Year Ender 2025: 2025-ல் கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்!

Year Ender 2025: நாம் தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த மாதத்தில் இதுவரை 2025 ஆம் ஆண்டில் நடந்த பல விஷயங்கள் நினைவுகூறப்படும். அதுவும் கூகுளானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த பட்டியலை வெளியிடுவதுண்டு.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் கூகுளில் மக்கள் பல்வேறு ரெசிபிக்களை தேடியுள்ளனர். குறிப்பாக இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மற்றும் அதிக ட்ரெண்டில் இருந்த டாப் 10 உணவுகளின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற உணவுகளை நீங்களும் 2025-ல் கூகுளில் தேடியுள்ளீர்களா என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Year Ender 2025 Top 10 Most Searched Recipes In India In 2025 According To Google

1. இட்லி

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் முதன்மையானது தான் இட்லி. இந்த இட்லி தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். பொதுவாக இந்த இட்லி அரிசி மற்றும் உளுத்தம் மாவு கொண்டு தயாரிக்கக்கூடியது. இது மிகவும் மென்மையாக, பஞ்சு போன்று இருக்கும். இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

2. போர்ன்ஸ்டார் மார்டினி

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது உணவு தான் போர்ன்ஸ்டார் மார்டினி. இது ஒரு பழ காக்டெய்ல். இது 2000-களின் முற்பகுதியில் பிரபலமடைந்தது. இது வோட்கா, பேஷன் ஃபுரூட், எலுமிச்சை சாறு, சிம்பிள் சிரப் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையில் இருக்கும் பானம். மேலும் இது ஸ்பார்க்லிங் ஒயின் அல்லது ப்ரோசெக்கோவுடனும் பரிமாறப்படுகிறது.

3. மோதகம்

2025-ல் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடிப்பட்ட மூன்றாவது உணவு தான் மோதகம். இந்த மோதகமானது ஒரு பாரம்பரிய இனிப்பு பலகாரமாகும். இது மகாராஷ்டிரா, கோவா மற்றும் தென்னிந்தியாவில் பிரபலமானது. இந்த மோதகம் வெல்லம் தேங்காய் பூர்ணம் உள்ளே வைக்கப்பட்டு அரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்த மோதகம் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு படைக்க தயாரிக்கப்படும் இனிப்பாகும்.

4. தேகுவா

2025 ஆம் ஆண்டில் கூகுளில் 4 ஆவதாக அதிகம் தேடப்பட்ட உணவு தான் தேகுவா. இது பீகார், ஜார்கண்ட் மற்றும் கிழக்கு உத்திர பிரதேச பகுதிகளில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பாகும். இது வட இந்தியாவில் சத் பூஜையின் போது தயாரிக்கப்படுகிறது. அதுவும் இது கோதுமை மாவு, வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பிஸ்கட் போன்றது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் நீண்ட நாள் வைத்து சாப்பிட ஏற்றது.

5. உகாதி பச்சடி

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5 ஆவது உணவு தான் உகாதி பச்சடி. இது ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பிரபலமானது. பெரும்பாலும் இது தெலுங்கு புத்தாண்டாக உகாதி நாளில் தயாரிக்கப்படுகிறது. இது அறுசுவை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய ஒரு பச்சடி. ஒவ்வொரு சுவையும் வெவ்வேறு உணர்ச்சிகளையும், வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும் குறிக்கும்.

6. பீட்ரூட் கஞ்சி

2025-ல் கூகுளில் 6 ஆவதாக அதிகம் தேடப்பட்ட உணவு தான் பீட்ரூட் கஞ்சி. இது பீட்ரூட் கடுகு, கருப்பு கேரட், உப்பு மற்றும் நீர் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய வட இந்திய பானமாகும். இது புளிப்பு, காரம் கலந்த சுவையைக் கொண்டது. புரோபயோடிக் அதிகம் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பானமாகும். இந்த கஞ்சி பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளில் குளிர்காலங்களில் தயாரித்து உட்கொள்ளப்படும். ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

7. திருவாதிரை களி

2025 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 7 ஆவது உணவு தான் திருவாதிரை களி. இது தமிழ்நாட்டில் திருவாதிரை பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது. இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பாகும்.

8. யார்க்ஷயர் புட்டிங்

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 8 ஆவது உணவு தான் யார்க்ஷயர் புட்டிங். இது ஒரு பிரிட்டிஷ் உணவாகும். இது முட்டை, மைதா, பால் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பப்ஸ் போன்றது. இது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீடுகளில் அதிகம் தயாரிக்கப்படுவதால், இதன் தேடல் அதிகரித்துள்ளது.

9. கோண்ட் கதிரா

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 9 ஆவது உணவு தான் கோண்ட் கதிரா. இது வடஇந்தியாவில் கோடைக்காலங்களில் உடலை குளிர்விக்க உட்கொள்ளப்படும் ஒரு பானமாகும். ஆயுர்வேதத்தின் படி இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே கோடைக்காலங்களில் இதன் தேடல் கூகுளில் அதிகரித்துள்ளது.

10. கொழுக்கட்டை

கடைசியாக 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 ஆவது உணவு தான் கொழுக்கட்டை. இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு பலகாரமாகும். இது ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட்டாகும். இது விநாயகர் சதுர்த்தி நாளில் செய்யக்கூடிய முக்கியமான இனிப்பாகும். ஏனெனில் இது விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, December 12, 2025, 16:55 [IST]
Desktop Bottom Promotion