For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது இடங்களில் பெண்கள் ஏன் இதை செய்கிறார்கள்?

பொது இடங்களில் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதற்க்கான காரணங்கள் பற்றி கொடுக்க்ப்படுள்ளது

By Lakshmi
|

உலகம் அதி வேகமாக முன்னேறி வரும் நிலையில் கூட, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். மார்பகம் என்பது காமத்திற்கானது அல்ல என்ற பார்வை நமது சமூகத்தில் வர வேண்டியது கட்டாயம். இந்த பார்வையை மாற்ற பெண்களால் தான் முடியும்.

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது ஆபாசமானது இல்லை என்றால், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை மட்டும் தவறாக கருதலாமா? நம்மிடையே பரந்து விரிந்த பார்வை இருக்க வேண்டியது அவசியம். நமது பார்வைகளையும், சிந்திக்கும் கோணங்களையும் மாற்றிக்கொள்வதன் மூலமாக மட்டுமே நாமும் முன்னேற முடியும்.. நாடும் அமைதியாக மாறும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லரிசா வாட்டர்ஸ்

லரிசா வாட்டர்ஸ்

இந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் லரிசா வாட்டர்ஸ் என்ற பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உரையின் போது தனது மகளுக்கு பாலூட்டினார். இவரது புகழ் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகள் மூலமாகவும் பரவியது.

உதாரணமாக இருக்கும் பிரபலங்கள்

உதாரணமாக இருக்கும் பிரபலங்கள்

சில வருடங்களாக பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை அவமானமாக நினைப்பதற்கு எதிராக பல மாற்றங்கள் நடைப்பெற்று வருகின்றன. ஒரு பெண் தனது தினசரி அலுவலக வேலைகளை செய்து கொண்டு பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது தவறில்லை என்பதற்கு சில பிரபலங்கள், நடிகைகள் உதாரணமாக இருந்து வருகின்றனர்.

கரோலினா பென்சன்சாஸா

கரோலினா பென்சன்சாஸா

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர் கரோலினா பென்சன்சாஸா பாராளுமன்றத்தில் தனது மகனுக்கு பாலூட்டினார். கரோலினா பென்சன்சாஸா பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது ஒன்றும் அவமானத்திற்கு உரிய விஷயம் அல்ல.

பொது இடங்களில் பாலூட்டுவது அவமானத்திற்கு உரிய விஷயம் அல்ல. அதை தவறான பார்வையில் காண்பது தான் தவறான விஷயம் என்று கூறினார்.

பாண்டிகா சின்ஹா

பாண்டிகா சின்ஹா

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது ஆபாசமானது என்று கூறுபவர்களை செவிட்டில் அறையும் விதமாக, பாண்டிகா சின்ஹா, பொது இடங்களில் குழந்தைக்கு பால் கொடுப்பதில் ஆபாசமோ, தவறோ இல்லை. பசி என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. குழந்தையின் பசியை போக்குவதை தவறு என்று யாராலும் சொல்லிவிட முடியாது என்று இவர் கூறியுள்ளார்.

செல்ஃபிகள்

செல்ஃபிகள்

குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டே பெண்கள் தங்களது வேலைகளை செய்வது போன்ற செல்ஃபிகளை மாடல்கள் மிக தைரியமாக வெளியிடுகின்றனர். இதற்காக அவர்கள் பயம் கொள்வதில்லை.. வெட்கம் கொள்வதில்லை...

ஏனென்றால் குழந்தைக்கு பால் கொடுப்பது ஒன்றும் உலக மகா தவறு இல்லையே..! இதில் வெட்கப்படவும், கூச்சப்படுவும் என்ன இருக்கிறது. பார்க்கிறவர்களின் பார்வையை தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்க அறைகள்!

தாய்ப்பால் கொடுக்க அறைகள்!

பல பொது இடங்களில், தாய்ப்பால் கொடுப்பதற்காக தனியறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தனி அறைகள் எதற்க்காக? தாய்ப்பால் கொடுப்பது என்ன அவ்வளவு பெரிய தேச துரோகமா? அதை ஏன் தனி அறையில் போய் செய்ய வேண்டும். நாம் செய்யும் ஒரு நல்லதை தவறான பார்வை கொண்டு பார்ப்பது மற்றவர்களின் தவறே தவிர... நம்முடைய தவறு அல்ல...

போராட்டங்கள் தேவையில்லை!

போராட்டங்கள் தேவையில்லை!

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று சட்டம் இயற்ற வேண்டும் என்ற போராட்டம் எதுவும் தேவையில்லை..! பெண்கள் பழங்காலமாக பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை தர்ம சங்கடமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை பெண்களாக முன்வந்து தான் தகர்த்தெறிய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why women choose to do Breast feeding in public

Why women choose to do Breast feeding in public
Desktop Bottom Promotion