2024-ல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு.. உங்க ராசியும் இதுல இருக்கா?

Yearly Horoscope 2024: இன்னும் மூன்று மாதங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும்.

Yearly Horoscope 2024: Which Zodiac Signs Will Be Rich In 2024 In Tamil

அதுவும் 2024 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு எந்த ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் பணக்காரராகப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்

ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் எதிர்பாராத பல நன்மைகளை இந்த ராசிக்காரர்கள் பெறவுள்ளார்கள். வேலையில்லாமல் நீண்ட மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக 2024 ஆம் ஆண்டில் உங்களின் இலக்குகளை சிறப்பாக அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சனி பகவானின் தாக்கம் 2025 ஆம் ஆண்டு வரை இருந்தாலும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையில் நேர்பாதையில் பயணிக்கிறார்.

மேலும் ஏழரை சனியின் கடைசி கட்டமாக இருப்பதால், சனி பகவான் நற்பலனை வழங்குவார். அதுவும் 2024 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களை மிகவும் வலிமையானவர்களாக்கும். எப்பேற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். 2024 ஆம் ஆண்டில் ஒரு பெரிய இலக்கை அடைவீர்கள். அதன் பலனாக நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரப் போகிறது. இந்த புதிய ஆண்டில் கிரகங்களின் நிலைகளால் தொழில் ரீதியாக நல்ல வெற்றியையும், பண வரவையும் பெறுவார்கள்.

நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் 2024-ஆம் ஆண்டில் பிரகாசிக்கப் போகிறது. இந்த ஆண்டில் சிறிது கடினமாக உழைத்தாலும், ஏராளமான செல்வத்தை குவிக்க முடியும்.

கன்னி

2024 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏராளமான அளவில் பணத்தை சம்பாதிப்பதோடு, அதை சேமிக்கவும் செய்வார்கள்.

இதுவரை பண பற்றாக்குறையை சந்தித்தவர்கள், 2024 ஆம் ஆண்டில் நல்ல நிதி நிலையைக் கொண்டிருப்பார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும், செழிப்போடும் இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த புதிய ஆண்டில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சொத்துக்களை வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால். இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக, இந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, September 24, 2023, 19:04 [IST]
Desktop Bottom Promotion