Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
2023 முடியும்போது இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை கொடுத்துட்டு போகப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2023- ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது, இன்னும் ஒரு மாதத்தில் நாம் 2024 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மோசமானதாக சென்றதா? வருடத்தின் இறுதியிலாவது அதிர்ஷ்டம் கிடைக்குமா என்று காத்திருக்கிறீர்களா?
அதிர்ஷ்டவசமாக, கிரக நிலைகள் இந்த வருடத்தின் இறுதியில் எதிர்பாராத செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் சில ராசிக்காரர்களுக்கு பொழியப் போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வருடத்தின் இறுதியில் அதிர்ஷ்டக்காத்து பலமாக அடிக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளாலாம்.

கன்னி
2023 இன் பிற்பகுதியில், கன்னி ராசிக்காரர்களின் நிதி அதிர்ஷ்டம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. அதிர்ஷ்ட நட்சத்திரங்களின் உதவியுடன் பணம் சம்பாதிப்பது வருட இறுதியில் மிகவும் எளிதாக இருக்கும். இந்த மாதம், தினசரி வேலை திட்டங்களின் லாபம், சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கும்.
வருடம் முடியும் தருணத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பிலிருந்து அதிர்ஷ்டம் கிடைக்கும், வருமானம் மற்றும் வெற்றிகளைத் தேடித்தரும் ஒருவர் உங்களுடனேயே இருக்கலாம். மேலும் சிலர் தங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் தொழில்முறை திறன்களால் பணம் சம்பாதிக்கலாம்.
உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் பெற்றோருக்காக நீங்கள் சில செலவுகளைச் சந்திக்க நேரிடலாம், ஆனால் உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நிதி உதவியும் பெறுவீர்கள். இந்த மாதம், உங்களில் சிலருக்கு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கலாம். மொத்தத்தில் இந்த வருட இறுதி உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் காலமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பணமும், அதிர்ஷ்டமும், வருமானமும் அதிகரிக்கும். வருட இறுதியில் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் வசீகரமும், நற்பெயரும் கணிசமாக மேம்படும், மேலும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகளைத் தரும், மேலும் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ அனுமதிக்கும்.
மேலும், உங்கள் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் இடத்திற்கு வருகிறது. செல்வந்தராக வேண்டும் என்ற உங்கள் ஆசை வருட இறுதியில் மேம்படும். இந்த காலக்கட்டத்தில், நீங்கள் சுறுசுறுப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், பின்னர் உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும், உங்கள் முயற்சிக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் வேலைகள் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சாதகமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். உங்கள் வேலையில் அதிர்ஷ்டம் மேம்படுவதால் அதிக நிதிப் பலன்களைப் பெற முடியும். ஆண்டின் கடைசி மாதத்தில், உங்கள் வேலையில் வசுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், மேலும் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவார்கள்.
சுக்கிரன் புதனுடன் இணைவதால், உங்கள் முன்னேற்ற காலம் வந்துவிட்டது. உங்கள் வேலையில் புதிய வளர்ச்சியை அனுபவிப்பீர்கள், உங்கள் சொந்த எண்ணங்கள் நிறைவேறும். அதே நேரத்தில், உங்களுக்கு தொழிலில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும், மேலும் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை அறுவடை செய்யத் தயாராகுங்கள்.
கடகம்
அதிக பணம் சம்பாதிக்க கடக ராசிக்காரர்கள் தங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்த வேண்டும். இந்த காலகட்டம் நீங்கள் பணம் சம்பாதிக்கவும், உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தவும், உங்கள் பணியிடத்தில் நல்ல யோசனைகளை வழங்கவும் வாய்ப்பு கிடைக்கும். தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் சம்பாதிப்பார்கள்.
அதே நேரத்தில், பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உங்களை தேடிவரும். மிகவும் அலட்சியமாக இருக்க வேண்டாம், நன்கு ஆலோசித்து முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு நிலையான வருமானம் இல்லையென்றால், ஆண்டின் கடைசி மாதத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு இதில் உதவலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
