Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
இந்த 5 ராசிக்காரங்களுக்கு பணம் சம்பாத்திக்குற கவலையே இல்லையாம்... வேற என்ன கவலை இருக்கும் தெரியுமா?
பணம், நகை, பொருள் போன்ற சொத்துக்களை குவிக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்? என்ற கேள்வி எழலாம். ஏனெனில், பெரும்பலான மக்களுக்கு தாங்கள் ஓர் பெரிய பணக்காரர் அல்லது செல்வந்தராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எல்லாருக்கும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காது.
இந்த உலகில் பணத்தை விட சில விஷயங்களை அதிகம் விரும்பும் மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை விட உங்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். இந்த பிரபஞ்ச வாழ்க்கை என்பது பணத்தையும் செல்வத்தையும் உடைமைகளையும் குவிப்பது மட்டுமல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

செல்வங்களை விட அனுபவங்கள், உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். பணத்திற்கு முன்னுரிமை கொடுக்காத நபர்களை நீங்கள் ஜோதிடத்தின் மூலம் அடையாளம் காணலாம். ராசி அறிகுறிகளின் படி, பணம் மற்றும் உடைமைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத ஐந்து ராசி அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கும்பம்
புத்திசாலித்தனமாக இயங்கும் கும்ப ராசி நேயர்கள், பணம் மற்றும் நகை போன்ற பொருள் செல்வங்களை பெற மெனக்கெடுவதை விட அறிவு மற்றும் புதுமையான விஷயங்களை பெற அதிகம் விரும்புகிறார்கள். திறந்த மனம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் மர்மங்களை அவிழ்ப்பதிலும், வழக்கமான சிந்தனையில் இருந்து தங்களை வேறுபடுத்தி காண்பதை விரும்புகிறார்கள்.
பணம் சம்பாதிக்க வேண்டும் மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்று இந்த ராசிக்காரர்கள் நினைத்தாலும், அது அவர்களின் தணியாத ஆர்வத்திற்கும், அற்புதமான யோசனைகள் மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றும் விருப்பத்திற்கும் முன்னால் பெரிதாக இருக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசங்களை நிகழ்த்தவும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருக்கிறார்கள். பயணங்கள் அல்லது சாகச செயல்கள் செய்யும்போது, ஆடைகளில் புழுதிகள் சேரலாம். ஆனால் அவர்களின் பயணங்களில் உருவான நினைவுகளும் கதைகளும் அவர்கள் பிடித்த பொக்கிஷங்களாக என்றும் நினைவில் இருக்கும்.
இந்த சுதந்திர மனிதர்களை பொறுத்த வரை உண்மையான செல்வம் என்பது, உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட அனுபவங்களின் பன்முகத்தன்மையில் இருப்பதாக நம்புகிறார்கள். அதிக பணம் மற்றும் செல்வங்களை விட சாலை பயணங்கள் அவர்களை மகிழ்ச்சியாக மனிதர்களாக மாற்றுகிறது.
மீனம்
மீன ராசி நேயர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் மற்றும் அதிகமாக கனவு காண்பவர்கள். இவர்கள் உணர்ச்சிகள் மற்றும் உறவுகளின் வழியாக இன்பங்களை காண்கிறார்கள். பணம், பொருள் போன்ற செல்வங்கள் மற்றவர்களுடன் அவர்கள் ஏற்படுத்திய ஆழமான தொடர்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த ராசிக்காரர்களுக்கு குறைவாக தெரியலாம்.
இரக்க குணம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவு, புரிதல் மற்றும் பாதுகாப்பான இடத்தை வழங்குவதில் சிறந்து விளங்குகிறார்கள். இந்த ராசிக்காரர்களின் உறவுகள்தான் அவர்களின் மிகப்பெரிய சொத்து. பணம், செல்வம் எல்லாம் மற்றவர்களிடம் இருந்து பெறும் அன்பிற்கு கீழ்தான் அளவிடப்படுகிறது.
மிதுனம்
வாழ்வின் பன்முகத்தன்மையில் அழகைக் காணும் திறமை மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு. அவர்களின் தீராத ஆர்வம் அவர்களை பல்வேறு பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் மற்றும் சமூக வட்டங்களில் ஈடுபட வழிவகுக்கிறது. இதனால், பல்வேறு செயல்பாடுகளில் இந்த இந்த ராசிக்காரர்கள் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள்.
பணம் மற்றும் செல்வம் அவர்களின் வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டும் தேவைப்படும் ஒரு குறைந்த விஷயமாக பார்க்கிறார்கள். செல்வங்களை சேர்க்க வேண்டும் என்ற ஆசை மிதுன ராசி நேயர்களுக்கு இல்லை. இவர்கள் பணம் மற்றும் பொருளை விட மனித தொடர்பு மற்றும் அறிவுசார் தூண்டுதலின் செழுமையை மதிக்கிறார்கள்.
மேஷம்
மேஷ ராசி நேயர்கள் தங்கள் கனவுகளை நிஜமாக மாற்றுவதற்கான அசைக்க முடியாத உறுதியை கொண்டுள்ளனர். ஆனால், அவர்களின் கனவுகள் பணம், பொருள் சேர்ப்பதை பற்றியது அல்ல. அவர்களின் உணர்வுகளைப் பின்தொடர்வது மற்றும் புதிய சவால்களை வெல்வது போன்றவற்றைத் தான் அதிகம் விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
