Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
இந்த 5 ராசிக்காரங்க கணக்குல புலியாம்... அதிபுத்திசாலியான இவங்க...கணித மேதையா வரக்கூட வாய்பிருக்காம்!
கணிதம் என்பது சில மக்களிடமிருந்து அன்பையோ பல மக்களிடமிருந்து வெறுப்பையோ பெறும் ஒரு பாடமாகும். ஏன் சிறிய வயதில் நீங்கள் கூட கணித பாடத்தை வெறுத்திருக்கலாம், பள்ளி முடிந்ததும் தங்களால் இயன்றவரை கணித பாடத்திலிருந்து தப்பித்து ஓடிவிடும் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் கணிதச் சிக்கல்களைத் தீர்ப்பதில் மகிழ்ச்சியடையும் சில நபர்களும் இருக்கிறார்கள். கணிதம் என்பது நாம் படிக்கும் ஓர் பாடம் மட்டுமல்ல, அது நம் வாழ்க்கையும் கூட. எல்லா விஷயங்களிலும் அன்றாடம் கணித பயன்பாடு இருக்கிறது. மேலும் கணிதத்தை ஒரு பணியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால், அது சுமையாகத்தான் மாறும்.

இயற்பியல், வேதியியல் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக கணிதம்தான் இருக்கிறது. சிலர், கணித மேதையாக இருப்பார்கள். சில நிமிடங்களிலேயே கணிதத்தின் சிக்கலை தீர்க்கும் திறன் அவர்களுக்கு இருக்கும். அத்தகைய நபர்களை நீங்கள் ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம்.
கணிதத்தில் வெற்றிபெறக்கூடிய குணாதிசயங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் ஐந்து ராசி அறிகுறிகள் இங்கே உள்ளன. அவர்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு மற்றும் அதிக விவரம் தெரிந்தவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இந்த குணாதிசயங்கள் கணிதத்தில் மிகவும் சாதகமாக இருக்கும். அங்கு துல்லியம் மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துவது முக்கியம்.
கன்னி ராசியினரின் சிக்கலைத் தீர்க்கும் முறையான அணுகுமுறை மற்றும் பிழைகளைப் பிடிக்கும் திறன் ஆகியவை அவர்களை கணித நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக ஆக்குகின்றன.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம், பொறுமை மற்றும் கட்டமைக்கப்பட்ட சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணங்கள் பெரும்பாலும் சிக்கலான கணிதக் கருத்துகளைப் படிப்பதற்கும் சிக்கலான சிக்கல்களின் மூலம் வேலை செய்வதற்கும் உகந்தவை. மகர ராசிக்காரர்களின் முறையான அணுகுமுறையும் உறுதியும் கணித முயற்சிகளில் சிறந்து விளங்க உதவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்களின் புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையால் வகைப்படுத்தப்படுகிறார்கள். கணிதத்தில், பெட்டிக்கு வெளியே சிந்தித்து தனித்துவமான தீர்வுகளைக் கண்டறிவது விலைமதிப்பற்றதாக இருக்கும். வழக்கத்திற்கு மாறான கோணங்களில் இருந்து பிரச்சனைகளை அணுகும் திறன் கணித புரிதலில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தகவமைத்துக் கொள்ளக்கூடியவ்ரகள் மற்றும் விரைவாகக் கற்றுக்கொள்பவர்கள். இது அவர்களை கணிதத்தின் வேகமான உலகில் பயனிக்க வழிவகுக்கும். புதிய கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கும் பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் திறன் பல்வேறு கணித சவால்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் உறுதிப்பாடு மற்றும் கவனம் செலுத்தும் மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். சிக்கலான கணிதக் கோட்பாடுகள் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் போது இந்த பண்புகள் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் விடாமுயற்சியும் ஆழமாக யோசிப்பதற்கான விருப்பமும் கணிதக் கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கணிதத்தை புரிந்துகொள்ள திறன் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், கணித சிக்கல்களைத் தீர்க்கும் போது, இந்த ராசிக்காரர்கள் மிகுந்த சிக்கலை சந்திக்க நேரிடலாம்.



Click it and Unblock the Notifications

