Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
2025-ல் Google-ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள்...லிஸ்டில் உள்ள ஒரே தமிழ்ப்படம் என்ன தெரியுமா?
Year Ender 2025: 2025 ஆம் ஆண்டு கிட்டதட்ட முடிவுக்கு வந்து விட்டது. இந்த வருடம் இந்தியாவுக்கு பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வருடமாக இருந்தது. இந்தியர்களின் முதன்மையான பொழுதுபோக்கு எதுவென்றால் பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் என்றுதான் கூறுவார்கள். ஆனால் உண்மையில் இந்தியர்களின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு என்றால் அது சினிமாதான்.
இந்தியர்களையும், சினிமாவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. பெரும்பாலான இந்தியர்கள் தினமும் குறைந்தது ஒரு முறையாவது சினிமாவைப் பற்றி பேசிவிடுவார்கள், அந்த அளவுக்கு சினிமா நம் வாழ்க்கையுடன் கலந்துள்ளது. 2025-ல் இந்திய சினிமாவில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்தன, அதில் சில படங்கள் மட்டுமே மக்களின் மனதை வென்றன.

சில திரைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மக்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் பற்றி தேடுவதற்காக கூகிளில் குவிந்தனர். இது மக்களின் இதயங்களைக் கவர்ந்த, விவாதங்களைத் தூண்டிய மற்றும் புதிய போக்குகளை உருவாக்கிய திரைப்படங்களின் பட்டியலை உருவாக்க வழிவகுத்தது. இந்த பதிவில் 2025 ஆம் ஆண்டில் மக்களின் மனம் கவர்ந்து Google-ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
சையாரா
2025-ல் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு திரைப்படமென்றால் அது சையரா, அதனால்தான் 2025-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் இது முதலிடத்தில் உள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாத இந்த காதல் திரைப்படத்தில் அஹான் பாண்டே, அனீத் பத்தாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். திருமண நாளன்று கைவிடப்பட்ட ஒரு கவிஞருக்கும், வளரும் இசைக்கலைஞர் ஒருவருக்கும் இடையே மலரும் காதல், கதாநாயகிக்கு அல்சைமர் நோய் ஏற்படுவதால் ஒரு உணர்ச்சிகரமான திருப்பத்தை சந்திக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருந்தது. பாண்டே மற்றும் பத்தாவின் சிறப்பான நடிப்பும், மனதை வருடும் இசையும் இணைந்து, சையாராவை ஒரு விரும்பப்படும் கிளாசிக் திரைப்படமாக மாற்றியுள்ளது.
காந்தாரா: எ லெஜண்ட் சேப்டர் 1
2022 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற கன்னட திரைப்படமான காந்தாராவின் முன்கதையாக வெளியான இந்த திரைப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. திரையரங்குகளில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'காந்தாரா: எ லெஜண்ட் சேப்டர் 1' திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மிணி வசந்த் மற்றும் குல்ஷன் தேவையா போன்றோர் நடித்திருந்தனர். இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த தமிழ் திரைப்படமான கூலி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாகார்ஜுனா, அமீர் கான் போன்றோர் நடைதிருந்ததால் இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திரைப்படம் ரிலீசான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியாக இது வெற்றிப்படமாகவே அமைந்தது.
வார் 2
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, 'வார் 2' திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் ரா ஏஜென்ட்டாக நடித்திருந்தார். இது துரோகம், தொழில்நுட்பம் மற்றும் அதிரடி சண்டைகாட்சிகள் நிறைந்த ஒரு பரபரப்பான உளவுத் திரைப்படமாக இருந்தது. கியாரா அத்வானி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும், பெரிய நட்சத்திரங்கள் நடித்தும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சுமாரான தாக்கத்தையே ஏற்படுத்தியது.
சனம் தேரி கசம்
2025-ல் Google-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில், 2016-ஆம் ஆண்டு வெளியான 'சனம் தேரி கசம்' என்ற திரைப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் மாவ்ரா ஹோகேன் நடித்த இந்த திரைப்படம், 2025 பிப்ரவரியில் மீண்டும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் பிரபலமானது. இதன் மூலம், இந்த ஆண்டின் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இது ஒரு எதிர்பாராத, ஆனால் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
மார்கோ
உன்னி முகுந்தன், ஜகதீஷ் மற்றும் கபீர் துஹான் சிங் ஆகியோர் நடித்த வெளிவந்த விறுவிறுப்பான மலையாளத் திரைப்படம்தான் மார்கோ. டிசம்பர் 2024-ல் வெளியான இந்தப் படம், தனது நெருங்கிய நண்பரின் கொலைக்குப் பழிவாங்கத் துடிக்கும் ஒரு டானின் கதையாக இது இருந்தது. இதுவரை வெளிவந்த மலையாள திரைப்படங்களிலேயே மிகவும் வன்முறையான படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவுஸ்புல் 5
ஹவுஸ்புல் சீரிஸ் திரைப்படங்களின் 5 வது பாகமாக வெளிவந்த இது 2025-ல் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. வெற்றிகரமான நகைச்சுவை படமான இது பார்வையாளர்களுக்கு இடைவிடாத சிரிப்பை வழங்கியது.
கேம் சேஞ்சர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த அரசியல் திரில்லர் திரைப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ரிலீஸான இந்த திரைப்படம் சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் தோல்விப் படமாக மாறியது.
Mrs
மலையாள சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற "The Great Indian Kitchen" திரைப்படத்தின் ரீமேக்காக வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் இணையத்தில் பெரும் வாக்குவாதத்தைத் தூண்டியது. அதனால்தான் இந்த சின்ன பட்ஜெட் படம் 2025-ல் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது.
மகாவதார் நரசிம்மா
அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம், ஹிரண்யகசிபு என்ற அரக்கன், விஷ்ணுபகவானுடன் போட்டி போட்டு, தன்னை ஒரு கடவுள் என்று பிரகடனப்படுத்தும் புராண நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் தரமும், அனிமேஷனும் உலகத்தரத்திற்கு இருந்தது.



Click it and Unblock the Notifications












