Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசிக்காரங்க அவங்க தேர்ந்தெடுத்த வேலை மற்றும் தொழிலில் எப்பவும் 'ராஜா'வா இருப்பாங்களாம்!
வெற்றி மற்றும் புகழை அடையும் ஆசை எல்லா மக்களுக்கும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் வெற்றி மற்றும் புகழ் கிடைப்பதில்லை. சிலர், அதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் மற்றும் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை, கனவு அல்லது லட்சியம் என்பது இருக்கும். அதை பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கான முயற்சி மற்றும் உழைப்பை நீங்கள் கொடுக்கும்போது, பலனை நீங்கள் பெறலாம். லட்சியங்களை அடைவதற்கான அங்கீகாரத்தைப் பெற உங்கள் தொழில்முறை திறன்களை அதிகரிக்க வேண்டும்.

தகுதி மற்றும் அதிகார தாகம் போன்ற எண்ணற்ற விஷயங்கள் அங்கீகாரத்திற்கான அவர்களின் விருப்பத்தைத் தூண்டினாலும், அவர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக புகழை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களின் வெற்றி அவர்களை உயரமான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
தோல்விகள் ஏற்பட்டாலும் கூட, இந்த உறுதியான நபர்கள் வெற்றி பாதையை நோக்கி செல்வதற்கு தயங்குவதில்லை. ஏனெனில் அவர்கள் சவால்களில் இருந்து மீண்டு வந்து வெற்றியை அடையும் திறனைக் கொண்டுள்ளனர். உண்மையில், அவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார்கள். பிரபலமாக இருப்பதன் மூலம் வரும் உற்சாகத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.
இந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்க அடையாளம் காணலாம். தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றி பெற்று ராஜாவாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அதனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நேரத்தையும் முயற்சியையும் சரியாக செலவிட வேண்டும் என நினைப்பார்கள். அவர்களின் திறமைகளுக்காக பாராட்டப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இந்த ராசிக்காரர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
சிம்ம ராசி நேயர்கள் வேலையில் கடின உழைப்பையும், திறமையாக செயல்படும் திறனையும் கொண்டிருப்பதால், தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எப்போதும் வெற்றியை பெறுவார்கள். நீண்ட கால வெற்றியை பராமரிக்க ஆரோக்கியமான வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை பராமரிப்பது அவசியம் என்பதை இந்த ராசிக்காரர்கள் சரியாக அறிந்து வைத்துள்ளனர்.
இவர்கள் தங்களுடைய இலக்குகளில் உறுதியாக இருப்பது போல உறவிலும் சம பங்களிப்பை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் தொழில் மற்றும் வேலையிலும் ராஜாவாக இருக்கிறார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்கள் படைப்புத் துறைகளில் புகழ் பெற விரும்பலாம். ஏனெனில், இவர்கள் அழகு மற்றும் கலை வெளிப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறார்கள். இவர்கள் தங்களின் குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழில் இலக்குகளை சரியாக வரையறுத்து, அதன்படி செயல்படுகிறார்கள். தெளிவான பார்வை கொண்ட கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் முழுவதும் கவனம் மற்றும் உந்துதலுடன் இருப்பார்கள்.
மேலும், இவர்கள் தங்கள் திறன்களைக் கற்றுக்கொள்வதையும் மேம்படுத்துவதையும் எப்போதும் நிறுத்த மாட்டார்கள். தொழில்துறையின் போக்குகளைப் பின்பற்றுவதில் அவர்கள் தங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் தொழிலில் ஒரு வழிகாட்டியை அல்லது முன்மாதிரியைத் தேடுகிறார்கள். இத்தகைய அனுபவமும் அறிவுரைகளும் அவர்களின் வளர்ச்சியில் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதை இந்த ராசிக்காரர்கள் அறிந்திருக்கிறார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையிலேயே அதிக கவனத்தை செலுத்துவார்கள். அவர்கள் லட்சியம் கொண்டவர்களாக இருப்பதால், போட்டி நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடினமாக உழைக்க துடிக்கும் இந்த ராசிக்காரர்கள், வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே பெற வேண்டும் என விரும்புவார்கள்.
மேஷ ராசிக்காரர்களின் இந்த பன்முகத்தன்மை பொழுதுபோக்கு மற்றும் பொது உறவுகளில் உள்ள தொழில்களுக்கு ஈர்க்கிறது. தங்கள் திறமையை மேம்படுத்த அல்லது அதிகரிக்க அதிகமாக ஆர்வம் காட்டுவது வழக்கம். காலக்கெடு அமைத்து, இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். இதனால், இவர்கள் எந்த துறை தேர்ந்தெடுத்தாலும், அதில் ராஜாவாக இருக்க முயற்சிப்பார்கள்.
தனுசு
நம்பிக்கை மற்றும் புகழுக்காக ஏங்கும் தனுசு ராசிக்காரர்கள், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த விரும்புகிறார். மேலும், பொது பார்வையில் இருக்க அனுமதிக்கும் வாய்ப்புகளை ஈர்க்கிறார்கள். பயண வலைப்பதிவு, ஊக்கமளிக்கும் பேச்சு அல்லது ஊடகம் தொடர்பான தொழில்கள் போன்றவை இதில் அடங்கும். ஆனால், இவர்கள் ஒருநாள் செய்ய வேண்டிய வேலையை விட அதிக வேலைகளை செய்ய முயல்கிறார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சாதனைகளையும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஆர்வத்தையும் தங்கள் வாழ்க்கையை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக வெளிப்படுத்துகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் திறன்களை நம்ப வேண்டும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க இலக்குகளை காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேற்கூறிய ராசிக்காரர்கள் தங்கள் ஆளுமையின் பல அம்சங்களை மேம்மபடுத்துவதன் மூலம் அவர்கள் தேடும் புகழைப் பெறுகின்றன. தொழில்நுட்ப திறமை அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழில் வெற்றிக்கான தொடர்பு, குழுப்பணி மற்றும் தலைமைத்துவம் போன்ற மென்மையான திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












