Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
இந்த 5 ராசிக்கார ஆண்கள் 'காதல்' விஷயத்தில் ரொம்ப கெட்டிக்காரரா இருப்பங்களாம்... உங்க ராசி என்ன?
ஆண், பெண் இருவருக்கும் சில விஷயங்களில் வித்தியாசங்கள் உள்ளன. அவர்களின் காதல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதில், இருவருக்கும் வேறுவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஒரு உறவின் ஆணிவேராக ஆரோக்கியமான உரையாடல் இருக்கும்.
ஆரோக்கியமான தொடர்பு ஒவ்வொரு உறவுக்கும் மிக முக்கியம். ஆனால், சிலர் பேசுவதில் கில்லாடியாக இருப்பார்கள். தங்கள் பேச்சு திறமையின் மூலம், எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்கள். சில ஆண்கள் தங்கள் உறவு அல்லது காதலில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். தங்கள் திறமையான பேச்சின் மூலம், எளிதாக எல்லாரையும் கவர்ந்துவிடுவார்கள்.

அவர்கள் பேசுவது உண்மையா? பொய்யா? என்று கூட மற்றவர்களுக்கு ஆராயாத் தோன்றாது. இந்த ஆண்கள் யார் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஜோதிடத்தின் உதவியுடன், அவர்களை தெரிந்துகொள்ளலாம். எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் காதலின் வலிமையை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி ஆண்கள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருப்பார்கள் மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். மற்றவர்கள் கேட்க விரும்புவதையும், வருவதையும் இந்த ராசிக்காரர்கள் நன்கு அறிந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இவர்கள் ஒரு நபரின் மனதை எளிதாக படிப்பதால், அவர்களை விரைவில் கவர்ந்து விடுவார்கள். இந்த ராசிக்கார ஆண்கள் தங்கள் துணையை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க விருப்புவார்களாம்.
கடகம்
கடக ராசிக்கார ஆண்களை எல்லோருக்கும் பிடிக்கும். சிறந்த உரையாடல் மூலம் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள். மக்களின் மனதிற்குள் செல்வதற்கு அவர்களின் இயல்பான வசீகரமும், புத்திசாலித்தனமும் போதும். இந்த ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் அவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இல்லாவிட்டாலும், அவர்கள் எதிர்மறையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
துலாம்
அனைவரையும் ஈர்க்கும் கதை மாந்தர்களாக துலாம் ராசி நேயர்கள் இருக்கிறார்கள். காதல் அல்லது உறவுகள் என்று வரும்போது, இந்த ராசிக்காரர்கள் அதிக உற்சாகம் கொண்டவர்களாக இருப்பார்கள் மற்றும் சில நேரங்களில் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். தற்பெருமை இல்லாமல், ஒரு உறவில் மகிழ்ச்சியாக அவர்களால் வாழ முடியும்.
கும்பம்
கும்ப ராசி நேயரைப் பொறுத்தவரை, கவனம் என்பது முக்கியமானது. அதை எவ்வாறு அடைவது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த ராசிக்காரர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும், சுவாரஸ்யமான ஒரு காதல் உறவில் ஈடுபடுவார்கள். இந்த ராசிக்கார ஆண்கள் தங்கள் உரையாடலைத் தொடங்கியவுடன், தங்கள் காதல் வலிமையை புரிய வைத்து விடுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சாகசத்திற்காக பெயர் பெற்றவர்கள். புதிய இடங்களையும் மக்களையும் பயணம் செய்வதையும் ஆராய்வதையும் அவர்கள் விரும்புகிறார்கள். சொல்லப்போனால், இது கதைகளைச் சொல்வதற்கும், அவர்களின் காதல் சாகசங்களுடன் மக்களைத் தூண்டுவதற்கும் நிறைய விஷயங்களைத் தருகிறது. இந்த ராசிக்காரர்கள் சொல்லும் அனைத்தையும் மற்றவர்கள் அப்படியே நம்பும் அளவிற்கு கூறுவார்கள்.



Click it and Unblock the Notifications
