Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Year Ender 2025: இந்த ஆண்டில் வைரலான சில உணவு தந்திரங்கள் - இவற்றில் உங்களை கவர்ந்தது எது?
Year Ender 2025: நாம் தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டில் பல்வேறு விஷயங்கள் வைரலாகியுள்ளன. குறிப்பாக சமூக வலைத்தளத்தில் மக்கள் பலர் தங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்து மிகவும் பிரபலமாகியுள்ளன.
குறிப்பாக இணையத்தில் சில சமையல் தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகியுள்ளன. அதுவும் மக்கள் பலர் தொடர்ந்து தினசரி சமையலை எளிதாகவும், வேகமாகவும் முடிக்கும் வகையிலான சில சுவாரஸ்யமான, வேடிக்கையான தந்திரங்களை பகிர்ந்து கொண்டனர்.

இப்படியான தந்திரங்களுள் சில ஆச்சரியப்படுத்தும் வகையில், நாம் இதுவரை முயற்சித்திராத வகையில் இருந்தன என்றே கூறலாம். அவற்றுள் சில பலரும் ஏற்றுக் கொண்டு தினசரி பின்பற்றும் வகையிலும் மாறியுள்ளன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் உலகளவில் மிகவும் வைரலான சில உணவு தந்திரங்கள் எவையென்பதைக் காண்போம். இவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. பூரி ட்ரிக்ஸ்
பொதுவாக பூரி சுடும் போது எண்ணெய் அதிகம் உறிஞ்சும் பிரச்சனையை பலர் எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால் இன்ஸ்டாவில் வைரலான வீடியோ ஒன்றில் பூரிகள் பொரிப்பதற்கு முன் சூடான எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் இரண்டு டூத்பிக்களைச் சேர்க்கும் போது, பூரி மொறுமொறுவென்று இருப்பதோடு, குறைந்த எண்ணெயை உறிஞ்சுவதாக கூறப்பட்டது. பல பார்வையாளர்கள் இந்த ஹேக்கை முயற்சிப்பது மதிப்புக்குரியது என்று கூறினர். நீங்களும் இந்த ட்ரிக்கை முயற்சித்திருக்கிறீர்களா?
2. நீண்ட நேரம் சூடான பராத்தா
கனடாவில் உள்ள ஒரு தாய்மார் சமைத்த சூடான பராத்தாக்களை ஒரு அலுமினிய தாளில் வைத்து மடித்து, அதை ஒரு தெர்மோஸ் பிளாஸ்கில் வைத்து, -14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் வைத்திருந்தும், பராத்தாக்கள் சூடாக இருந்ததால் வைரலானார். குறிப்பாக குளிர்காலத்தில் குளிர்ந்த, வறண்ட தட்டையான ரொட்டிகளுடன் போராடுபவர்கள் இந்த யோசனையை உடனடியாக பின்பற்ற தொடங்கியுள்ளனர். கடுமையான வானிலை அல்லது நீண்ட பயணங்களின் போது பலருக்கு உணவை மென்மையாக வைத்திருக்க நிச்சயம் இந்த எளிய முறை உதவும். நீங்கள் இதை மிஸ் செய்திருந்தால், உடனே ட்ரை செய்து பாருங்கள்.
3. முட்டையின் தோலுரிக்கும் தந்திரம்
வேக வைத்த முட்டையின் தோலுரிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சலாவான ஒன்று. ஆனால் இந்த ஆண்டில் வைரலான வீடியோ ஒன்றில் முட்டைகளை வேக வைக்கும் போது, அந்த நீரில் பாதி எலுமிச்சை துண்டு சேர்த்து வேக வைத்து இறக்கி, பின் குளிர்ந்த நீரில் குளிர வைத்த பின் தோலுரிக்கும் போது எளிதில் முட்டை ஓடுகள் உரிக்க வந்தது. இந்த யோசனையை பலரும் பாராட்டினர் மற்றும் அதை முயற்சித்தும் பார்த்துள்ளனர். நீங்கள் இதுவரை இந்த தந்திரத்தை முயற்சித்ததில்லை என்றால், அடுத்த முறை முட்டையை வேக வைக்கும் போது, ட்ரை செய்து பாருங்கள்.
4. அன்னாசிப்பழ ஹேக்
நடிகை நௌஹீத் சைரஸி தனது இன்ஸ்டா பக்கத்தில் நல்ல இனிப்பான அன்னாசிப்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த ஹேர் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் நௌஹீத் கூறியதாவது, அன்னாசிப்பழம் நன்கு இனிப்பாக இருந்தால், அதன் மேல் பகுதிகளில் உள்ள இலையை கையில் லேசாக இழுத்தாலே எளிதில் வந்து விடும். அதுவே கனிந்திருந்து இனிப்பாக இல்லாவிட்டால், அதன் மேல் இலை எளிதில் வராது. இந்த ட்ரிக்ஸ்-ம் பல பார்வையாளர்களால் பாராட்டப்பட்டதோடு, வரவேற்கப்பட்டது.
5. டார்ட்டில்லாவில் சமோசா
ஒரு பஞ்சாபி அம்மா, சமோசா செய்ய பாரம்பரிய மாவு கிடைக்காததால், சமோசா மேல் மாவிற்கு டார்ட்டில்லாக்களை பயன்படுத்தி சமோசா செய்துள்ள வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அந்த அவர் டார்ட்டில்லாக்களை லேசாக சூடேற்றி, இரண்டாக வெட்டி, கூம்பு வடிவத்தில் செய்து, முனைகளை மாவு பேஸ்ட் கொண்டு ஒட்டி, உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மடித்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தார். உணவுப் பிரியர்கள் இந்த புத்திசாலித்தனமான யோசனையை விரும்பினர்.



Click it and Unblock the Notifications