Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க அவங்க நல்லதுக்காக அடுத்தவங்க காலை வாரி விட துளியும் தயங்கவே மாட்டாங்களாம்...!
நாம் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் சுயநலவாதிதான் என்பதை ஒருபோதும் மறக்க இயலாது. ஆனால் நம்மை சுற்றி இருப்பவர்களில் சிலர் மட்டும் தனது தனிப்பட்ட நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுபவர்களாகவும், மேலும் தனது காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் மட்டுமே எப்போதும் இருப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் மற்றவர்களின் துயரங்களால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் மற்றும் பச்சாதாபம் என்பது அவர்களிடம் துளியும் இருக்காது. சுயநலமும்,பொறாமையும் இரட்டைக் குழந்தைகள், எனவே மற்றவர்களுக்கு நன்மை ஏற்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது, அதுபோன்ற சூழலில் ஏமாற்றுவார்கள் அல்லது பொய் சொல்வார்கள்.

அவர்களின் சுயநல நடத்தை, பெரும்பாலும், பலரால் விமர்சிக்கப்படுகிறது, இருப்பினும், மற்றவர்கள் அவர்களைப் பற்றி என்ன சொன்னாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த மோசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் தொழில் வாழ்க்கை என்று வரும்போது மிகவும் சுயநலவாதியாகிறார்கள். அவர்கள் கவலைப்படுவது அவர்களின் வெற்றி மற்றும் பதவி உயர்வுகளை பற்றி மட்டுமே. வேலை செய்யும் இடத்தில் ஒருவரை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்த சற்றும் யோசிக்க மாட்டார்கள், அவர்கள் பணியிடத்தில் தீயவர்களாக இருக்கலாம் மற்றும் மற்றவர்களின் பணிகளைக் கெடுப்பார்கள், இதனால் அவர்களுடைய வேலை சிறந்ததாக தோன்றும் என்று கருதுவார்கள்.
கடகம்
மேஷ ராசிக்காரர்களைப் போலவே கடக ராசிக்காரர்களும் தங்கள் வேலை மற்றும் தொழில் வாழ்க்கை என்று வரும்போது மிகவும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் முதலாளி மற்றும் மேலதிகாரிகளிடம் நல்ல இமேஜை உருவாக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள், ஆனால் அதற்காக, மற்றவர்களின் வேலையைக் கெடுப்பார்கள், அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, மற்றவர்களைப் பற்றி வதந்திகளை பரப்பவோ அல்லது பழிவாங்கவோ தயங்க மாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி மற்றவர்களை விட மோசமான சுயநலவாதிகளாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, எல்லாமே அவர்களின் நலன்களைப் பற்றியது மற்றும் அவர்களுக்கானது மட்டுமே. அவர்களுக்கு பயனளிக்காத எதையும் அவர்கள் செய்ய விரும்ப மாட்டார்கள். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் தங்கள் விசுவாசத்தையும் சமரசம் செய்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிகாரர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைஎன்று வரும்போது சுயநலவாதியாக மாறுகிறார்கள். மற்றவர்களுடன் நட்பாக இருக்க, அவர்கள் மற்றவர்களை நெருக்கமாக நேசிக்கிறார்கள், அவர்களுக்காக எதையும் செய்வார்கள். அவர்கள், பெரும்பாலும், தங்கள் சுயநல நடத்தையை மறைத்து, ஆனால் அதைத் தொடர்ந்து செய்கிறார்கள். எனவே நீங்கள் ரிஷப ராசிக்காரர்களுடன் இருந்தால், அவர்களின் அக்கறை மற்றும் அன்பு போன்றவற்றை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் நலனுக்காக உங்களை பலிகொடுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் கர்வமானவர்கள் மற்றும் தங்களை தலைவர்களாக நிலைநிறுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையின் உருவகம் என்று நினைக்கலாம், ஆனால் அங்குதான் அவர்கள் தவறு செய்கிறார்கள். உண்மையில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்கள் மற்றும் இந்த பாதுகாப்பின்மை தான் அவர்களை மோசமான சுயநலவாதியாக மாற்றுகிறது.



Click it and Unblock the Notifications

