For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுதா? இதோ சில டிப்ஸ்...

By Maha
|

மலச்சிக்கல் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பிரச்சனை அனைத்து வயதுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒன்று தான். இத்தகைய பிரச்சனை சிலருக்கு அவ்வப்போது ஏற்படலாம், பலருக்கு நீண்ட நாட்களாக இருக்கும். அதிலும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அதனால் அவர்கள் படும் அவஸ்தையை பார்க்க முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர்களது கஷ்டமானது இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும், பெரியவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை விட வித்தியாசமானது. பெரியவர்களுக்கு மேற்கொள்ளும் சிகிச்சையை குழந்தைகளுக்கு செய்ய முடியாது. மேலும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு சரியான குடலியக்கம் இல்லாதது அல்லது கழிவுகள் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை குழந்தைகளால் வெளியேற்ற முடியாமல் இருப்பது காரணமாக இருக்கும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கண்ட கண்ட உணவுகளை கொடுப்பதும், தாய்ப்பாலில் இருந்து உணவிற்கு மாறுவதும், நீர்வறட்சியும் ஒருவகையான காரணம் ஆகும்.

எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை போக்க மருத்துவரிடம் செல்வதை விட, இயற்கை வைத்தியத்தை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. சரி, இப்போது எந்த மாதிரியான இயற்கை வைத்தியங்கள் குழந்தைகளது மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்ய ஆரஞ்சு ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

வாஸ்லின்

வாஸ்லின்

சில குழந்தைகளுக்கு மலம் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை வெளியேற்ற தெரியாமல் திணருவார்கள். எனவே அவ்வாறு திணரும் குழந்தைகளுக்கு, மலம் வெளியேறும் இடத்ததில் சிறிது வாஸ்லினை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், மலச்சிக்கலானது எளிதில் நீங்கும்.

பேரிக்காய் ஜூஸ்

பேரிக்காய் ஜூஸ்

20 மில்லி லிட்டர் பேரிக்காய் ஜூஸை, 130 மில்லி லிட்டர் தண்ணீருடன் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் உடனே விலகும்.

பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீர்

பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீர்

ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் குழந்தையை 10 நிமிடம் உட்கார வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், குழந்தையை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கலாம்.

கரோ சிரப் மற்றும் நீர்

கரோ சிரப் மற்றும் நீர்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில், கரோ சிரப்பை நீரில் கலந்து, குழந்தைக்கு கொடுத்தால், விரைவில் மலச்சிக்கலானது நீங்கும்.

தோலுடன் பழங்கள்

தோலுடன் பழங்கள்

குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது, அவற்றை தோலுடனேயே கொடுக்க வேண்டும். இதனால் தோலில் இருக்கும் நார்ச்சத்தானது, மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ்

உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ்

பால் பாட்டிலில் நான்கு பங்கில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு பங்கு உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கிவிடும்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது, சிறிது ஆப்பிள் ஜூஸை கொடுத்தால், சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தண்ணீர்

தண்ணீர்

குழந்தைகளுக்கு அதிகமாக தண்ணீர் கொடுத்தாலும், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் இயற்கையாகவே மலமிளக்கிகள் இருப்பதால், அதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் நீங்கும்.

பெல்லி மசாஜ்

பெல்லி மசாஜ்

குழந்தைகளது குடலியக்கத்தை சரிசெய்து, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த, குழந்தையின் வயிற்றில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளின் கால்களை பிடித்துக் கொண்டு, அவர்களது கால்களை சைக்கிள் ஓட்டுவது போன்று சிறிது நேரம் செய்ய, மலச்சிக்கலானது இயற்கையாகவே போய்விடும்.

பாகற்காய் இலை

பாகற்காய் இலை

பாகற்காயின் இலையை சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

பிளம்ஸ்

பிளம்ஸ்

அழகான சிவப்பு நிறப் பழத்திலும் மலத்தை இளகச் செய்யும் பொருள் உள்ளது, எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.

பெருங்காயத் தூள்

பெருங்காயத் தூள்

குழந்தைகளுக்கு குடிக்கும் நீரில், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து கொடுத்தாலும், மலச்சிக்கலை தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Constipation In Babies

Constipation in babies is not that uncommon a phenomenon. In fact, it is one of the most common problems that parents have to deal with. Almost all babies suffer from constipation, at some point in time or the other, in their infancy. There are several constipation in babies remedies that can help relieve the problem to a great extent.
Desktop Bottom Promotion