Year Ender 2024: 2024-ன் டாப் 10 கோடீஸ்வரர்கள்...முகேஷ் அம்பானியும், அதானியும் இவ்வளவு பின்னாடி போய்ட்டாங்களா?

Top 10 Billionaires In the World 2024: 2024 ஆம் ஆண்டின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி எலோன் மஸ்க் 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தாண்டி, உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உருவெடுத்துள்ளார். உலக வரலாற்றில் அதிகாரபூர்வமாக இவ்வளவு சொத்து மதிப்பைத் தாண்டி சாதனை படைத்துள்ளார் எலோன் மஸ்க்.

இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவின் இருபெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி இருவரும் டாப் 10 பட்டியலில் இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக டாப் 20-ல் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த பதிவில் 2024-ன் டாப் 10 பணக்காரர்கள் யார், மற்றும் முகேஷ் அம்பானியும், அதானியும் எத்தனாவது இடத்தில் உள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

Year Ender 2024 Top 10 Billionaires In the World 2024 in Tamil

எலோன் மஸ்க் ($486B)

எலோன் மஸ்க் 2024 ஆம் ஆண்டின் நம்பர் ஒன் பணக்காரராக மாறியுள்ளார். அவரது நிகர மதிப்பு $486 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது அவரது முதலிடத்தை உறுதிப்படுத்துகிறது. எலோன் மஸ்க்கின் அளவிலா செல்வம் முக்கியமாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடமிருந்து வருகிறது. டெஸ்லா மின்சார வாகனங்கள் விற்பனையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பயணத்தை மாற்றியமைத்து, அபரிமிதமான வருவாயை ஈட்டியுள்ளது. மஸ்க்கின் சொத்து இந்த ஆண்டு மட்டும் $257 பில்லியன் அதிகரித்துள்ளது.

ஜெஃப் பெசோஸ் ($250B)

உலகின் இரண்டாவது பணக்காரர் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $250 பில்லியனாக உள்ளது. உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான அமேசானை பெசோஸ் நிறுவினார். அவரது தலைமையின் கீழ், அமேசான் கிளவுட் கம்ப்யூட்டிங், பொழுதுபோக்கு மற்றும் AI ஆகியவற்றில் விரிவடைந்தது. பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய போதிலும், அவர் நிறுவனத்தின் செயல் தலைவராக நீடிக்கிறார். சமீபத்தில் அவரது சொத்து மதிப்பில் சிறிது சரிவு இருந்தபோதிலும், பெசோஸ் இந்த ஆண்டு $72.9 பில்லியன் சம்பாதித்துள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க் ($219B)

மெட்டா அல்லது பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 219 பில்லியன் டாலர்களாக உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மெட்டா உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர் சமீபத்தில் 1.65 பில்லியன் டாலர்களை இழந்தாலும், ஜுக்கர்பெர்க்கின் சொத்து இந்த ஆண்டு $90.9 பில்லியன் அதிகரித்துள்ளது.

லாரி எலிசன் ($193B)

Oracle நிறுவனர் லாரி எலிசன், உலக அளவில் நான்காவது பணக்காரராக உருவெடுத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 193 பில்லியன் டாலர்களாக உள்ளது. Oracle கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டாபேஸ் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி மென்பொருள் நிறுவனமாகும். எலிசனின் சொத்து இந்த ஆண்டு $70.4 பில்லியன் அதிகரித்துள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட் ($179B)

பெர்னார்ட் அர்னால்ட் ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 179 பில்லியன் டாலர்களாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH நிறுவனத்தை அர்னால்ட் வழிநடத்துகிறார். இந்த ஆண்டு அவரது சொத்து $28.5 பில்லியன் குறைந்தாலும், ஃபேஷன் மற்றும் நுகர்வோர் தொழில்களில் அவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நபராக இருக்கிறார்.

லாரி பேஜ் ($174B)

கூகுளின் இணை நிறுவனரான லாரி பேஜ், உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 174 பில்லியன் டாலர்களாக உள்ளது.லாரி பேஜ் 1998 இல் கூகிளை அவரது நண்பருடன் இணைந்து உருவாக்கினார், அது பின்னர் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc ஆக மாறியது. AI, Search Engine மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களில் ஆல்பபெட் முன்னணியில் உள்ளது. 2024-ல் அவரது சொத்து இந்த ஆண்டு $47.4 பில்லியன் அதிகரித்துள்ளது.

பில் கேட்ஸ் ($165B)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $165 பில்லியன் ஆகும். அவர் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முக்கிய முதலீட்டாளராக இருக்கிறார். தொழில்நுட்ப சந்தையில் கடுமையான போட்டி இருந்தபோதிலும், கேட்ஸின் செல்வம் இந்த ஆண்டு $24.1 பில்லியன் அதிகரித்துள்ளது.

செர்ஜி பிரின் ($164B)

கூகுளின் இணை நிறுவனரான செர்ஜி பிரின் எட்டாவது பணக்காரர் இருக்கிறார், இவரது சொத்து மதிப்பு 164 பில்லியன் டாலர்களாகும். பிரின் கூகிளின் Search Engine-யை உருவாக்க உதவினார், பின்னர் AI மற்றும் பிற தொழில்நுட்பங்களுக்கு விரிவுபடுத்தினார். அவரது சொத்து இந்த ஆண்டு $43.5 பில்லியன் அதிகரித்துள்ளது,

ஸ்டீவ் பால்மர் ($157B)

மைக்ரோசாப்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 157 பில்லியன் டாலர்களாக உள்ளது. மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகளில் கவனம் செலுத்தி, பால்மர் மைக்ரோசாப்டை சிறப்பாக வழிநடத்தினார். ஓய்வு பெற்ற பிறகு, அவர் LA கிளிப்பர்ஸ் என்ற NBA அணியை வாங்கினார். 2024-ல் அவரது சொத்து மதிப்பு $26.4 பில்லியன் அதிகரித்துள்ளது.

வாரன் பஃபெட் ($143B)

உலகப்புகழ் பெற்ற வாரன் பஃபெட் பத்தாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 143 பில்லியன் டாலர்களாக உள்ளது. பஃபெட்டின் முதலீடுகள் காப்பீடு, இரயில் பாதைகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட தொழில்களில் பரவியுள்ளன. இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு $23 பில்லியன் அதிகரித்துள்ளது.

இந்திய கோடீஸ்வரர்கள்

இந்தியாவின் இருபெரும் செல்வந்தர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி டாப் 20-ல் இடம் பிடித்துள்ளனர். 95 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி 17 வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல 80 பில்லியன் சொத்துக்களுடன் கௌதம் அதானி 19 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Story first published: Thursday, December 19, 2024, 12:00 [IST]
Desktop Bottom Promotion