Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பட்டுப் பாப்பாவுக்கு காட்டன் ட்ரஸ் போடுங்க!

பருத்தி ஆடைகள்
பிறந்த குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எனவே எளிதாக கழற்றி மாட்டக்கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
கோடை காலத்தில் பருத்தி துணிகளினால் ஆன ஆடைகள் என்றால் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றது. வியர்வையினால் நனைந்து சளி பிடிக்காமல் செல்லங்கள் தப்பிக்கலாம்.கோடையில் சிந்தெடிக் மெட்டீரியல் துணிக்களை அணிவித்தால் அது குழந்தைகளின் சருமத்திற்கு அரிப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான ஆடைகள்
பொதுவாக குழந்தைகளின் ஆடைகள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதிலும் கைக் குழந்தையின் ஆடைகளுக்கு அதிக கவனம் தேவை.அவ்வப்போது ஆடைகளை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது. ஒரு நாளுக்கு 3 முதல் 5 உடைகளையாவது மாற்ற வேண்டும்.
பொதுவாக குழந்தைகளின் ஆடைகள் மெல்லிய பருத்தி துணிகளால் தைக்கப்பட்டதாகவும், பட்டன், ஊக்குப் போன்றவை இல்லாததாகவும் இருப்பது நல்லது.
கையில்லாத காட்டன் சட்டை காற்றோட்டமுள்ள துணிகளை அணிவிக்கலாம். முடிபோடும்படியான நாடாக்களை கொண்டதாக ஆடைகள் இருக்கலாம். இறுக்கமான ஜட்டிகளை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.
குளிர்காலத்தில் உடை
அதே சமயம் குளிர்காலம் என்றால் மென்மையான கம்பளிகளினால் ஆன ஆடைகளை குளிர் தாக்காதவாறு இரவு நேரங்களில் அணிவிக்கலாம். பாதங்களை காக்க குழந்தைகளுக்கு ஷாக்ஸ் அணிவியுங்கள் அது குளிருக்கு இதமாய் இருக்கும்.



Click it and Unblock the Notifications