Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 4 ராசிக்காரங்க தங்கள் உடன்பிறந்தவர்கள் மீது மோசமான பொறாமை கொண்டவர்களாக இருப்பார்களாம்...!
சகோதர, சகோதரி உறவு என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உடன்பிறந்தவர்களிடையே பொறாமை மற்றும் ஒப்பீடு செய்வது மிகவும் இயல்பானது.
சகோதர, சகோதரி உறவு என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உடன்பிறந்தவர்களிடையே பொறாமை மற்றும் ஒப்பீடு செய்வது மிகவும் இயல்பானது, ஆனால் அது தீவிரமடையும் போது எந்தவொரு அது உடன்பிறப்புகளுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சிலர் இதனை சாதரணமாக எடுத்துகொண்டாலும், சிலர் போட்டியிடும் குணத்தால் தங்கள் உடன்பிறந்தவர்கள் மீது பொறாமையையும்,பகையையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்கள் கைதட்டல் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றால் தங்கள் உடன்பிறந்தவரின் மீது பொறாமையையும், மனக்கசப்பையும் வளர்த்துக் கொள்ளலாம். இதனால் அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களை துன்புறுத்தத் தொடங்குகிறார்கள். உங்கள் உடன்பிறந்தவர்கள் எப்போதும் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அதற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம்.
எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்கள் மீது எப்போதும் பொறாமைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கன்னி
அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் கொண்ட கன்னி ராசிக்காரர்கள், தங்கள் உடன்பிறந்தவர்களை எப்போதும் எரிச்சலூட்டுகிறார்கள் மற்றும் அவர்களின் உணர்வுளை காயப்படுத்துகிறார்கள். வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் தீவிரமான அணுகுமுறை அவர்களுக்கு வலியை பரிசளிக்கிறது, இதனால் அவர்கள் தங்கள் வலியை குடும்ப உறுப்பினர்களுக்கும் பரப்புகிறார்கள். அவர்களின் வெறித்தனமான மற்றும் மோசமான ஆசைகள் வீட்டின் சூழ்நிலையை மகிழ்ச்சியற்றதாக மாற்றுகின்றன. தங்களின் மகிழ்ச்சியை பாதுகாத்துக் கொள்ள இவர்களுடன் பிறந்தவர்கள் இவர்களை விட்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

ரிஷபம்
பெற்றோரின் பாசத்தை மையமாக வைத்து ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்கள் மீது பொறாமைக் கொள்ள தொடங்குகிறார்கள். தங்கள் உடன்பிறந்தவர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு இணையான அல்லது அதற்கு அதிகமான அன்பும், அக்கறையும் தங்களுக்கு கிடைக்காத போது அவர்களின் பொறாமை உச்சத்தை அடைகிறது. பெற்றோரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும் கவனம் மற்றும் அன்பில் அவர்களின் உடன்பிறந்தவர்கள் குறுக்கிடும் போது அவர்களின் பொறாமை கோபமாக மாறும். அதனால் அவர்கள் தங்கள் சகோதர, சகோதரிகள் மீது மனக்கசப்பை வளர்த்துக் கொள்கிறார்கள், மேலும் அவர்களின் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் கூட ஈடுபடத் தொடங்குவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிகாரர்கள் அதிக மனக்கிளர்ச்சி மற்றும் நம்பகத்தன்மையற்ற குணம் கொண்டவர்கள். எனவே அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், பாராட்டுக்களுமே அவர்களை தன்னமிக்கை மிக்கவர்களாக மாற்றும். அவர்களது உடன்பிறப்புகள் பாராட்டுக்கள் மற்றும் அன்பை பெறும்போது, அது அவர்களுக்குள் மறைந்திருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். அவர்களின் பொஸசிவ் எண்ணங்கள் பெரும்பாலும் அவர்களின் தன்னம்பிக்கை குறைபாட்டின் வெளிப்பாடாகும் மற்றும் இதனால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களின் செயலதிறனை பாதிக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்வது என்பது அவர்களுடன் பிறந்தவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். அவர்களின் அதிகப்படியான யோசனைகள் மற்றும் அர்த்தமற்ற கவலைகள் அனைவரையும் எரிச்சலூட்டுவதாக இருக்கும். யாருடனும் உடன்படாத அவர்களின் மனப்பான்மையும், கடுமையான வெறுப்புணர்ச்சியும் அவர்களது உடன்பிறந்தவர்களுடனான பிணைப்பை சிதைக்கலாம். மீன ராசிக்காரர்களின் போட்டித் தன்மை மற்றும் அவர்களின் சகோதர, சகோதரிகளின் உணர்வுகளுடன் விளையாடுவது அவர்களை மோசமான உடன்பிறப்பாக மாற்றுகிறது.



Click it and Unblock the Notifications











