Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Year-Ender 2024: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ரெசிபிக்கள் என்னென்ன தெரியுமா?
Most Searched Recipes In Google 2024: நம் கையில் உள்ள மொபைல் போன் பேசுவதற்கு மட்டுமின்றி, நமக்கு தெரியாத ரெசிபிக்களையும் எளிதில் சமைக்க உதவுகிறது. முன்பெல்லாம் சமையல் புத்தகத்தைக் கொண்டு படித்து பார்த்து சமைத்து வந்தார்கள். ஆனால் தற்போது என்ன சமையல் வேண்டுமோ, அதை கூகுளில் தேடினால், அந்த கூகுளே அந்த ரெசிபியை எப்படி செய்வது மற்றும் அதன் வரலாறு முழுவதையும் சொல்லிவிடும்.
அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டில் கூகுளில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ரெசிபிக்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இப்போது அந்த ரெசிபிக்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. போர்ன்ஸ்டார் மார்ட்னி
போர்ன்ஸ்டார் மார்ட்னி கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட காக்டெயில் பானமாகும். இது வோட்கா, பாஸோ, பேஷன் ஃபுரூட் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பேஷன் ஃபுரூட் சுவை கொண்ட காக்டெய்ல் பானமாகும். இந்த பானத்தை நிறைய பேர் தங்களின் வீடுகளில் செய்து பார்க்க கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
2. மாங்காய் ஊறுகாய்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் மாங்காய் ஊறுகாய். கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், மக்கள் நிறைய பேர் அந்த மாங்காயைக் கொண்டு வீட்டில் ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ள நினைப்பார்கள். மசாலாப்பொருட்கள், உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றால் இந்த மாங்காயை ஊற வைத்து ஒருமுறை செய்தால், மாதக்கணக்கில் வீட்டில் பயன்படுத்தலாம். இந்த மாங்காய் ஊறுகாயையும் 2024 ஆம் ஆண்டில் மக்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
3. இமா தட்ஷி
இமா தட்ஷி பூட்டானின் முக்கிய உணவாகும். இது ஒரு தேசிய உணவாகவும கருதப்படுகிறது. பச்சை மிளகாய் மற்றும் சீஸ் கொண்டு தயாரிக்கப்படும் இமா தட்ஷி, மிகவும் காரமாக இருக்கும். ஆனால் பார்த்தால், அதன் காரம் தெரியாது. இந்த இமா தட்ஷி ரெசிபியையும் மக்கள் அதிகமாக கூகுளில் தேடியுள்ளனர்.
4. பிளாட் ஒயிட்
பிளாட் ஒயிட் என்பது ஒரு எஸ்பிரெசோ பானமாகும். இது எஸ்பிரெசோ மற்றும் கொதிக்க வைத்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். மார்ச் 2024-ல் கூகுள் டூடுல் இந்த பானத்தை பாராட்டியது. அதன் பின் இந்த பிளாட் ஒயிட் பானம் வைரலாகி, மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டது.
5. உகாதி பச்சடி
உகாதி பச்சரி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவாகும். முக்கியமாக இந்த உகாதி பச்சடி உகாதி பண்டிகையின் போது புளி, மாங்காய், வெல்லம் மற்றும் வேப்பம்பூ சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த பச்சடியில் ஆறு சுவையும் கலந்திருப்பது தான் இதன் ஸ்பெஷலே. இந்த உகாதி பச்சடியையும் மக்கள் 2024-ல் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
6. தன்யா பஞ்சிரி
தன்யா பஞ்சிரி என்பது கிருஷ்ணரின் மிகவும் விருப்பமான உணவாகும். இந்த தன்யா பஞ்சிரி ரெசிபியானது கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்யப்பட்டு, கிருஷ்ணருக்கு படைத்து வழிபடப்படுகிறது. இந்த தன்யா பஞ்சிரி இனிப்புச் சுவையுடன் பிரமாதமாக இருக்கும்.
7. சங்கர்பாலி
சங்கர்பாலி என்பது ஒரு எளிமையான மற்றும் சிம்பிளான மைதாவால் செய்யப்படும் ஒரு இனிப்பு குக்கீஸ் ஆகும். இந்த சங்கர்பாலி வடஇந்தியாவில் தீபாவளி அல்லது ஹோலி பண்டிகைகளின் போது வீட்டில் செய்யப்படுவதுண்டு. இந்த மைதா குக்கீஸை தான் 2024-ல் மக்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
8. சர்ணாமித்
சர்ணாமித் என்பது பால், தயிர், துளசி இலைகள், தேன் மற்றும் கங்கை நீர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பான பானமாகும். இது பொதுவாக குரு பூர்ணிமா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி நாட்களில் வடஇந்தியாவில் தயாரிக்கப்படும் பானமாகும்.
9. கஞ்சி
கஞ்சி என்பது கேரட், பீட்ரூட், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் பழைய சோறு நீர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு புரோபயோடிக் பானமாகும். இது வடஇந்தியாவில் ஹோலி பண்டிகையின் போது தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய பானமாகும். 2024-ல் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ரெசிபிக்களுள் இதுவும் ஒன்றாகும்.
10. சம்மந்தி
சம்மந்தி என்பது துவையல். இந்த துவையலைத் தான் கேரளாவில் சம்மந்தி என்று அழைப்பர். இது தேங்காய், புளி, இஞ்சி, வெங்காயம், வரமிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சம்மந்தி சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த சம்மந்தியையும் 2024-ல் மக்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.



Click it and Unblock the Notifications