For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேசரியன் செய்ததால் தாய்ப்பால் பற்றாக்குறையா? இத படிங்க

பிரசவத்திற்கு பிறகு தாய்பாலை அதிகரிப்பது எப்படி என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

By Lakshmi
|

கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான கருத்து

தவறான கருத்து

இது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இது தான் பால் பஞ்சத்தின் துவக்கம்.

முதலில் தாய்பால்

முதலில் தாய்பால்

சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.

புட்டிப்பால் வேண்டாம்

புட்டிப்பால் வேண்டாம்

தாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்க தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்க கூடாது.

ஆறுமாதம் கட்டாயம்

ஆறுமாதம் கட்டாயம்

குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்க கூடிய உணவுகளை கொடுக்கலாம்.

பிரச்சனை

பிரச்சனை

தாய்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.

நன்மைகள்

நன்மைகள்

தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கும்.

சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை. அவ்வாறு உங்களுக்கு பால் பற்றாக்குறை இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

முட்டை

முட்டை

முட்டையில் உள்ள புரதச் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை பிரசவத்திற்கு பின் உடலுக்கு மீண்டும் அதன் வலிமையை கொண்டு வர உதவுகின்றன.

மீன்

மீன்

குழந்தை பெற்ற பின் மின் சாப்பிடுவது சிறந்தது. மேலும் ஓமேகா 3 உள்ள மீன்களை உண்பது சிறந்த பலன்களைத் தரும். இவை உடலுக்கு இழந்த சக்தியை மீட்டுத் தருகின்றன.

பால்

பால்

பாலில் உள்ள சுண்ணாம்பு அதாவது கால்சியம் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. தாய்ப்பால் உருவாவதற்கு சுண்ணாம்பு சத்து அதிகம் தேவைபடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரணடு டம்ளர் பால் அருந்துவது நல்லதாகும்.

தர்பூசணி

தர்பூசணி

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் உடல் நிலை மீண்டும் அதன் பழைய சக்தியையும் செயல்களையும் செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. தர்பூசணி உங்களுக்கு எளிதில் செரிமானமாக உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீர்

உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஈரப்பதத்தை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. இது உங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலும் நான்றாக சுரக்கும்.

தயிர்

தயிர்

கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ள தயிர் மிகவும் சிறந்த உணவாகும். இதை நாமக்கு விருப்பமான எந்த வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். பிரசவ அறுவை சிகிச்சையை எதிர் கொண்டிருக்கும் மகளிருக்கு தயிர் மிக சிறந்த மற்றும் ஊட்டமளிக்கும் உணவாகும்.

வால்நட்

வால்நட்

அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை சாப்பிடுவதால் அவர்களுடைய உடலில் புரதச் சத்துகளும், போலிக் அமிலத்தின் உற்பத்தியும் மிகுதிப்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு பின் இதை சாப்பிடுவது உடலின் சக்தியை அதிகரிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இவை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு எந்த வித தொற்று நோய்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள்

கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள்

நார்ச்சத்து மிகுத்த உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கீரைகள், பச்சை காய்கறிகள் அகியவற்றை தினசரி சாப்பிட வேண்டும். இது நமது செரிமாணத்தை அதிகப்படுத்தி குடலை சுத்தப்படுத்த உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to increasing breastfeeding after cesarean

here are the some tips for increasing breastfeeding after cesarean
Story first published: Thursday, June 8, 2017, 12:59 [IST]
Desktop Bottom Promotion