Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்கள காதலில் எப்பவும் திருப்திப்படுத்தவே முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க பாவம்...!
மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே உள்ளது. ஆனால் அதற்கு பெரும்பாலும் தடையாக இருப்பது நாமாகத்தான் இருக்கும். டேட்டிங் மற்றும் காதல் உறவுகள் என்று வரும்போது நம் அனைவருக்கும் சில அடிப்படை எதிர்பார்ப்புகள் இருக்கும்.
உண்மையில், அனைவரும் தங்கள் துணையை தேடும் போது, அவர்களிடம் சில பண்புகளை விரும்புகிறார்கள். சில நேரங்களில் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத போது அவர்கள் உறவை விட்டு வெளியேறுகிறார்கள். ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளின் எதிர்பார்ப்புகள் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளன.

அவர்களை காதலில் திருப்திப்படுத்துவது என்பது அசாதாரண காரியமாக இருக்கும். அவர்களை காதலிப்பவர்கள் மிகவும் துன்பப்பட வேண்டியிருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் நம்பமுடியாத அளவிற்கு எதிர்பார்ப்புகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் காதலில் நம்பமுடியாத அளவிற்கு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான காதல் துணையை தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் உயர்ந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். சிம்ம ராசிக்காரர்கள் கிட்டத்தட்ட அனைத்து குணங்களும் கொண்ட துணையை விரும்புகிறார்கள். ஒரு விஷயம் தவறினாலும், அவர்களை நிராகரிக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைவராகும் குணம் கொண்டவர்கள், எனவே அவர்கள் அதே போன்ற ஒருவருக்காக ஏங்குகிறார்கள். இரக்கம், விசுவாசம் மற்றும் தீவிர ரொமான்ஸ் ஆகியவை நிறைந்த துணையை அவர்கள் விரும்புகிறார்கள். இந்த பண்புகளை கொண்டிருக்கவில்லை என்றால், சிம்ம ராசிக்காரர்கள் அனைவரையும் நிராகரிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டானவர்களாக இருப்பவர்கள். எனவே அவர்கள் தங்கள் அதேபோன்ற துணையை விரும்புகிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் காதலில் மிகவும் பழமைவாதிகளாக இருப்பவர்கள் மற்றும் தங்கள் தரநிலைகளை ஒருபோதும் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். காதலில் அனைவராலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய முடியாது. வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் பகுப்பாய்வு அணுகுமுறையை அவர்கள் காதலிலும் தேடுகிறார்கள். மற்ற இராசி டேட்டிங் தரநிலைகளுடன், கன்னி ராசிக்காரர்களின் தரநிலைகள் மிகவும் அதிகமானதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் துணையிடமும் அதே ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் தங்கள் இலக்கை அடைய அவர்களை ஊக்குவிக்கும் ஒரு துணையைத் தேடுகிறார்கள். தங்கள் நம்பிக்கையை உடைப்பவர்களை அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் விரைவாக முடிவெடுப்பவர்கள், எனவே ஒருவர் அவர்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று நினைத்தால், அவர்கள் உடனடியாக தங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றி விடுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் காதலில் விழுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். தாங்கள் வாழ்வது ஒற்றை வாழ்க்கை எனவே அதில் காதலிக்க அதிக அவசரப்படக்கூடாது என்று நினைப்பார்கள். அவர்கள் ஒரு உறவில் நுழைந்தாலோ அல்லது யாரையாவது விரும்ப தொடங்கினாலோ அவர்களை சரியானவராகத் தேர்ந்தெடுக்க தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புகளை திருப்திப்படுத்தும் ஒருவர் கிடைப்பது மிகவும் அரிது. எனவே நீங்கள் ஒரு கும்ப ராசிக்காரரை காதலிக்கிறீர்கள் என்றால் எப்போது அவர்கள் உங்களை விட்டு செல்வர்களோ என்று பதட்டத்துடனேயே இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதலில் எப்போதும் தங்கள் துணை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அவர்கள் காதல் வலையில் எளிதில் விழ மாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்யும்போது அது வாழ்நாள் முழுவதும் நீடிப்பதாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஒரு உறவைத் தேர்நதெடுக்கும் போது அவர்கள் அதில் அதிக சந்தேகத்துடன் இருப்பார்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு இடத்தை உருவாக்குவதற்கு முன்பு மற்றவர்கள் பல நிராகரிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.



Click it and Unblock the Notifications
