக்கு அதிகமான கலோரிகள் மற்றும் ஆற்றல்கள் தேவைப்படுவதால் அதிகமாக பசிக்கும். பாலூட்டுதல் அவர்களின் பசியை அடக்க முடியாது. அதைவிட அதிகமான உணவுகள் தேவைப்படும்.

தூங்கும் நிலை

இந்த திடீர் வளர்ச்சி இல்லாத காலத்தில் குழந்தைகள் நன்றாக தூங்கும். ஆனால் திடீர் வளர்ச்சி காலத்தில் குழந்தைகள் அதிகமாக தூங்குவதில்லை. இது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் வளர்வதற்கான ஹார்மோன் மற்றும் அதன் ஆற்றல் எல்லாம் குழந்தை தூங்கும் சமயத்தில் அதன் வளர்ச்சிக்கு பயன்படுகிறதாம்.

பழக்க வழக்கத்தில் மாற்றம்

இந்த சமயத்தில் குழந்தை அழுது கொண்டு நம்முடன் ஒட்டிக் கொண்டு ரொம்ப நேரம் நம் அரவணைப்பில் இருக்க ஆசைப்படும். எப்பொழுதும் தொந்தரவு செய்து கொண்டு தூக்கி வைத்து கொண்டே இருக்கச் சொல்வார்கள். இதற்கு காரணம் அவர்களின் ஆற்றல் முழுவதும் வளர்ச்சிக்கு செல்வதால் எளிதாக சோர்வடைந்து விடுவர். இது அவர்களின் பழக்க வழக்கத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.

இதை எப்படி சமாளிப்பது

இந்த வளர்ச்சி பெற்றோர்களை பயமுறுத்தும் வகையில் இருக்கும். உங்களது பார்வையை எப்பொழுதும் குழந்தைகளின் மீது வைத்து அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு தூக்கம் வந்தால் அதற்கான வழிவகைகளை செய்து கொடுங்கள். ஃபார்முலா பீடிங் பண்ணினாலும் அவர்களுக்கு போதுமான வேற வகையான உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு அம்மாவாக இருந்து அதிக எனர்ஜி தேவைப்படும். எனவே நீங்களும் நன்றாக சாப்பிட்டு உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் . குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததையும் திடீர் வளர்ச்சி மாற்றத்தையும் போட்டு குழப்பாமல் கவனமாக அவர்களை கவனித்து கொள்ளுங்கள்.

காய்ச்சல் போன்ற உடல் நிலை மாற்றம் ஏற்பட்டால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள்.
என்னங்க இனி உங்கள் குழந்தையின் திடீர் வளர்ச்சி மாற்றத்தின் செயல்களை அக்கறையோடும் அன்போடும் அணுகுவீர்களா.

English summary

How To Know If Your Baby Is Having Growth Spurts?

How To Know If Your Baby Is Having Growth Spurts?
Story first published: Monday, July 17, 2017, 15:15 [IST]
Desktop Bottom Promotion