Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Year Ender 2024: YouTube-ல் இந்தியர்கள் 2024-ல் அதிகம் பார்த்த வீடியோக்கள் என்னென்ன தெரியுமா?
Year Ender 2024: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே YouTube இப்போது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்டது. அதனால் YouTube-ல் வீடியோ பதிவிடுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு முடிவடையப் போகும் இந்த தருணத்தில் YouTube இந்திய பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்த மிகவும் பிரபலமான வீடியோக்கள், படைப்பாளிகள் மற்றும் ட்ரெண்டுகளின் பட்டியலைப் வெளியிட்டுள்ளது. தேசத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் பிரமாண்டமான நிகழ்வுகள், வைரல் போக்குகள் மற்றும் ஆக்கப்பூர்வமான வீடியோக்களின் கலவையாக இந்த பட்டியல் உள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து கலாச்சார நிகழ்வுகள் வரை, YouTube-ல் பல வீடியோக்கள் இந்த வருடம் பில்லியன் கணக்கான Viewsகளை குவித்துள்ளது. இந்த பதிவில் இந்தியர்கள் 2024-ல் அதிகம் பார்த்த YouTube வீடியோக்கள் என்னென்ன மற்றும் ஆர்டிஸ்ட்கள் யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அம்பானி திருமணம்
"அம்பானி" மற்றும் "திருமணம்" என்று குறிப்பிடப்பட்ட வீடியோக்கள் 2024 முழுவதும் 6.5 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், இந்த ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்வாக முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இருந்தது. ஆடம்பரமான கொண்டாட்டமும் அதன் பிரமிக்க வைக்கும் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன, இது 2024 இன் மிகப்பெரிய டிஜிட்டல் தருணங்களில் ஒன்றாக உள்ளது.
Moye Moye
"Moye Moye" என்ற விளையாட்டுத்தனமான வார்த்தை 4.5 பில்லியன் Views-யை கடந்து, மிகப்பெரிய இணைய சென்சேஷனாக மாறியது. இந்த நகைச்சுவையான ட்ரெண்ட் ஆன்லைன் உரையாடல்களின் வேடிக்கையான மற்றும் இலகுவான பகுதியாக மாறியது. மக்களின் இதயங்களை வெல்ல எளிமையான சிந்தனையே போதும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
கிரிக்கெட்
உலகிலேயே இந்தியாவில் கிரிக்கெட் ரசிக்கப்படுவதை போல வேறெந்த நாட்டிலும் கொண்டாடப்படுவதில்லை. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போன்ற நிகழ்வுகளுக்கு பில்லியன் கணக்கான Views-களைப் பெற்றதன் மூலம், YouTube-ல் கிரிக்கெட் இந்தியாவின் முக்கிய ஆர்வமாக இருந்தது. போட்டியின் சிறப்பம்சங்கள், திரைக்குப் பின்னால் உள்ள தருணங்கள் மற்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்ட வீடியோக்கள் ரசிகர்களை ஆண்டு முழுவதும் ஈடுபாட்டுடன் வைத்திருந்தது.
தில்ஜித் தோசன்ஜ்
தென்னிந்தியாவில் இந்த பெயர் அவ்வளவு பிரபலமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வடஇந்தியாவில் இந்த பெயருக்கென்று பெரிய ரசிக பட்டாளமே உள்ளது. பஞ்சாபி சூப்பர் ஸ்டார் தில்ஜித் தோசன்ஜ் பற்றிய வீடியோக்கள் கிட்டத்தட்ட 4 பில்லியன் பார்வைகளை ஈர்த்தது, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே அவர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை நிரூபிக்கிறது.
இந்திய யூடியூபர்கள்
இந்திய யூடியூபர்களில் பலர் 2024 இல் புதிய உயரங்களை அடைந்தனர். சுஜல் தக்ரால் 33.5 மில்லியன் Subscriber-களைப் பெற்றார், மேலும் Filmy Suraj Actor 32.5 மில்லியன் Subscriber-களைப் பெற்றார். மராத்தி மற்றும் கர்வாலி போன்ற பிராந்திய மொழிகளில் உள்ள வீடியோக்கள், உள்ளூர் கதைகளின் வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேசப் பாராட்டைப் பெற்றது.
இசை வீடியோக்கள்
மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படத்தில் வந்த "குர்ச்சி மடத்தப்பெட்டி" பாடலும் "ஆஜ் கி ராத்" போன்ற பாடலும் பெரும்பாலான மக்களின் விருப்பமான பாடல்களாக இருந்தது. யூடியூப் ஷார்ட்ஸில், "Dhana" போன்ற பாடல்களின் வெற்றிகள் வித்தியாசமான ரீமிக்ஸ்கள் மற்றும் நடனப் போக்குகளை ஊக்குவித்து, இந்த ஆண்டின் மறக்க முடியாத வெற்றி பாடல்களாக மாறியது.



Click it and Unblock the Notifications












