Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
2024 ஆம் ஆண்டு இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Yearly Horoscope 2024: இன்னும் சில மாதங்களில் 2024 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கும். முக்கியமாக நிதி நிலை, தொழில் வாழ்க்கை, வியாபாரம், காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்றவை புதிய ஆண்டில் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவோம்.
இவை அனைத்தைப் பற்றியும் ஜோதிடத்தின் உதவியுடன் அறியலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் நிலைகளைக் கொண்டு தான் ஒருவரது வாழ்க்கையில் நடக்கவுள்ள விஷயங்கள் கணிக்கப்படுகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்துடன் வெற்றியும் கிடைக்கும். தொழில் வாழ்க்கை மிகவும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் பல காரியங்களில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சனி மற்றும் குருவின் அருளால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் வாகனம், வீடு போன்றவற்றை வாங்கலாம். நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றியுடன் லாபமும் கிடைக்கும் வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தக்கூடும். முக்கியமாக இந்த ஆண்டில் நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, அந்த பணத்தை சேமிக்கவும் முடியும். பணிபுரிபவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வாகனம் மற்றும் சொத்து வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதில் இந்த ஆண்டில் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த ஆண்டில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்ய நினைப்போரின் கனவுகள் நனவாகலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பயணங்களை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணங்களும் நல்ல பண ஆதாயத்தைத் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications