Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லையாம்... இவங்க காதல் வாழ்க்கை நரகம்தானாம்...!
காதல் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்ததாக அமைத்துவிடுவதில்லை, சிலருக்கு காதல் வாழ்க்கையே அமைவதேயில்லை. தங்கள் வாழ்க்கையை அழகானதாக மாற்றும் நபர் கிடைக்கும் சிலருக்கு வாழ்க்கையில் கிடைப்பதேயில்லை. அவர்கள் ஏன் காதல் வாழ்க்கையில் இப்படி துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அவர்கள் பிறந்த ராசி இந்த துரதிர்ஷ்டத்துக்கான காரணமாக இருக்கலாம். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு உண்மையான காதல் கிடைக்கும் அதிர்ஷ்டம் மிக மிகக்குறைவு என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காதல் என்பது அனைவருக்கும் அழகான பயணமாக இருந்தாலும் இந்த ராசிக்காரர்களுக்கு அது தடைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காதல் கிடைப்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் லட்சிய இயல்பு மற்றும் வலுவான ஒழுக்க நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணாதிசயங்கள் அவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு பல சமயங்களில் உதவியாக இருந்தாலும், அவர்கள் காதல் நோக்கங்களை அடைவதைத் தடுக்கலாம்.
மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விட தங்கள் இலக்குகள் மற்றும் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், காதல் உறவை வளர்ப்பதற்கு நேரத்தையும், ஆற்றலையும் ஒதுக்குவது அவர்களுக்கு சவாலாக இருக்கும். அவர்களின் ஒதுக்கப்பட்ட இயல்பு மற்றும் தோல்வி குறித்த பயம், அவர்கள் தங்கள் துணையிடம் வெளிப்பாடாக இருப்பதைக் கடினமாக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமான சிந்தனையாளர்கள். இந்த தனித்துவம் அவர்களின் போற்றத்தக்க குணங்களில் ஒன்றாக இருந்தாலும், அவர்களை உண்மையிலேயே புரிந்துகொண்டு பாராட்டக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் சுதந்திரம் மற்றும் அறிவுசார் தூண்டுதலை மதிக்கிறார்கள், இது சில சமயங்களில் எதார்த்தமான உறவை விரும்புபவர்களை பயமுறுத்தலாம் அல்லது அந்நியப்படுத்தலாம். அவர்களின் ஒதுங்கிய நடத்தை மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை மறைக்கும் போக்கு ஆகியவை ஆழமான உணர்ச்சித் தொடர்புகளை உருவாக்குவதை கடினமாக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் அனைத்து விஷயங்களிலும் உயர் தரங்களைக் கொண்ட பரிபூரணவாதிகள். சின்ன சின்ன விவரங்களுக்குக் கூட கவனம் செலுத்துவது அவர்களின் வாழ்க்கையின் பல அம்சங்களில் நேர்மறையான பண்பாக இருந்தாலும், அது அவர்களின் காதல் உறவுகளில் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளையும் உருவாக்கலாம்.
கன்னி ராசிக்காரர்கள், தங்கள் துணையிடம் தொடர்ந்து குறைபாடுகளைத் தேடுவார்கள், இதனால் அவர்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களை கவனிக்காமல் போகலாம். அவர்களின் விமர்சன இயல்பு மற்றும் சூழ்நிலைகளை மிகைப்படுத்தி பகுப்பாய்வு செய்யும் போக்கு ஆகியவை அவர்களின் காதலை பூக்கும் முன்னரே கருக வைக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்புகளை விரும்பும் உணர்ச்சி மற்றும் தீவிரமான நபர்கள். இந்த தீவிரம் நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு அவர்களை பாலோ செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் பொறாமை மற்றும் பொஸசிவ் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள், இது அவர்களின் உறவுகளில் பதற்றம் மற்றும் மோதலை உருவாக்கும். கூடுதலாக, அவர்களின் உண்மையான உணர்வுகளை மறைக்கும் அவர்களின் போக்கு, அவர்களின் துணையுடன் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தொடர்புகொள்வதை கடினமாக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
