Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2024-ல் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா? இது 83 மில்லியன் ஆர்டர் செய்யப்பட்டிருக்காம்
Year Ender 2024: ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள், ஆண்டின் இறுதியில் அந்த ஆண்டில் அவர்களது நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் மிகவும் பிரபலமான உணவு நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தில் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தற்போது வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களை விட, ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் பிரபலமான ஸ்விக்கி நிறுவனம் ஜனவரி 01 , 2024 முதல் நவம்பர் 22, 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை பட்டியலிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டில் இந்திய மக்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் முதன்மையாக பிரியாணி உள்ளது. அதுவும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் நிமிடத்திற்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. இந்த பிரியாணிக்கு அடுத்தப்படியாக ஸ்விக்கியில் 23 மில்லியன் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
சிக்கன் பிரியாணி பர்ஸ்ட்
அறிக்கையின் படி, இந்த ஆண்டில் பிரியாணியில் சிக்கன் பிரியாணி தான் பெரும்பாலானோரால் விரும்பி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்கன் பிரியாணியை மட்டும் சுமார் 49 மில்லியர் பேர் ஆர்டர் செய்துள்ளனர். அதுவும் தென்னிந்தியாவில் தான் அதிகமானோர் ஆர்டர் செய்துள்ளனர். குறிப்பாக பிரியாணிக்கு பிரபலமான ஹைதராபாத்தில் தான் 9.7 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் பெங்களூருவில் 7.7 மில்லியனும், சென்னையில் 4.6 மில்லியனும் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
டாப் மிட்நைட் உணவு
ஸ்விக்கியின் கூற்றுப்படி, நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யும் இரண்டாவது உணவு பிரியாணி ஆகும். முதல் இடத்தில் இருப்பது சிக்கன் பர்கர் ஆகும். மேலும் இந்த ஆண்டின் ரம்ஜான் பண்டிகையின் போது சுமார் 6 மில்லியன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்விக்கி தெரிவித்தது. அதுவும் ஹைதராபாத் நகரத்தில் தான் அதிகமாக பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி தெரிவித்தது.
பட்டியலில் உள்ள பிற உணவுகள்
பிரியாணிக்கு அடுத்தப்படியாக 2024 ஆம் ஆண்டு 23 மில்லியன் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டன. அதில் காலை உணவிற்காக மக்கள் 8.5 மில்லியன் தோசையும், 7.8 மில்லியன் இட்லியும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவில் தான் அதிகமாக தோசை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் சோலா பூரியும், சண்டிகர், கொல்கத்தாவில் முறையே ஆலு பராத்தா, கச்சோரியும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அதிக ஆர்டர் செய்தவர்
ஸ்விக்கி நிறுவனம் முக்கியமான ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. அது 2024 ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேந்த ஒருவர் சுமார் ரூ.49, 900 ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் 5 ஆல்ஃபிரடோ உணவுகள், 40 மேக் மற்றும் சீஸ், 30 ஸ்பாகத்தி ஆர்டர் செய்துள்ளார். முக்கியாமக இரவு நேரத்தில் தான் அதிகபட்ச உணவுகள் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் என்றால் அது சிக்கன் ரோல் ஆகும். இது சுமார 24.8 லட்சம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 16.3 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் மோமோஸ் மற்றும் 13 லட்சம் பிரெஞ்சு பிரைஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications